என் மலர்
இந்தியா

உத்தர பிரதேசத்தில் தொடரும் கனமழை: 2 நாளில் 56 பேர் பலி
- சூறாவளி காரணமாக பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.
- உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க மாநில அரசு உத்தரவிட்டது.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சூறாவளிக் காற்றும் வீசியது.
இந்த பலத்த மழை, சூறாவளி காரணமாக பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் சுவர் இடிந்து விழுந்தன. மின்னல், மின்சாரம் தாக்கியதில் கடந்த 2 நாட்களில் மட்டும் 56 பேர் பலியாகியுள்ளனர்.
பதேபூரில் 6 பேர், கஸ்கஞ்ச் 5 பேர், மீரட், கான்பூர் நகர், புலந்தசாகர், எடா மற்றும் அரையா ஆகியவற்றில் தலா 4 பேரும், கவுதம் புத்தா நகர், கன்னோஜில் தலா 3 பேரும் உள்பட பல்வேறு நகரங்களில் உயிரிழந்தனர்.
மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Next Story






