என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்- ராஜ்நாத் சிங் பெருமிதம்
    X

    இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்- ராஜ்நாத் சிங் பெருமிதம்

    • இந்தியா 3- வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்.
    • பாகிஸ்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    2027-ம் ஆண்டுக்குள் உலக அளவில் இந்தியா 3- வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். அண்டை நாட்டை பற்றி ஒரு போதும் சாதகமாக பேசாத பாகிஸ்தான் தற்போது இந்தியா சக்தி வாய்ந்த நாடாக வளர்ந்து வருவதாக அந்நாட்டின் தலைவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். பாகிஸ்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

    உலக அளவில் இந்தியா குறித்த கருத்து மாறி விட்டதாகவும், அனைத்து நாடுகளின் தலைவர்களும் 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் கூறி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது மட்டுமல்ல. 2029-ம் ஆண்டிலும் நரேந்திர மோடியே பிரதமராக இருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×