சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கம் பணிகளுக்கு பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப் பட்டுள்ளனர்.5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு
Published on

உத்தரபிரதேசம்:

உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சிகந்தராபாத் பகுதியில் உள்ள குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த வீட்டில் 15 பேர் வசித்து வந்ததாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com