போதையில் தள்ளாடிய 3 இளம்பெண்கள்- கை தாங்கலாக அழைத்து சென்ற ஆண் நண்பர்கள்

இளம்பெண்கள் தடுமாறியதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுழித்தபடியே சென்றதையும் காண முடிந்தது.இளம் பெண்கள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் பாரில் அமர்ந்து குடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
போதையில் தள்ளாடிய 3 இளம்பெண்கள்- கை தாங்கலாக அழைத்து சென்ற ஆண் நண்பர்கள்
Published on

சென்னை:

எங்கே செல்லும் இந்த பாதை... யாரோ யாரோ அறிவாரோ... என்கிற பாடலை நினைவுபடுத்தும் வகையில் சென்னையில் இளம்பெண்கள் நடுரோட்டில் போதையில் தள்ளாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோயம்பேடு பகுதியில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் சாலையில் சென்னை மாநகராட்சி சிக்னல் சந்திப்பில் ஒரு கருப்பு நிற காரில் 4 இளைஞர்களும், 3 இளம்பெண்களும் வந்து இறங்கினர். அனைவரும் புத்தாண்டு மது விருந்து நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்ததை அவர்கள் அணிந்திருந்த ஆடை உணர்த்தியது.

3 பெண்களும் கவர்ச்சியாக அரை குறை ஆடையை அணிந்திருந்தனர். 3 பேருமே போதையில் தள்ளாடிய நிலையில், ஒருவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. இரவில் நடனம் ஆடிய கவர்ச்சி உடையிலே அந்த 3 பெண்களும் வந்திருந்தனர். 'வாந்தி' வருகிறது என ஒரு பெண் கூறியதாலேயே வாலிபர்கள் காரை ஓரமாக நிறுத்தி உள்ளனர். இதையடுத்து போதை பெண் கீழே இறங்கினார்.

அவர் தடுமாறியதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுழித்தபடியே சென்றதையும் காண முடிந்தது. பின்னர் 4 இளைஞர்களும், 3 பெண்களையும் காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.

மது குடிப்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்கிற நிலைமை மாறி இளம் பெண்கள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் பாரில் அமர்ந்து குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். 'ஆணுக்கு பெண் சமம்' என்பது இது தானோ...

X

Maalai Malar
www.maalaimalar.com