search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cylinder Blast"

    • ரமாதேவி வேறொருவடன் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    • சிலிண்டர், படுக்கையறைக்கு வந்தது எப்படி என்று போலீசார் விசாரணை.

    ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விவகாரம் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமையலறையில் இருக்க வேண்டிய சிலிண்டர், படுக்கையறைக்கு வந்தது எப்படி என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.

    உயிரிழந்த ரமாதேவியின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், ரமாதேவி வேறொருவடன் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரமாதேவியின் கள்ளக்காதலனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வெளியே பறந்து சென்று விழுந்தன.
    • படுகாயம் அடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    நசிலி:

    துருக்கி நாட்டின் அய்டின் மாகாணத்தில் உள்ள நசிலி மாவட்டத்தில் ஓட்டல் ஒன்றில் எரிவாயு சிலிண்டரை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் அந்த ஓட்டலின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வெளியே பறந்து சென்று விழுந்தன. அந்த கட்டிடத்தின் முகப்புபகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

    தீயில் இருந்த தப்பிக்க இரண்டாவது மாடி ஜன்னல் வழியாக குதித்த இரண்டு பேர் உயிர் பிழைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைத்ததுடன், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக மாகாண ஆளுநர் அனடோலு தெரிவித்துள்ளார்.

    • கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததாக முதற்கட்ட தகவல்.
    • தாய் ரோஜா, மகன் சங்கர், பேத்தி கீர்த்திகா, பேரன் கெளதம் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதி.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோயில் பதாகை கலைஞர் நகரில் நேற்று இரவு திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட சத்தம் கேட்டு அதிர்ந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் படுகாயங்களுடன் தாய் ரோஜா, மகன் சங்கர், பேத்தி கீர்த்திகா, பேரன் கெளதம் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • காயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக, காங்கிரஸ் அரசை அம்மாநில பாஜக தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் துணைப்பிரிவில் உள்ள புங்ராவில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

    விபத்தில் சிக்கி இதுவரை சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக, காங்கிரஸ் அரசை அம்மாநில பாஜக தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான பாதயாத்திரையின் 100 நாட்களை குறிக்கும் வகையில் ஜெய்ப்பூரில் இசைக் கச்சேரிக்கு அம்மாநில அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்வர் கெலாட், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாநிலத்தில் இதுபோன்ற கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவித்து, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுவதற்கு பதிலாக, மாநில அரசு கொண்டாட்டதில் ஈடுபட்டு மேலும் காயத்தை சேர்க்கிறது.

    பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் ரூ. 20 கோடி தொகுப்பை மாநில அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெடிவிபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.
    • 12 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள புங்ரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருமண விருந்துக்காக சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்தன.

    இதில் திருமணம் நடந்து கொண்டிருந்த வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சிலிண்டர்கள் வெடித்ததில் ரத்தன்சிங் என்ற 5 வயது சிறுவனும், குஷ்பு என்ற 4 வயது சிறுமியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்தனர்.

    சிலருக்கு 80 முதல் 100 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கியாஸ் சிலிண்டர்களால் ஏற்பட்ட கசிவு காாரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஹிமான்ஷு குப்தா கூறும்போது, "இது மிகவும் மோசமான விபத்து. காயமடைந்த 50 பேரில் 42 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

    பலியானவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், மத்திய அமைச்சரும் ஜோத்பூர் தொகுதி எம்.பி.யுமான கஜேந்திரசிங் செகாவத் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    காயம் அடைந்தர்களை இன்று மாலை முதல்வர் அசோக் கெலாட் மருத்துவமனைக்கு சென்று பார்க்கிறார்.

    • தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த பாதிக்கப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் இன்று சத் பூஜை நடைபெற இருந்தது. இதற்காக இன்று அதிகாலை 2.30 மணியளவில் சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து, தீ காயங்களுடன் இருந்த 30க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பாதிக்கப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போலீசாருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபத்தில் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற மாட்டு ரவி என்பவர் உயிரிழந்தார்.
    • ஹீலியம் கியாஸ் சிலிண்டர் அருகில் நின்று கொண்டு ரவிக்குமார் சிகரெட் குடித்தபோது ஏற்பட்ட தீப்பொறியால், கியாஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    திருச்சி மெயின்கார்டு கேட் அருகே மேலிப்புலிவார்டு ரோட்டில் நேற்று இரவு 8.10 மணியளவில் ஒருவர் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அவர் பலூனுக்கு காற்று நிரப்புவதற்காக வைத்திருந்த ஹீலியம் கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் தூக்கி வீசப்பட்டார்.

    வெடிச்சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர். மேலும் வெடித்த கியாஸ் சிலிண்டர் அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ நசுங்கியது.

    அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற மாட்டு ரவி என்பவர் உயிரிழந்தார்.

    ஹீலியம் கியாஸ் சிலிண்டர் அருகில் நின்று கொண்டு ரவிக்குமார் சிகரெட் குடித்தபோது ஏற்பட்ட தீப்பொறியால், கியாஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் காயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் பலூன் வியாபாரி அனர் சிங் தலைமறைவாக இருந்தார். அவரை கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் கியாஸ் சிலிண்டர்கள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • விபத்தால் நெடுஞ்சாலை 2 பக்கமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவுபாடு பகுதிக்கு 306 கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    நள்ளிரவு 12 மணியளவில் கர்னூல்- பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது லாரியின் பின்பகுதியில் இருந்து திடீரென தீப்பொறி கிளம்பியது. இதனை கண்ட லாரி டிரைவர் மற்றும் கிளீனர் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.

    சிறிது நேரத்தில் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்களுக்கு தீ பரவியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் கியாஸ் சிலிண்டர்கள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் விண்ணை முட்டும் அளவிற்கு தீ பிழம்பு கிளம்பியது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதனை கண்டு அங்கங்கே வாகனங்களை நிறுத்தினர்.

    இதுகுறித்து உடனடியாக உளவு பாடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தீயணைப்பு துறையினரால் லாரியின் அருகே நெருங்க முடியாமல் தவித்தனர். அதற்குள் லாரி முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. வெடித்த கியாஸ் சிலிண்டர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தது.

    போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த கியாஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர்.

    நள்ளிரவு நேரத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தேசிய நெடுஞ்சாலை 2 பக்கமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெருவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
    சேலம்:

    சேலம் குகை பகுதியில் உள்ள கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு ஒரு வீட்டின் சுவர் மீது மற்றொரு வீட்டின் சுவர் தொட்டப்படி சிறிய வீடுகள் முதல் அடுக்குமாடி வீடுகள் வரை கட்டப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் அடுக்குமாடி வீட்டில் வசித்து வருபவர் பத்மநாபன் (வயது 41). இவர் சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேவி (38). இவர்களது மகன் லோகேஷ். இவர்கள் அடுக்குமாடி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    பத்மநாபன் வீட்டை தொட்டப்படி வெங்கட்ராமன் (62) என்பவருக்கு சொந்தமான வீடுகள் உள்ளது. வெங்கட்ராமன் இந்த வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். இதில் குகை பகுதியில் கடை வைத்து நூல் ஏற்றுமதி செய்து வரும் ஜவுளி வியாபாரி கணேசன்- மகாலட்சுமி தம்பதி, முருகன்- உஷாராணி தம்பதி மற்றும் பாண்டுரங்கன் கோவில் தெருவில் பலகார கடை நடத்தி வரும் கோபி ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இன்று காலை கோபி வீட்டில் அவரது உறவினர் ராஜலட்சுமி (80) சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டரில் கியாஸ் கசிவு இருந்துள்ளது. இதை கவனிக்காமல் ராஜலட்சுமி தீயை பற்ற வைத்துள்ளார். இதனால் அடுப்பில் பற்றிய தீ கியாஸ் சிலிண்டரில் பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில் கோபி வீடு மற்றும் பத்மநாபனுடைய அடுக்குமாடி வீடும் இடிந்து விழுந்தது. மேலும் வீட்டில் இருந்த துணிகள், பொருட்கள் எல்லாம் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பக்கத்தில் இருந்த கணசேன், முருகன் வீடுகளில் பரவியது. இதில் வீடுகள் கண் இமைக்கும் நேரத்திற்குள் ஒன்றன் மீது ஒன்றாக இடிந்து விழுந்தது.

    இடிந்து விழுந்த இந்த 4 வீடுகளின் சிலாப்கள், பீம்கள், சுவர்கள் ஒன்றன் மீது ஒன்றாக விழுந்து கிடந்தன. இந்த இடிபாடுகளுக்குள் கோபி, பத்மநாபன், கணேசன், முருகன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிக்கினர். அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினர்.

    வீடுகளின் கற்கள் விழுந்து பசு மாடு பால் வழங்க வந்த பால்காரர், எதிர்வீட்டில் முன் பக்கம் கோலம் போட்டு கொண்டிருந்த தனலட்சுமி ஆகியோரும் காயம் அடைந்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். கோபியின் உறவினர் ராஜலட்சுமி தீயில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும் 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் இன்று கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரு வீரர் உயிரிழந்தார். #Soldierkilled #cylinderblast #Kathuacamp
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில் உள்ள ஜங்லோட் ராணுவ முகாமில் இன்று சமையலுக்காக கியாஸ் சிலிண்டர்களை கொண்டு சென்றபோது ஒரு சிலிண்டர் திடீரென்று வெடித்த விபத்தில் டார்ஜீலிங் பகுதியை சேர்ந்த நாயக் தீபக் டுவாங்(36) என்ற வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக துறைரீதியான விசாரணை முடிந்து, தீபக் டுவாங்கின் உடல் அவர் சார்ந்திருந்த படைப்பிரிவு (பட்டாலியன்) உயரதிகாரிகளிடம் இன்றிரவு ஒப்படைக்கப்பட்டது. இதே விபத்தில் காயமடைந்த மற்றொரு வீரர் சிகிச்சை பெற்று வருகிறார். #Soldierkilled #cylinderblast #Kathuacamp 
    டெல்லியில் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Delhi #DelhiBuildingCollapse #DelhiCylinderBlast
    புதுடெல்லி:

    டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள மோதி நகரில் தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். 

    சுதர்சன் பார்க்கில் செயல்பட்டு வந்த 2 மாடிகளை கொண்ட மின்விசிறி தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று இரவு சிலிண்டர் வெடித்ததால், அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரு 5 வயது குழந்தை உட்பட 7 பேர் பலியாகியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 15-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். படுகாயமடைந்த அவர்கள் அருகாமையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த கட்டிடத்தின் உரிமையாளரும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருவதாக கூறினர்.



    சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் 7 பேர் கட்டிட இடுபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சுவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Delhi #DelhiBuildingCollapse #DelhiCylinderBlast

    பாபநாசம் அருகே இன்று காலை சிலிண்டர் வெடித்து 12 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி கீழவங்காரம் பேட்டையில், முஸ்லீம் தெரு உள்ளது. இந்த பகுதியில் அப்துல் லதீப் (வயது 70) என்பவர் வீட்டில் இன்று காலை லேசான தீ விபத்து ஏற்பட்டது. உடனே காற்றில் தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.

    இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். பின்னர் தீ விபத்தில் அடுத்தடுத்த வீடுகளில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தீ கட்டுக்கடங்காமல் பரவியாதல் அப்துல் லதீப் வீடு அருகே உள்ள பாத்திமா பீவி (50), காதர்மைதீன் (70), ஜாகிர் உசேன் (45), பேகம் (40), சேக்நூர்தீன் (60), நாசர்அலி (50), மதினாபேகம் (35), அசரப்அலி (45), சேக் உசேன் (45), லெனின் (65) ஆகியோரின் வீடுகள் தீயில் முழுவதும் எரிய தொடங்கியது.

    இதனால் 12 பேரின் வீடுகளும் தீயில் எரிந்து முழுவதும் நாசமானது. வீடுகளில் உள்ள முக்கிய சான்றிதழ்கள், ஆதார்கார்டு, ரேசன் கார்டு, பணம் நகைகள் என முழுவதும் எரிந்து கரிகியது. இதன் மொத்தம் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தீ விபத்து குறித்து பாபநாசம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பாபநாசம் மற்றும் கும்பகோணத்தில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து தீ விபத்து குறித்து தஞ்சை கலெக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே கலெக்டர் அண்ணாதுரை, கும்பகோணம் சப்-கலெக்டர் பிரதீப்குமார், பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், துணை தாசில்தார் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் அன்பரசு உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×