3 இளம்பெண்கள் மாயம்

3 இளம்பெண்கள் மாயமாகினர். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
3 இளம்பெண்கள் மாயம்
Published on

விருதுநகர்

ராஜபாளையம் ஜமீன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் கனிசெல்வம். இவரது மனைவி தையல் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை.

தேபோல் ராஜபாளையம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்த முத்துக்குட்டி என்பவரது மகளும் மாயமானார். ராஜபாளையம் அழகாபுரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கடந்த 24-ந் தேதி குரூப்-4 தேர்வு எழுதச்சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேற்கண்ட மாயம் தொடர்பான சேத்தூர், தளவாய்புரம், கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com