உ.பி.யில் பாய்லர் வெடித்து விபத்து- 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உ.பி.யில் பாய்லர் வெடித்து விபத்து- 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Published on

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போஜ்பூரில் காகித தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். விசாரணையில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக ஏசிபி ஞான பிரகாஷ் கூறினார்.

பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com