search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young women"

    • கமுதியில் வளர் இளம்பெண்களுக்கு கல்வி கருத்தரங்கு நடந்தது.
    • மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டனர்.

    பசும்பொன்

    கமுதி ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் வளர் இளம்பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் நிர்வாக குழு தலைவர் சண்முகராஜ் பாண்டியன், செயலர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சிந்துமதி வரவேற்று பேசினார். கமுதி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயா, டாக்டர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட அலுவலர் முருகேசன், ஆலோசகர் ஆயிஷாகனி, ஆய்வு கூட நுட்புனர் நாகேஸ்வரன், கணினி மதிப்பீட்டு உதவியாளர் ராணி, மூத்த செவிலியர் தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வளர் இளம் பருவத்தினருக்கான பிரச்சினைகளும் அதற்குரிய தீர்வுகளும் குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். இதில் மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • இளம்பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். திடீரென அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.

    அப்போது அந்த பெண் போலீசாரிடம் கூறியதாவது:

    எனது சொந்த ஊர் பெங்களூரு ஆகும். ஈரோடு முனிசிபால் காலனியில் கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

    அப்போது எனது தோழி மூலம் வைராபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் அறிமுகமானார். அவர் சேல்ஸ்மேன் வேலை பார்த்து வந்தார். அவர் திடீரென ஒரு நாள் உன்னை பிடித்துள்ளது. உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

    அதற்கு நான் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 9 வயதில் மகன் உள்ளான் என்று என் வாழ்க்கையில் நடந்ததை கூறிவிட்டேன். அதன் பிறகு அவர் பெற்றோருடன் வந்து திருமணம் பற்றி பேசினார்.

    இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர்கோவிலில் எங்களுக்கு திருமணம் ஆனது. திருமணமானதும் அவரது குடும்பத்துடன் வைராபாளையத்தில் வசித்து வந்தேன்.

    அதன் பின்னர் நானும் எனது கணவரும் லட்சுமி தியேட்டர் அருகே தனியாக வசித்து வருகிறோம். நான் கேட்டரிங் தொடங்க அது சம்பந்தமான பணியில் ஈடுபட்டு வந்தேன்.

    இந்நிலையில் எனது தோழியும், கேட்டரிங் உரிமையாளர் ஒருவர் என 2 பேரும் என் கணவரிடம் என்னை பற்றி தவறாக சொல்லி உள்ளனர். இதனை நம்பி எனது கணவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துகிறார்.

    மேலும் பல நேரங்களில் மது அருந்தி வந்தும் என்னை தாக்குகிறார். இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனக்கு நியாயம் வேண்டும்.

    எனவே எனது கணவர், தோழி, கேட்டரிங் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 பெண்களிடம் நகை பறிப்பு நடந்துள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே அரசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சத்யா (வயது23). இவர் ஸ்கூட்டரில் அரசனூரி லிருந்து தேவிபட்டினம் கம்ப்யூட்டர் சென்டருக்கு போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு விண்ணப்பிக்க சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    அரசனூர் காலனி சுடுகாடு அருகே வந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பைக் மீது மோதி கீழே தள்ளி விட்டனர். இதில் சத்யா கீழே விழுந்தும் கழுத்தில் அணிந்திருந்த 5 ½ பவுன் தாலிச்செயினை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசில் சத்யா புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை சேர்ந்தவர் அமரல்பீவி என்ற சக்கரை யம்மாள் (60). இவர் நேற்று மேலூர் கணேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறியபோது அவரது கட்டைபையில் இருந்த 3 பவுன் தங்க செயினைமர்ம நபர் திருடிச்சென்று விட்டார்.

    இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விருதுநகர் அருகே இளம்பெண்கள் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் பாண்டிச்செல்வி (வயது 22). நர்சிங் படிப்பு முடித்து விட்டு மில்லில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வெளியே சென்றுவருவதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் ஸ்ரீரெங்க நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துகணேசன். இவரது மகள் சித்ராதேவி (25). என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். சம்ப வத்தன்று அருகில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்வ தாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்து கணேசன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜீஸ் (34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது சம்பளம் குறை வாக உள்ளதாக கூறி அவரது மனைவி ரஞ்சிதா (25) அடிக்கடி தகராறு செய்வாராம்.

    இந்த நிலை யில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஞ்சிதா போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்கள் தடுமாறியதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுழித்தபடியே சென்றதையும் காண முடிந்தது.
    • இளம் பெண்கள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் பாரில் அமர்ந்து குடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    சென்னை:

    எங்கே செல்லும் இந்த பாதை... யாரோ யாரோ அறிவாரோ... என்கிற பாடலை நினைவுபடுத்தும் வகையில் சென்னையில் இளம்பெண்கள் நடுரோட்டில் போதையில் தள்ளாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    கோயம்பேடு பகுதியில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் சாலையில் சென்னை மாநகராட்சி சிக்னல் சந்திப்பில் ஒரு கருப்பு நிற காரில் 4 இளைஞர்களும், 3 இளம்பெண்களும் வந்து இறங்கினர். அனைவரும் புத்தாண்டு மது விருந்து நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்ததை அவர்கள் அணிந்திருந்த ஆடை உணர்த்தியது.

    3 பெண்களும் கவர்ச்சியாக அரை குறை ஆடையை அணிந்திருந்தனர். 3 பேருமே போதையில் தள்ளாடிய நிலையில், ஒருவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. இரவில் நடனம் ஆடிய கவர்ச்சி உடையிலே அந்த 3 பெண்களும் வந்திருந்தனர். 'வாந்தி' வருகிறது என ஒரு பெண் கூறியதாலேயே வாலிபர்கள் காரை ஓரமாக நிறுத்தி உள்ளனர். இதையடுத்து போதை பெண் கீழே இறங்கினார்.

    அவர் தடுமாறியதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுழித்தபடியே சென்றதையும் காண முடிந்தது. பின்னர் 4 இளைஞர்களும், 3 பெண்களையும் காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    மது குடிப்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்கிற நிலைமை மாறி இளம் பெண்கள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் பாரில் அமர்ந்து குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். 'ஆணுக்கு பெண் சமம்' என்பது இது தானோ...

    புளியம்பட்டி- சத்தியமங்கலம் பகுதியில் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர், கே. மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி ஜோதிமணி (35). கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜோதிமணி செலம்பரகவுண்டன் புதூரில் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டிலிருந்த ஜோதிமணி திடீரென மாயமாகிவிட்டார்.

    அவரை பல்வேறு இடங்களில் அவரது உறவினர்கள் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் புளியம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோதிமணியை தேடி வருகின்றனர். இதைப்போல் சத்தியமங்கலம், திருவள்ளுவர் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமார். அவரது மனைவி நீலா (38). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நீலா தாளவாடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக சம்பவத்தன்று கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு வரவில்லை.

    இதனால் அவரது உறவினர்கள் நீலாவை பல்வேறு இடங்களில் தேடினர் எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து அவரது உறவினர்கள் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நீலாவை தேடி வருகின்றனர்.

    • 3 இளம்பெண்கள் மாயமாகினர்.
    • பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    விருதுநகர்

    ராஜபாளையம் ஜமீன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் கனிசெல்வம். இவரது மனைவி தையல் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை.

    தேபோல் ராஜபாளையம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்த முத்துக்குட்டி என்பவரது மகளும் மாயமானார். ராஜபாளையம் அழகாபுரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கடந்த 24-ந் தேதி குரூப்-4 தேர்வு எழுதச்சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேற்கண்ட மாயம் தொடர்பான சேத்தூர், தளவாய்புரம், கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்தவர் வியாகுலம் (வயது 45). இவர் கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (38). இவர்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர்.  

    வியாகுலம் வழக்கம் போல் நேற்று அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர்   வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரது மனைவி சுகந்தி வீட்டினுள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததாக கூறி அவரை மீட்டு காயல்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு வியாகுலம் கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுகந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சுகந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுகந்தி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கேரளாவை சேர்ந்த இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய கன்னியாகுமரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் லைஜுன் (வயது 27).

    இவர் கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள செங்கனூர் பகுதிக்கு சென்று கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் செல்போன் நம்பர் கிடைத்தது.

    இதன்மூலம் அவர் அந்த இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசி பழகி வந்தார். இந்த நிலையில் அந்த இளம் பெண் தனது வாட்ஸ் அப்பில் வைத்திருந்த போட்டோவை எடுத்து அதை மார்பிங் மூலம் லைஜுன் ஆபாச படமாக மாற்றி உள்ளார்.

    பிறகு அந்த போட்டோவை அந்த இளம்பெண்ணுக்கு செல்போனில் அனுப்பி தனக்கு பணம் தராவிட்டால் அதை மற்றவர்களுக்கு பரப்பி விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் இதுபற்றி தனது உறவினர்களிடம் கூறி அழுதார்.

    மேலும் வாலிபர் மிரட்டல் பற்றி செங்கனூர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து லைஜுன் கைது செய்யப்பட்டார். அவரது செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதை சோதனை செய்தபோது அதில் ஏராளமான தமிழ் பெண்கள், கேரள பெண்களின் மார்பிங் ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனால் அவர் வேறு பெண்களையும் இதுபோல மிரட்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    திண்டுக்கல் அருகே தனியார் மில்லில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    ஒடிசா மாநிலம் பாலிமோரி மாவட்டம் செம்பூரைச் சேர்ந்தவர் அனிஸ்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சோனி (வயது 19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் திண்டுக்கல் அருகே மினுக்கம்பட்டியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

    மில் நிர்வாகம் சார்பில் ஒதுக்கப்பட்டிருந்த விடுதியில் அவர்கள் தங்கி இருந்தனர். இன்று காலை சோனி தனது அறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் இளம்பெண் எவ்வாறு இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழனி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். #KadakampallySurendran #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் 2-ந் தேதி தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் தரிசனம் செய்தனர்.

    இதைப்போல சபரிமலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மகரவிளக்கு-மண்டல பூஜை காலத்தில் தடை செய்யப்பட்ட வயதுடைய 51 பெண்கள் தரிசனம் செய்ததாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு தெரிவித்தது. இது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக மாநில சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.



    இதற்கு தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர், சபரிமலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சீசன் காலத்தில் தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் மட்டுமே தரிசனம் செய்ததாக கூறினார். சசிகலா (வயது 47) என்ற இலங்கைப்பெண் சபரிமலையில் தரிசனம் செய்ததாக வெளியான தகவல் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    மந்திரியின் இந்த தகவலால் சபரிமலையில் தரிசனம் செய்த தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. #KadakampallySurendran #Sabarimala

    சபரிமலையில் 17 இளம்பெண்கள் மட்டுமே தரிசனம் செய்ததாக புதிய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. #Sabarimala #SC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த கேரள மாநில அரசு முயற்சி மேற்கொண்டது. இதை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். பக்தர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தி போலீசார் இளம்பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றனர்.



    இது தொடர்பாக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் 51 இளம்பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததாக அறிவித்தனர்.

    சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழா காலங்களில் 51 இளம்பெண்களும் தரிசனம் செய்ததாகவும் தெரிவித்த கேரள அரசு அவர்களின் பெயர் விவரம் மற்றும் ஆதார் அட்டை விவரங்களையும் பட்டியலில் குறிப்பிட்டிருந்தது.

    இந்த பட்டியல் வெளியானதும் அதில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சில ஆண்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தது தெரிய வந்தது.

    பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி கேரள அரசுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. இதையடுத்து பட்டியலில் உள்ள குளறுபடியை கண்டறிந்து புதிய பட்டியல் தயாரிக்க கேரள அரசு உத்தரவிட்டது.

    இதற்காக தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் அடங்கிய புதுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஏற்கனவே வெளியான 51 பேர் பட்டியலை ஆய்வு செய்தனர். அதில், 34 பேரை விடுவித்தனர். மீதம் 17 பேரே சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்ததாக தெரிவித்தனர். இந்த புதிய பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது. #Sabarimala #SC

    ×