இளம்பெண்கள் உள்பட 3 பேர் மாயம்

விருதுநகர் அருகே இளம்பெண்கள் உள்பட 3 பேர் மாயமாகினர். திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்கள் உள்பட 3 பேர் மாயம்
Published on

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் பாண்டிச்செல்வி (வயது 22). நர்சிங் படிப்பு முடித்து விட்டு மில்லில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வெளியே சென்றுவருவதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தங்கல் ஸ்ரீரெங்க நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துகணேசன். இவரது மகள் சித்ராதேவி (25). என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். சம்ப வத்தன்று அருகில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்வ தாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்து கணேசன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜீஸ் (34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது சம்பளம் குறை வாக உள்ளதாக கூறி அவரது மனைவி ரஞ்சிதா (25) அடிக்கடி தகராறு செய்வாராம்.

இந்த நிலை யில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஞ்சிதா போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com