என் மலர்

  நீங்கள் தேடியது "Uttarpradesh"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த ரெயில்வே போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  மதுரா:

  உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா நகரைச் சேர்ந்த சிறுவர்கள் கௌரவ் குமார் (14) மற்றும் கபில் குமார் (14). 10-ம் வகுப்பு படித்து வந்த இருவரும் நண்பர்கள். இவர்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளப்போவதாக வீட்டில் கூறிவிட்டு செல்போன்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

  அப்போது, லட்சுமி நகர் பகுதியில் உள்ள மதுரா - காஸ்கஞ்ச் ஒற்றை தண்டவாளப்பாதை வழியே இருவரும் பப்ஜி விளையாடிக் கொண்டே சென்றதாக தெரிகிறது.

  அப்போது, எதிரே வந்த சரக்கு ரெயில் இருவர் மீதும் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த ரெயில்வே போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஜமுனாபர் காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஷஷி பிரகாஷ் கூறியதாவது:

  மதுராச- காஸ்கஞ்ச் ஒற்றை தண்டவாளப் பாதை அருகே உடல்கள் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்ததில் சிறுவர்கள் உயிரிழந்துக் கிடந்தது தெரியவந்தது.

  மேலும், உடல் அருகே பயன்பாட்டில் உள்ள நிலையில் செல்போன் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அதில், பப்ஜி விளையாட்டு ஓடிக்கொண்டிருந்தது.
  சிறுவர்கள் இருவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ளப்போவதாக சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.

  இந்நிலையில், ரெயில் வருவது கூட தெரியாமல், பப்ஜி விளையாட்டில் மூழ்கி ரெயில் மோதி இறந்துள்ளனர்.

  சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும் என்று ஸ்ரீகேஷின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
  உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகேஷ் குமார் (40). எலக்ட்ரீஷியனாக பணிப்புரிந்த இவர், கடந்த வியாழக்கிழமை எதிரே வேகமாக வந்த மோட்டார் பைக் மோதி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஸ்ரீகேஷ் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

  இந்த சம்பவம் குறித்து ஸ்ரீகேஷின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு வந்து அடையாளம் காட்டும்வரை வரை ஸ்ரீகேஷின் உடல் பிணவறையில் உள்ள ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டது. பின்னர், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  சுமார் ஏழு மணி நேரத்திற்கு பிறகு, மருத்துவமனைக்கு வந்து உடலை அடையாளம் கண்ட ஸ்ரீகேஷின் மைத்துனி மதுபாலா மற்றும் குடும்பத்தினர், பிரேதப் பரிசோதனைக்கு சம்மதித்து ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.  இந்த ஆவணத்தை போலீசார் சமர்ப்பிக்க முற்பட்டபோது, ஸ்ரீகேஷின் உடலில் அசைவு தெரிவதை மதுபாலா கவனித்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து, ஸ்ரீகேஷின் உடலை எடுத்து சோதித்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீகேஷூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  மேலும், "ஸ்ரீகேஷ் இன்னும் சுயநினைவுக்கு வரவில்லை. அவரை ஃப்ரீசரில் வைத்து கிட்டத்தட்ட கொன்றுவிட்டனர். அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும்" என்று மதுபாலா கூறினார்.

  இதுகுறித்து மொராதாபாத் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷிவ் சிங் கூறியதாவது:-

  படுகாயங்களுடன் வந்த ஸ்ரீகேஷை அவசரப் பிரிவு மருத்துவர்கள் அதிகாலை 3 மணியளவில் பரிசோதித்துள்ளனர். அப்போது அவருக்கு இதயத் துடிப்பு இல்லை. அவரை பலமுறை பரிசோதித்த பிறகே, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

  ஆனால், காலையில் ஸ்ரீகேஷ் உயிருடன் இருப்பதை அவரது உறவினர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்கிறோம். தற்போது அவரது உயிரைக் காப்பாற்றுவதே எங்களுக்கு முதல்வேலை.

  இது அரிதிலும் அரிதான நிகழ்வு. இதை அலட்சியம் என்று சொல்ல முடியாது.

  இவ்வாறு அவர் கூறினார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். #Muzaffarnagarriots
  முசாபர்நகர்:

  உத்தரபிரதேச மாநிலம்  முசாபர்நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கலவரம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதி கவால் கிராமத்தில் சச்சின், கவுரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் பரவியது. இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேறு இடத்திற்கு சென்று குடியேறினர்.

  இந்நிலையில் கவால் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் கவ்ரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை முசாபர் நகர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்ததையடுத்து கடந்த பிப்ரவரி 6ம் தேதி  தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முஜாமில், முஜாசிம், ஃபர்கான், நதீம், ஜனங்கிர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய 7 பேர் குற்றவாளிகள் என கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அறிவித்தார்.

  இந்த நிலையில் கலவரத்தின்போது நவாப் மற்றும் சகித் ஆகியோர் அடித்துக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்டவர்களின் சகோதரர் அஷ்பக், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

  வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 25-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், முக்கிய சாட்சியான அஷ்பக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடோலி நகரில் பால் வியாபாரம் செய்து வந்த ஆஷிப், கடந்த திங்கள் அன்று வழக்கம்போல பால் டெலிவரி செய்ய போகும் போது அவரை மர்ம நபர் சுட்டுக் கொன்றுள்ளான்.

  இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொலையாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். #Muzaffarnagarriots

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேச கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் ஒருவர், வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். #Muzaffarnagarriots
  முசாபர்நகர்:

  உத்தரபிரதேச மாநிலம்  முசாபர்நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கலவரம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதி கவால் கிராமத்தில் சச்சின், கவுரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் பரவியது. இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேறு இடத்திற்கு சென்று குடியேறினர்.

  இந்நிலையில் கவால் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் கவ்ரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை முசாபர் நகர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட முஜாமில், முஜாசிம், ஃபர்கான், நதீம், ஜனங்கிர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவர்கள் குற்றவாளிகள் என கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அறிவித்தார்.

  தீர்ப்பு வழங்கப்பட்டபோது, முஜாமில் தவிர மற்ற 6 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜராகினர். ஆனால், புலந்த்ஷர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஜாமில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சரியான பாதுகாப்பு இல்லாததால் அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து வர இயலவில்லை என அரசாங்க வக்கீல் அஞ்சும் கான் கூறியுள்ளார்.

  குற்றவாளிகள் 7 பேருக்குமான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. #Muzaffarnagarriots  

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று உத்தரபிரதேசத்தில் கோட்சே போன்று காந்தியின் உருவத்தினை சுட்டு போட்டோ எடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். #Gandhiphoto #womanarrested
  அலிகார்:

  உத்தரபிரதேசத்தில்  கடந்த ஜனவரி 30ம் தேதி காந்தியின் நினைவு தினத்தினையொட்டி, அலிகார் பகுதியில் உள்ள தப்பாலுக்கு அருகே காந்தியை அவமதிப்பதை போன்று , உருவப்படத்தை சுட்டும், அவரை கொலை செய்த கோட்சே படத்துக்கு மாலை அணிவித்தும் இந்து அமைப்புகள் கொண்டாடின.  இந்த செயலைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 4ம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி  பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  தமிழகத்தில் வடசென்னையில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி, இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரஞ்சித்குமார், டி.வி.துரைராஜ், சங்கர் என பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இந்நிலையில் காந்தியை கோட்சே சுட்டதை நினைவுப்படுத்துவதைப்போல துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பெண் பூஜா பாண்டே மற்றும் அவரது கணவர் அசோக் பாண்டே ஆகியோரை அலிகார் போலீசார் கைது செய்துள்ளனர். தப்பால் பகுதியைச் சேர்ந்த இவர்கள் இந்து மகா சபையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  #Gandhiphoto #womanarrested
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி 10 நிமிடம் காலதாமதமாக வீட்டிற்கு வந்ததால் மூன்று முறை தலாக் சொல்லி கணவர் விவாகரத்து செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. #UPtripletalaq
  எட்டா:

  முஸ்லிம் சமுதாயத்தில், மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி, ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த முத்தலாக் நடைமுறை, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

  முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, மக்களவையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி நிறைவேறியது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

  இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டா மாவட்டத்தில், செல்போன் மூலம் மூன்று முறை தலாக் கூறி கணவர் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அந்தப் பெண் கூறியதாவது:

  நான் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண். எனது அம்மாவின் வீட்டிற்கு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாட்டியை காண சென்றேன். எனது கணவர் அரை மணி நேரத்திற்குள் பார்த்துவிட்டு திரும்பிவிட வேண்டும் என கூறினார். அங்கிருந்து வர 10 நிமிடம் காலதாமதம் ஆனது. இதனால் எனது அண்ணனுக்கு போன் செய்து என்னிடம் மூன்று முறை தலாக் என கூறினார். இதை கேட்டவுடன் மனமுடைந்தேன்.  மேலும் திருமணத்தின்போது வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்தியுள்ளார். ஏழ்மையின் காரணமாக கணவர் வீட்டார் கேட்ட எதையும் தர இயலவில்லை. இதனிடையே கரு கலைப்பும் செய்துள்ளேன். அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனக்கான நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அலிகஞ்ச் பகுதி அதிகாரி அஜய் பாதுரியா உறுதி அளித்தார்.  #UPtripletalaq
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசத்தில் தொழிலதிபர் மகனை கடத்திய கடத்தல்காரர்கள், பணம் வராத ஆத்திரத்தில், 6 வயது சிறுவனை உயிருடன் எரித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Sultanpur #Kidnappers #kill6yearoldboy #Abductingforransom
  லக்னோ:

  உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் அகர்ஹாரி. தொழிலதிபரான இவருக்கு திவ்யனேஷ்(8), மற்றும் பிரியனேஷ் (6), என இரு மகன்கள் உள்ளனர்.

  இவர்கள் இருவரும் நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டனர். மகன்கள் வீடு திரும்பாததை அறிந்த ராகேஷ் விசாரித்தார். அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தார். 

  சிறிது நேரத்தில் ராகேஷுக்கு கடத்தல்காரர்களிடம் இருந்து போன் வந்தது. அதில், மகன்களை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்றால் 50 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என மிரட்டினர்.

  இதையடுத்து, கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தது. பணம் வராத ஆத்திரத்தில் கடத்தல்காரர்கள் அவரது மகன்களை உயிருடன் கொளுத்தினர். இதில் பிரியனேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். திவ்யனேஷ் படுகாயம் அடைந்தான்.

  ராகேஷுக்கு வந்த போன் அழைப்பை வைத்து போலீசார் கடத்தல்காரர்கள் இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.

  போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்க்ளை துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர். அதன்பின் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

  உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட திவ்யனேஷ், லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

  விசாரணையில், ஹரிஓம், ரகுவர், ஷிவ்புஜன் மற்றும் சூரஜ் ஆகிய 4 பேர் கடத்தல்காரகள் என்பதும், அவர்களில் ரகுவர் ராகேஷ் வீட்டு வேலையாள் என்பதும், சிறுவர்களை கடத்தி பணம் பறிப்பதற்கு முக்கிய காரணமாகவும் அவன் இருந்தான் என்பதும் தெரிய வந்தது.

  இதுகுறித்து தகவல் அறிந்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சிறுவன் பிரியனேஷ் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

  50 லட்சம் ரூபாய் பணம் தராததால் கடத்தப்பட்ட 6 வயது சிறுவனை உயிருடன் எரித்துக் கொன்றது உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. #Sultanpur #Kidnappers #kill6yearoldboy #Abductingforransom
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேச மாநிலத்தில் சன்திலா - உமர்தலி வழியே வந்த ரெயில், தண்டவாளத்தில் பணியில் இருந்த 3 பேர் மீது மோதியதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #TrainAccident #UttarPradesh
  லக்னோ:

  கொல்கத்தா - அமிர்தசரஸ் இடையே இயக்கப்படும் அகல் டக்த் எக்ஸ்பிரஸ் இன்று நண்பகல் நேரத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் சன்திலா - உமர்தலி இடையே சென்று கொண்டு இருந்தது. அப்போது தண்டவாளத்தின் சீரமைப்பு பணியில் இருந்த 3 ஊழியர்கள் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.

  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டனர். மேலும், விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  உயிரிழந்த 3 ஊழியர்களும் எவ்வித தடுப்புகளோ, முன்னறிவிப்போ அளிக்காமல் இருந்ததாக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TrainAccident #UttarPradesh
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று மாலை ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். #UP #FireCrackerFactoryExplosion #YogiAdityanath
  லக்னோ:

  உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் நகரில் உள்ள ராசுல்பூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் துரிதமான மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

  மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட இந்த விபத்தினால் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

  இந்த விபத்து குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ள அம்மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடி வருபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

  மேலும், அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு கிடங்குகள் மற்றும் விற்பனை கூடங்களின் பாதுகாப்பு குறித்து உடனடி ஆய்வு மேற்கொள்ளுமாறும் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #UP #FireCrackerFactoryExplosion #YogiAdityanath
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nepal #UP #Accident
  லக்னோ:

  நேபாளத்தின் சிந்தூலி மாவட்டத்தில் இருந்து வாரணாசிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுற்றுலா வந்திருந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராஜதேபூர் கிராமம் வழியே கார் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அந்த காரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

  இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal #UP #Accident
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #Lightning
  லக்னோ:

  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

  இந்நிலையில், உ.பி.யின் ஷாஜஹான்பூர் பகுதியில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

  தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மின்னல் தாக்கி பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மின்னல் தாக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் அளிக்கப்படும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print