என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓமன் நாடு"

    • மஸ்கட் கவர்னரேட் பகுதியில் செயல்படும் ஒரு ஓட்டலில் மாடியில் இருக்கும் அறையில் வசித்து வந்தனர்.
    • அதிகாலையில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் பங்கஜாக்சன்(வயது59). இவரது மனைவி சஜிதா(53). இவர்கள் பல ஆண்டுகளாக ஓமன் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்கள் மஸ்கட் கவர்னரேட் பகுதியில் செயல்படும் ஒரு ஓட்டலில் மாடியில் இருக்கும் அறையில் வசித்து வந்தனர். 

    இந்தநிலையில் அதிகாலையில் அந்த ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இதில் பங்கஜாக்சன், சஜிதா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சென்னையில் வசித்துவரும் அவரது மகள் ஓமன் விரைந்துள்ளார்.

    • ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்று கொத்தடிமையாக இருக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என மதுரை திரும்பிய பெண் பேட்டியில் தெரிவித்தார்.
    • அவர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரையைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக சில நாட்களுக்கு முன்பு தனக்கு தெரிந்தவர்கள் மூலம் வெளிநாட்டில் வீட்டு வேலைக்காக மஸ்கட் சென்றார். அங்கு அவரை கொத்தடிமையாக்கி துன்புறுத்தி வேலை வாங்கி உள்ளனர். மேலும் உண்பதற்கும், உறங்கு வதற்கும் அனுமதிக்காமல் கொடுமைப் படுத்தியுள்ள னர்.

    இதனால் வேதனை அடைந்த அவர், தன்னை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி சம்பந்தப்பட்ட ஏஜென்டிடம் கூறியுள்ளார்.அதற்கு அவர், ரூ.3 லட்சம் தந்தால் தான் திருப்பி அனுப்ப முடியும் எனக்கூறி அந்த பெண்ணை ஓமன் நாட்டிற்கு மற்றொரு வீட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த நிலையில் மதுரை யில் உள்ள ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர் சசிகலா என்பவர் மூலம் நாகலட்சுமி தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நாகலட்சுமியை இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

    அதனால் மீட்கப்பட்ட அவர் சொந்த ஊர் திரும்பினார். அவர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

    நாகலட்சுமி கூறும்போது, தன்னைபோல் பலர் வெளிநாட்டு வேலைக்கு அழைத்து செல்லப்பட்டு ஓமன் நாட்டின் கொத்த டிமைகளாக இருந்து வருகின்றனர். இதில் பலர் உதவி கிடைக்காததால் தற்கொலை செய்துள்ளனர். மேலும் பலர் உணவு, உடையின்றி தெருவில் ஆதரவின்றி திரிகின்றனர். அவர்களையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என்றார்.

    ×