என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "affair"

    • தாய் தனது கள்ளக்காதலனுடன் இருப்பதற்கு சிறுவன் தடையாக இருந்துள்ளான்.
    • சிறுவனின் செயல்பாடுகள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் அந்த இளம்பெண், தனது கணவரை பிரிந்து சென்று விட்டார். கணவரை பிரிந்த அவர், 8-ம் வகுப்பு படிக்கும் தனது மகனுடன் கலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்தநிலையில் அந்த வீட்டுக்கு சிறுவனின் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் அடிக்கடி வந்து சென்றபடி இருந்துள்ளார்.

    இது அந்த சிறுவனுக்கு பிடிக்கவில்லை. தாய் தனது கள்ளக்காதலனுடன் இருப்பதற்கு சிறுவன் தடையாக இருந்துள்ளான். அவன் இரவு நேரத்தில் தனது தாயுடன் படுத்து தூங்கியிருக்கிறான். இது கள்ளக்காதலர்களுக்கு இடையூறாக இருந்திருக்கிறது.

    சிறுவனின் செயல்பாடுகள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று அவர் தாயுடன் இருந்த சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளான். சிறுவனின் கையை பிடித்துக்கொண்டு, அவனது தலையை சுவர் மற்றும் குளியலறை கதவில் மோதச் செய்துள்ளார்.

    மேலும் சிறுவனின் மார்பு பகுதியில் அவனது தாய் கைவிரல் நகங்களால் பிரண்டி காயப்படுத்தி உள்ளார். சிறுவனில் நிலை குறித்து அறிந்த அவனது தந்தை, சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார். மேலும் அவர் தனது மகன் கொடூரமாக தாக்கப்பட்டது குறித்து போலீசிலும் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சிறுவனின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • வீட்டு உரிமையாளர் தல்சந்தை அடித்து தாக்கினார்.
    • ஜாங்கி நான் கடந்த 3 நாட்களாக தற்கொலைக்கு முயற்சி செய்து வருகிறேன்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் தல்சந்த் அகிர்வார் (வயது35). இவரது மனைவி ஜாங்கி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    தனது குடும்பத்தினரோடு வாடகை வீட்டில் வசித்து வந்த தல்சந்த் அரியானாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ஒரு நாள் வேலை முடித்து வீட்டுக்கு வந்த தல்சந்த் தனது மனைவி ஜாங்கி வீட்டு உரிமையாளருடன் தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தல்சந்த் தனது மனைவியை கண்டித்தார். அவர் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையறிந்த வீட்டு உரிமையாளர் தல்சந்தை அடித்து தாக்கினார்.

    இதில் மனமுடைந்த தல்சந்த் கடந்த அக்டோபர் 31-ந்தேதி தனது மனைவியை வீடியோ காலில் அழைத்து உருக்கமாக பேசினார்.

    ஜாங்கி நான் கடந்த 3 நாட்களாக தற்கொலைக்கு முயற்சி செய்து வருகிறேன். என்னால் முடியவில்லை. நீ என்னோடு ஒருமுறை பேசியிருந்தால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன். எனக்கு செய்தது போல் யாருக்கும் துரோகம் செய்யாதே என்று பேசி விட்டு அழைப்பை துண்டித்தார்.

    அன்று மாலை தல்சந்தின் சகோதரர் சந்தர்பன் அவரை பார்க்க வீட்டிற்கு வந்தார். அங்கு தல்சந்த் மயங்கி கிடந்தார். அருகில் விஷ பாட்டில் கிடந்தது. இதுகுறித்து உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் வந்து பார்த்த போது தல்சந்த் இறந்தது தெரிய வந்தது. அவரது பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது சந்தர்பன் புகார் தெரிவித்தார்.

    இதனை மனைவியின் குடும்பத்தார் மறுத்துள்ளனர். தல்சந்த் குடித்து விட்டு வந்து ஜாங்கியை கண்மூடித்தனமாக தாக்குவார் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

    தல்சந்த பேசிய வீடியோகாலின் உண்மைத் தன்மையை கண்டறியும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • கணவனை விட்டு கள்ளக்காதலுடன் சில காலம் தங்கியபோது கர்ப்பம்.
    • வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தந்தையாக கள்ளக்காதலன் விரும்பியதால் ஏற்பட்ட விபரீதம்.

    கள்ளக்காதலில் கர்ப்பம்: கணவன், 2 குழந்தைகளுடன் வாழ விரும்பிய பெண்- கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவு/ An Extramarital Affair Pregnancy Then Double Murder In Delhi

    டெல்லியில் கள்ளக்காதலியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி, கள்ளக்காதலன் விபரீத முடிவு எடுத்ததால் இருவருடைய உயிரும் பறிபோனது.

    மத்திய டெல்லியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 23). இவரது மனைவி ஷாலினி (22). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ஷாலினி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாக ஷாலினுகும் ஆஷு என்ற சைலேந்திரா (வயது 34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது, ஆஷு உள்ளூர் கிரிமினல் எனத் தெரிகிறது.

    கள்ளக்காதலால் ஷாலினி கர்ப்பம் அடைந்துள்ளார். ஷாலினி வயிற்றில் உள்ள குழந்தைக்கு தான் தந்தையாக போகிறோம் என ஆஷு சந்தோசம் அடைந்துள்ளார். அந்த நிலையில்தான் ஷாலினியும், ஆகாஷும் சமரசம் அடைந்து இரண்டு குழந்தைகளுடன் மீண்டும் ஒன்றிணைந்து வாழ முடிவு செய்துள்ளனர்.

    தன்னை விட்டு ஷாலினி பிரிந்து செல்ல முடிவு செய்ததால் கள்ளக்காதலி மற்றும் அவரது கணவனை தீர்த்துக்கட்ட ஆஷு முடிவு செய்துள்ளார்.

    நேற்றிரவு ஷாலின் தனது கணவன் இ-ரிக்ஷாவில் தாயாரை பார்க்க சென்றுள்ளார். இ-ரிக்ஷாவில இருவரையும் பார்த்த ஆஷு கத்தியால், கணவனை குத்த முயன்றுள்ளார். அப்போது, ஷாலின் கணவர் சுதாரித்து தடுக்க முயன்றுள்ளார். இதனால அவர் மீது கத்தி குத்து விழுந்துள்ளது. இருந்தாலும் பெரிய காயமின்றி தப்பிவிட்டார்.

    உடனே, ரிக்ஷாவில் இருந்து ஷாலியை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இதில் ஷாலினி ரத்த வெள்ளத்தில் மயக்கமானார். அப்போது ஆகாஷ் தனது மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆஷு அவரை வெறிக்கொண்டு தாக்க முயன்றுள்ளார். ஆனால், ஆகாஷ் நேர்த்திய தடுத்து கத்தியை அவரிடம் இருந்து பறித்துள்ளார். அத்துடன் ஆஷுவை சரமரியாக குத்தியுள்ளார். இதில் ஆஷுவும் படுகாயம் அடைந்துள்ளார்.

    பின்னர் மூன்று பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஷாலினி மற்றும் அவரது கள்ளக்காதலன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆகாஷ் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சமப்வம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்ணின் முடிவைக் கேட்டு, அவரது கணவர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • இளம்பெண் தான் எடுத்த முடிவை மாற்றவே முடியாது என உறுதியாக கூறிவிட்டார்.

    உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்குப் பிறகு, அவருக்கு வேறொரு வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அடிக்கடி அவருடன் செல்போனில் பேசினார்.

    கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து தனிமையில் இருந்தார். அவருடைய கணவர் கண்டித்தும் கேட்கவில்லை, அவ்வப்போது கணவனை விட்டுவிட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். ஒரு வருடத்திற்குள், அவர் 10 முறை கள்ளக்காதலுடன் தலைமறைவானார். ஒவ்வொரு முறையும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனாலும் திரும்ப, திரும்ப கள்ளக்காதலனை சந்தித்தார். இதனால் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த பிரச்சனையை தீர்க்க குடும்ப உறுப்பினர்கள் கிராம பஞ்சாயத்தை கூட்டினர். அங்கு, அந்த இளம்பெண் துணிச்சலுடன் தனது அதிர்ச்சியூட்டும் முடிவை வெளிப்படுத்தினார். தனது காதலனுடன் ஒரு மாதத்தில் 15 நாட்கள் தங்க அனுமதித்தால் மட்டுமே மீதமுள்ள 15 நாட்களுக்கு தனது கணவருடன் வாழ்வேன் என்று தெரிவித்தார்.

    அந்தப் பெண்ணின் முடிவைக் கேட்டு, அவரது கணவர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிராமப் பெரியவர்கள் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கள்ளக்காதலை கைவிடுமாறு அறிவுரை வழங்கினர். ஆனால் மாதத்தில் 15 நாட்கள் கள்ளக்காதலனுடன் இருக்க அனுமதித்தால் மட்டுமே கணவருடன் வாழ்க்கை நடத்துவேன் என இளம்பெண் தொடர்ந்து அடம்பிடித்தார்.

    மணிக்கணக்கில் அவருக்கு அறிவுரை வழங்கியும் தன் காதலனை முற்றிலுமாக விட்டுவிட மறுத்துவிட்டாள். இதனை கேட்டதும் அவருடைய கணவர் கதறி அழுதார். மனைவியிடம் கெஞ்சி பார்த்தார்.

    ஆனால் இளம்பெண் தான் எடுத்த முடிவை மாற்றவே முடியாது என உறுதியாக கூறிவிட்டார். இதனால் மனமடைந்து போன கணவர் இளம்பெண்ணை அவருடைய கள்ளக்காதலனுக்கு தாரை வார்த்து விட்டு சோகத்துடன் திரும்பி சென்றார்.

    உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கள்ளக்காதலியின் கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கியுள்ளார்.
    • Pament Failed ஆனதால் போன் செய்தபொது, போனை மனைவி எடுத்ததால் விசயம் தெரியவந்துள்ளது.

    சீனாவில் தன்னுடைய மொபைல் பேமென்ட் கோடு (Payment Code) மூலம் கருக்கலைப்பு மாத்திரை வாங்கிய நிலையில், ரூ.200 ரூபாய் Payment Failed ஆனதால், மெடிக்கலில் இருந்து போன் செய்ததால் மனைவிக்கு கள்ளக்காதல் தெரியவந்து, குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள யங்ஜியாங்கில் உள்ள பகுதியில் ஒரு மெடிக்கல் உள்ளது. இந்த மெடிக்கலின் membership card ஒருவர் வைத்துள்ளார். இவர் அந்த மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கியுள்ளார். கருத்தடை மாத்திரைக்கான தொகை 200 ரூபாயை மொபைல் Payment Code மூலம் செலுத்திவிட்டு சென்றுள்ளார்.

    ஆனால் Payment Failed ஆகியுள்ளது. இதனால் மெடிக்கல் ஸ்டாஃப் அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது அந்த நபரின் போனை, அவரது மனைவி எடுத்துள்ளார். அப்போது மெடிக்கல் ஸ்டாஃப் தாங்கள் செலுத்திய 200 ரூபாய் கிரெடிட் ஆகவில்லை எனத் தெரிவித்துள்ளார். 200 ரூபாய்க்கு என்ன வாங்கினார்? என மனைவி கேட்க, மெடிக்கல் ஸ்டாஃப் கருத்தடை மாத்திரை வாங்கினார் எனக் கூறியுள்ளார்.

    இதனால் அந்த நபரின் கள்ளக்காதல் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இது இரண்டு குடும்பத்திலும் கடும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் இரண்டு குடும்பத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தன்னுடைய தனிப்பட்ட தகவலை, மனைவிடம் பகிர்ந்ததற்காக அந்த மெடிக்கல் மீது புகார் அளித்துள்ளார்.

    என்னதாக இருந்தாலும், அந்த நபர் தன்னுடைய தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், மெடிக்கல் ஸ்டாஃப் வேண்டுமென்றே தகவலை தெரிவித்துள்ளாரா? என்பது விசாரணையில்தான் தெரியவரும்.

    • ஒவ்வொரு நாளும் தனது வீட்டில் அச்சத்துடன் வசித்து வந்த ராகவி, சதீஸ்குமாரை செல்போனில் அழைத்து தன்னை அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
    • ராகவி அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் அருகேயுள்ள பொட்டபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜா மகன் சதீஸ்குமார் (வயது 21). படித்துவிட்டு கிடைத்த வேலைக்கு சென்று வந்தார். தும்பப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்பரது மனைவி ராகவி (29). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் செல்வம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் பொட்டபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் ராகவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    இதற்கிடையே சதீஸ்குமாருக்கும், ராகவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. முதலில் செல்போனில் மட்டும் பேசி வந்த இருவரும் பின்னர் தங்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் ஊர் சுற்றி வந்தனர். ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு யாரிடமும் கூறாமல் ஊரை விட்டு சென்று வேறொரு ஊரில் தம்பதியராக வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் ராகவியின் பெற்றோர், தங்கள் மகள் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனை அறிந்த சதீஸ்குமார், ராகவியை மீண்டும் அவரது வீட்டில் கொண்டு சென்று விட்டு வந்தார்.

    அப்போது முதல் ராகவியை அவரது சகோதரர் ராகுல் மற்றும் உறவினர்களான சரிதா, அழகர், ஆறுமுகம், கண்ணாயி, மணிமேகலை ஆகியோர் வீட்டுக்காவலில் பூட்டி வைத்துள்ளனர். சதீஸ்குமாருடன் செல்ல நினைத்தால் உங்கள் இருவரையும் கொன்று விடுவோம் என்றும் கூறி மிரட்டியுள்ளனர். இதனால் வேறுவழி யின்றி ராகவி அந்த வீட்டிலேயே அடைபட்டு கிடந்தார்.

    ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சில காலம் கழித்து அழைத்து செல்வதாக சதீஸ்குமார் கூறிச்சென்றார். அதுவரை அவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். ஆனாலும் ஒவ்வொரு நாளும் தனது வீட்டில் அச்சத்துடன் வசித்து வந்த ராகவி, சதீஸ்குமாரை செல்போனில் அழைத்து தன்னை அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதே வீட்டில் வாழ்ந்தால் தன்னுடையே பெற்றோரும், சகோதரர்களும் அடித்து கொன்றுவிடுவார்கள் என்று கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து மீண்டும் ராகவியை தன்னுடன் அழைத்து செல்ல நேற்று சதீஸ்குமார் பொட்டபட்டிக்கு வந்திருந்தார்.

    பின்னர் ராகவியை அழைத்துக்கொண்டு கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர், தங்களை சேர்த்து வைக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு உறவினர்களை அழைத்து பேசிய போலீசார், கணவரை இழந்த பெண் என்பதாலும், இருவரும் மேஜர் என்பதாலும் அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நள்ளிரவில் சதீஸ்குமார், ராகவி இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    ஆனாலும் ஆத்திரம் தீராத ராகவியின் சகோதரர் ராகுல் சதீஸ்குமாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக தனது நண்பர்கள் அய்யனார், அருள்பாண்டி இருவரையும் அழைத்து திட்டம் தீட்டினார். அதன்படி சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற சதீஸ்குமார், ராகவியை காரில் பின்தொடர்ந்தனர்.

    அய்யப்பட்டி அருகே சென்றபோது அந்த காரில் வந்தவர்கள் சதீஸ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் இருள் சூழ்ந்த பகுதிக்கு சதீஸ்குமாரை மட்டும் இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர்.

    இதில் சதீஸ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் காரில் வந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. சாலையில் பலத்த காயங்களுடன் கிடந்த ராகவி கொடுத்த தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் அடித்து கொலை செய்யப்பட்ட சதீஸ்குமாரின் உடலை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த ராகவி 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பாக ராகவி அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சதீஸ்குமாரை கொலை செய்தது ராகவியின் உறவினர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி.

    குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் (6) என்ற மகனும் கார்னிகா (4) என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.

    டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவரான விஜய்க்கு தெரியவர அவர் கண்டித்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார்.

    கடந்த 2018-ம் ஆண்டு தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார். இருப்பினும் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிராமியை தேடிவந்தனர். அப்போது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, அபிராமி மற்றும் கள்ளக்காதலன் சுந்தரத்துக்கு தண்டனை விவரங்களை சற்று நேரத்தில் அறிவிப்பதாக கூறிய நீதிபதி, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். 

    • கடந்த 2018-ம் ஆண்டு தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.
    • கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

    குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.

    டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவரான விஜய்க்கு தெரியவர அவர் கண்டித்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார்.

    கடந்த 2018-ம் ஆண்டு தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார். இருப்பினும் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிராமியை தேடிவந்தனர். அப்போது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தண்டனை விவரங்களை சற்று நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் வழங்க உள்ளது. 

    • கணவருக்கு கொடுத்த உணவில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார்.
    • மின்சாரம் தாக்கி இறந்ததால் கரண் தேவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வாங்கிச் சென்ற உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.

    டெல்லி உத்தம் நகரை சேர்ந்தவர் கரண் தேவ் (வயது 36). இவரது மனைவி சுஷ்மிதா. கரண்தேவின் உறவினர் ராகுல் (24). ராகுல் அடிக்கடி சகோதரர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    அப்போது சுஷ்மிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கரண்தேவ் வேலைக்கு சென்ற பிறகு சுஷ்மிதா ராகுலுடன் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்தார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கரண்தேவுக்கு தெரியவந்தது.

    கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.

    இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட சுஷ்மிதா முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த 13-ந்தேதி இரவு கணவருக்கு கொடுத்த உணவில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார். தூக்க மாத்திரை கலந்த உணவை சாப்பிட்ட கரண் தேவ் சாகாமல் மயங்கி கிடந்தார்.

    சுஷ்மிதா, ராகுலுக்கு போன் செய்து தனது வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கரண் தேவின் உடலில் மின்சாரம் பாய்ச்சி துடிதுடிக்க கொலை செய்தனர்.

    இதையடுத்து கரண் தேவை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கரண்தேவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    கரண்தேவின் உறவினர்களிடம் மின்சாரம் தாக்கியதில் கணவர் இறந்து விட்டதாக சுஷ்மிதா தெரிவித்தார். மின்சாரம் தாக்கி இறந்ததால் கரண் தேவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வாங்கிச் சென்ற உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.

    இந்த நிலையில் கரண்தேவின் சகோதரர் குணால் சுஷ்மிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தார். அதில் சுஷ்மிதா ராகுலுடன் நீண்ட நேரம் அரட்டை அடித்தது தெரியவந்தது. மேலும் கணவரை கொலை செய்வது குறித்து ராகுலுடன் ஆலோசித்ததும் தெரிந்தது.

    போலீசார் சுஷ்மிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராகுல் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 

    • கணவர் உயிரிழந்த நிலையில் இரண்டு மைத்துனர்களுடன் குடும்பம் நடத்திய மனைவி.
    • நிலத்தை விற்க மாமியார் எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை செய்து, நகை கொள்ளையடிப்பு.

    உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் 54 வயது பெண் கொலை செய்யப்பட்டு, தங்க நகைகள் கொள்ளைடிக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மருமகளின் குட்டு அம்பலமாகியுள்ளது.

    ஜான்சியில் உள்ள கும்ஹாரியா கிராமத்தில் சுஷிலா தேவி என்ற பெண் வசித்து வந்தார். இவர் கணவரை இழந்தவர். இவர் கடந்த ஜூன் 24ஆம் தேதி வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அத்துடன் வீட்டில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    இதனால் போலீசார் கொள்ளையை தடுக்க முயன்றபோது, சுஷிலா தேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில்தான் அனில் வர்மா என்பவர் நகையை விற்பனை செய்ய முயற்சித்தபோது போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசார் மீது அனில் வர்மா துப்பாக்கிச்சூடு நடத்தினார். போலீசாருக்கு பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை பிடித்தனர்.

    இதற்கிடையே சுஷிலா தேவியின் மருமகன் பூஜா அதே வீட்டில் வசித்து வந்தார். அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சிகரமான பல தகவல் வெளியானது.

    சுஷிலா தேவியின் மூத்த மகனின் மனைவிதான் பூஜா. கணவன் இறந்த பிறகு, கணவரின் தம்பி கல்யாண் சிங் உடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். கல்யாண் சிங்கும் மரணமடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, உறவின்முறை மாமனார் மற்றும் மற்றொரு மைத்துனர் சந்தோஷ் ஆகியோர் பூஜாவை பூர்வீக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

    அங்கு வந்த பூஜா, மைத்துனரான சந்தோஷ் உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். சந்தோஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர். சந்தோஷ் உடனான தொடர்பால் பூஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு சந்தோஷின் சட்டப்பூர்வ மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 9 மாதங்களாக அவர் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    சுஷிலா தேவியின் மூன்று மகன்களுக்கும் மனைவியானதால், வீட்டுத் தலைவி அந்தஸ்தை பிடித்துள்ளார். அத்துடன் கணவர் குடும்பத்தின் விவசாய நிலத்தை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். கணவர் குடும்பத்தினருக்கு சுமார் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. அவருக்கு இதில் பாதி நிலம் என்பதை வலியுறுத்தி அதை விற்பனை செய்து விட்டு குவாலியருக்கு செல்ல முடிவு செய்துள்ளார். சந்தோஷ் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சுஷிலா தேவி ஒப்புக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து மாமியார் சுஷிலா தேவியை கொலை செய்ய பூஜா முடிவு செய்துள்ளார். அதன்படி திட்டம் தீட்டியுள்ளார். தனது சகோதரி மற்றும் சகோதரியின் காதலன் (அனில் வர்மா) ஆகியோர் உதவியுடன் சுஷிலா தேவியை கொலை செய்து, நகை கொள்ளை அடிக்கப்பட்டதாக நாடகமாடியுள்ளனர்.

    போலீசாரின் விசாரணையில் குற்றத்தை பூஜா ஒப்புக்கொண்டுள்ளார். பூஜாவும், அவரது சகோதரியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட அனில் வர்மா மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பூஜா கொலையில் ஈடுபட்டடு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கணவன் மற்றும் கணவரின் தம்பி மரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

    • கள்ளக்காதலை கைவிட வேண்டும் என பலமுறை எச்சரிக்கை விடுத்தனர்.
    • நிர்வாணப்படுத்தி இரும்பு கம்பத்தில் கட்டி வைத்து வெந்நீரை ஊற்றி சித்ரவதை செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஹனுமகொண்டா, தர்மசாகர் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    இது குறித்து இளம் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் கள்ளக்காதலை கைவிட வேண்டும் என பலமுறை எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து வைத்து அறிவுரை வழங்கினர். இருப்பினும் இளம்பெண் வாலிபருடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களது உறவினர்கள் நேற்று இளம்பெண்ணை நடுரோட்டில் வைத்து சரமரியாக தாக்கினர்.

    பின்னர் அவரை நிர்வாணப்படுத்தி இரும்பு கம்பத்தில் கட்டி வைத்து வெந்நீரை ஊற்றி சித்ரவதை செய்தனர். மேலும் இளம்பெண் மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு மொட்டை அடித்தனர்.

    இதுகுறித்து சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை மீட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் உறவினர்கள் 5 பேரை கைது செய்தனர்.

    இளம் பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • கணவனுக்குத் தெரியாமல் கள்ளக்காதலனுடன் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.
    • வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனதில் ராம் கிலாவன் அவரது மனைவியின் மூக்கை கடித்து துப்பினார்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்ந்தவர் ராம் கிலாவன். இவர் தனது 25 வயதுடைய மனைவியுடன் சொந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில் ராம் கிலாவனின் மனைவிக்கு அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவனுக்குத் தெரியாமல் கள்ளக்காதலனுடன் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.

    இதை அறிந்து கொண்ட ராம் கிலாவன் ஒரு நாள் கள்ளக்காதலன் வீட்டிற்குச் சென்ற தனது மனைவியை பின்தொடர்ந்து சென்றார். அங்கு கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த தன் மனைவியை கையும் களவுமாக பிடித்தார்.

    அப்போது அங்கே 3 பேருக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனதில் ராம் கிலாவன் அவரது மனைவியின் மூக்கை கடித்து துப்பினார். மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.

    காயம் அடைந்த அந்தப்பெண் வீறிட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் சம்பவம் நடந்த அந்த வீட்டை சூழ்ந்து கொண்டனர். மூக்கிலிருந்து ரத்தம் நிறைய வழிவதைப் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த ஹரியவான் போலீசார் காயமடைந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ராம் கிலாவன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×