என் மலர்
நீங்கள் தேடியது "police inqiry"
- ரெயில் திருப்பதி வந்ததும் ரெயிலில் நடந்த கொள்ளை குறித்து பயணிகள் புகார் தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் நேற்று இரவு நிஜமாபாத்தில் இருந்து புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குத்தி ரெயில் நிலையம் அருகே சிக்னலுக்காக ரெயில் நிறுத்தப்பட்டது.
அப்போது 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் பெட்டியில் ஏறினர். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை தட்டி எழுப்பினர்.
மேலும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்தனர். யாராவது சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்றனர்.
மொத்தம் 10 பெட்டிகளில் இருந்த பயணிகளை மிரட்டி நகை பணம் மற்றும் பொருட்களை கொள்ளையர்கள் பறித்து சென்று விட்டனர்.
இதனால் பயத்தில் பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்தனர். ரெயில் திருப்பதி வந்ததும் ரெயிலில் நடந்த கொள்ளை குறித்து பயணிகள் புகார் தெரிவித்தனர்.
பயணிகள் 20 பேர் திருப்பதி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தால் திருப்பதி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்னலுக்காக ரெயில் நிறுத்தப்படும் இடத்தை முன்கூட்டியே அறிந்து திட்டமிட்டு கும்பல் கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.
இதில் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள ஜிஞ்சேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பன் (வயது50). மாற்றுத்திறனாளியான இவரது மனைவி பாப்பம்மா (45). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் பாப்பம்மா ஆடுகளை தினமும் காலை 7 மணிக்கு காட்டுக்குள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மதியம் 2 மணிக்கு வீடு திரும்புவார்.
நேற்றும் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு காட்டுக்குள் அவர் அழைத்து சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன குடும்பத்தினர் காட்டுக்குள் சென்று தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இன்றுகாலை பெரியஏரி காட்டுப்பகுதியில் பாப்பம்மா இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரை உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது ஆடை இல்லாமல் நிர்வாண நிலையில் பாப்பம்மா இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது. அப்பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். அதனால் மர்ம நபர்கள் நகைக்காக பெண்ணை கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து அவரை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விரக்தி அடைந்த முருகேசன் அவரது மனைவி மாலா ஆகியோர் வீட்டில் தூக்கில் தொங்கினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர், சலவன்பேட்டை, சேஷாலம் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவரது மனைவி மாலா (60). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் முருகேசன், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ. 11 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். கடனை பெற்ற நபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். முருகேசன் அவரது மனைவி இருவரும் கடன் பெற்றவர் வீட்டிற்கு சென்று அவரது மகன்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். அவர்கள் பணத்தை தருவதாக காலம் கடத்தி வந்தனர்.
பின்னர் நீங்கள் எனது தந்தையிடம் பணம் கொடுத்தது எங்களுக்கு தெரியாது. இதனால் நீங்கள் யாரிடம் பணம் கொடுத்தீர்களோ அவர்களிடமே சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த முருகேசன் அவரது மனைவி மாலா ஆகியோர் நேற்றிரவு வீட்டில் தூக்கில் தொங்கினர்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் முருகேசன் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் முருகேசனின் வீட்டில் சோதனை செய்த போது அவர்கள் எழுதி வைத்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.
அதில் சலவன்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர் எங்களிடம் ரூ.11 லட்சம் கடனாக வாங்கினார். அவர் இறந்து விட்டதால் அவரது மகன்களிடம் பணத்தைக் கேட்டபோது இறந்தவர்களிடமே பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த நானும் எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதி இருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாத விரக்தியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கம் பணிகளுக்கு பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப் பட்டுள்ளனர்.
- 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம்:
உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சிகந்தராபாத் பகுதியில் உள்ள குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த வீட்டில் 15 பேர் வசித்து வந்ததாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கோவிலின் குளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராக்கெட் லாஞ்சரால் பரபரப்பு.
- ராக்கெட் லாஞ்சர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் சிவன் கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் குளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராக்கெட் லாஞ்சரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராக்கெட் லாஞ்சரை அங்கிருந்து பாதுகாப்பாக ஜீயபுரம் போலீசார் கொண்டு சென்றனர்.
மேலும், இந்த ராக்கெட் லாஞ்சர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஊட்டி அடுத்த கடப்பாடியை சேர்ந்தவர் யோக பிரியா (வயது 43). இவருக்கு திருமணமாகி கடந்த 10 வருடத்துக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார்.
ஈரோடு நேதாஜி நகர் மாணிக்கம்பாளையத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று வழக்கம்போல் ஆஸ்பத்திரியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்தியில் அனுமதித்தனர்.
அவரை டாக்டர்கள் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






