காயல்பட்டினத்தில் பெண் மர்மசாவு

காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்தவர் வியாகுலம் (வயது 45). இவர் கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (38). இவர்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர்.  

வியாகுலம் வழக்கம் போல் நேற்று அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர்   வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரது மனைவி சுகந்தி வீட்டினுள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததாக கூறி அவரை மீட்டு காயல்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு வியாகுலம் கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுகந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சுகந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுகந்தி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com