என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mother arrest"
- முதல் கணவருக்கு 2 குழந்தைகள் பிறந்தவுடன் இளம்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
- இளம்பெண்ணின் மூத்த மகள் மீண்டும் 3 மாத கர்ப்பம் ஆனார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வட்லூரை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இளம்பெண்ணின் கணவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2007-ல் இறந்தார்.
கணவர் இறந்த பிறகு தனது தாய் மாமன் சதீஷ்குமார் (வயது 43) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தனது 2 மகள்களையும் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் சேர்த்து அங்கேயே தங்க வைத்தார்.
முதல் கணவருக்கு 2 குழந்தைகள் பிறந்தவுடன் இளம்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
2-வது திருமணம் செய்து கொண்ட சதீஷ்குமார் சில மாதங்களுக்கு பிறகு தனக்கு குழந்தை பெற்று தர வேண்டும். இல்லையென்றால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வேன் என அடம்பிடித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு பதிலாக என்னுடைய மகள் மூலம் குழந்தை பெற்றுக்கொள் என கூறினார்.
இதையடுத்து விசாகப்பட்டினத்திற்கு வந்த இளம்பெண் அங்கு 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது மூத்த மகளை 2-வது கணவரிடம் ஒப்படைத்தார். சிறுமியின் கடும் எதிர்ப்பையும் மீறி சதீஷ்குமார் பலாத்காரம் செய்தார்.
இதனால் சிறுமி கர்ப்பமானார். சிறுமி கர்ப்பமான விஷயம் வெளியே தெரிந்தால் அவதூறாக பேசுவார்கள் என கூறி டாக்டரிடம் அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர்.
ஆனால் மீண்டும் சிறுமி கர்ப்பமாகி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது சதீஷ்குமார் தனக்கு பெண் குழந்தை தேவையில்லை. ஆண் குழந்தை தான் வேண்டும் என அடம் பிடித்தார்.
இதையடுத்து விசாகப்பட்டினம் சென்ற இளம்பெண் தனது 2-வது மகளை அழைத்து வந்தார். அவரையும் சதீஷ்குமார் பலாத்காரம் செய்தார். இதனால் கர்ப்பமான சிறுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் கருவிலேயே இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இறந்த நிலையில் பிறந்த குழந்தையை தூக்கிச் சென்று கால்வாயில் வீசி விட்டனர்.
இதனால் இளம்பெண்ணிற்கும் சதீஷ் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தனது 2 மகள்களையும் சதீஷ்குமாரிடம் விட்டு விட்டு இளம்பெண் விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் சதீஷ்குமார் மற்றும் சிறுமிகளை அழைத்து கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணின் மூத்த மகள் மீண்டும் 3 மாத கர்ப்பம் ஆனார். இது குறித்த தகவல் அறிந்த இளம்பெண் ஏலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் அவருக்கு துணையாக இருந்த சிறுமியின் தாய் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
சிறுவயதிலேயே குழந்தை பெற்ற சிறுமிகள் தவித்து வருகின்றனர்.
- தாசில்தார் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரேணுகா, ரேவதியை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
நீடாமங்கலம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்தவர் முத்து. இவருக்கும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா வேடம்பூர் கிராமத்தை சேர்ந்த ரேணுகா எண்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதனால் ரேணுகா தனது 3 பிள்ளைகளுடன் வேடம்பூரில் உள்ள வீட்டில் தாய்- தந்தையுடன் வசித்து வந்தார். அவர் அங்கிருந்து குடவாசலில் உள்ள ஜவுளிக்கடையில் வேலைக்கு சென்றார். அப்போது அதே கடையில் வேலைபார்க்கும் கமலேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
இது கள்ளக்காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகினர். இதில் ரேணுகா கர்ப்பம் அடைந்து கடந்த 22-ந்தேதி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் பச்சிளம் குழந்தையை ரேணுகா, அவரது தாயார் ரேவதி ஆகியோர் சேர்ந்து வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் புதைத்துள்ளதாக வலங்கைமான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு ரேணுகா, ரேவதி இல்லாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை தேடி வந்தனர்.
இதற்கிடையே தாசில்தார் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரேணுகா, ரேவதியை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
ரேணுகா கணவரை விட்டு பிரிந்த நிலையில் தன்னுடன் வேலைப்பார்த்த கமலேஷ் என்பவருடன் பழகி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் ஊரில் உள்ளவர்கள் அவமானப்படுத்துவார்களே என எண்ணினார். இது குறித்து தாய் ரேவதியிடம் கூறியுள்ளார்.
பின்னர் அவர்கள் பச்சிளம் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் பஸ்சில் ஊருக்கு வந்துள்ளனர். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கட்டைபையில் குழந்தையை போட்டனர். அங்குள்ள ஒரு பாலத்தின் பக்கவாட்டு சுவரில் ஈவு இரக்கமின்றி குழந்தையை தூக்கி ஓங்கி அடித்தனர். இதில் அந்த பச்சிளங் குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதையடுத்து வீட்டின் பின்புறம் இருவரும் சேர்ந்து புதைத்தனர். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் இருவரும் உண்மையை கூறியதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் பால்ராஜ். சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரூபினி (வயது 30). இவர்களுக்கு தேவிஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது.
நேற்று காலை தேவிஸ்ரீ சரவணம்பட்டி கரட்டு மேடு முருகன் கோவில் கிரிவலப்பாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் தாய் ரூபினி தனது குழந்தையை காணவில்லை என அந்த பகுதிக்கு வந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரூபினி கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலன் தமிழுடன் சேர்ந்து குழந்தையை கொன்றதாக கூறினார்.
இதையடுத்து போலீசார் ரூபினியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனக்கும் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தேவிஸ்ரீ என்று பெயர் வைத்தோம்.
இந்தநிலையில் எனக்கும், பால்ராஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் எனது கணவர் என்னையும், குழந்தையையும் பிரிந்துசென்றார். எனவே நான் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தேன்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து எனது செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. நான் அந்த இணைப்பை துண்டித்து விட்டேன். மீண்டும் மீண்டும் அந்த எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எனவே அழைப்பை ஏற்று பேசினேன். அதில் பேசிய நபர் தன்னுடைய பெயர் தமிழ் என்று கூறினார். கணவரை பிரிந்து தனிமையில் வசித்த எனக்கு தமிழின் பேச்சு ஆறுதல் படுத்தும் வகையில் இருந்தது.
அவரது பேச்சில் மயங்கிய நான் அடிக்கடி அவருடன் பேசி வந்தேன். பின்னர் நாங்கள் ஒருவரை, ஒருவர் அடிக்கடி நேரில் சந்தித்து தனிமையில் ஜாலியாக இருந்து வந்தோம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நான் வீட்டில் இருந்த போது தமிழ் என்னை தொடர்பு கொண்டார். அப்போது என்னிடம் நீ எதற்காக தனியாக வசிக்கிறாய்? குழந்தையை அழைத்துக்கொண்டு சரவணம்பட்டிக்கு வா, நான் வீடு வாடகைக்கு எடுத்து தருகிறேன். நாம் சேர்ந்து வாழலாம் என கூறினார்.
இதனையடுத்து நான் குழந்தையை அழைத்துக்கொண்டு சரவணம்பட்டிக்கு வந்தேன். பின்னர் நாங்கள் கணவன்-மனைவி என கூறி பல இடங்களில் வீடு தேடி அழைந்தோம். ஆனால் வீடு கிடைக்கவில்லை. இரவானதால் கரட்டுமேட்டில் உள்ள அரசு பள்ளியில் தங்கினோம்.
அப்போது நாங்கள் உல்லாசமாக இருந்தோம். அப்போது தேவிஸ்ரீ அழுது கொண்டே இருந்தாள். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் குழந்தை இருந்தால் எங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் குழந்தையை கொலை செய்வது என முடிவு செய்தோம்.
அதன்படி தமிழிடம் விஷம் வாங்கி வரும்படி கூறினேன். அவர் கடைக்கு சென்று விஷத்தை வாங்கி வந்தார். பின்னர் நான் விஷத்தை பிஸ்கட்டில் தடவி பாலில் கலந்து கொடுத்தேன். இதை சாப்பிட்ட குழந்தை சிறிது நேரத்தில் மயங்கியது. இதனையடுத்து குழந்தையை எனது கள்ளக்காதலன் தமிழிடம் கொடுத்தேன். அப்போது குழந்தைக்கு உயிர் பிரியாமல் இருந்தது. பின்னர் தமிழ் குழந்தையை தனது கையால் தாக்கினார். அப்போது தேவிஸ்ரீ இறந்தாள். பின்னர் எங்கேயாவது கொண்டு வீசி விட்டு வரும்படி தமிழிடம் கூறினேன். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அரை மணி நேரத்தில் வந்து விடுவதாக கூறினார். அதன் பின்னரும் அவர் வரவில்லை.
பின்னர் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது ஒன்றும் தெரியாதது போல தேவிஸ்ரீ போட்டோவை காண்பித்து எனது குழந்தையை காணவில்லை என கூறி நாடகமாடினேன். சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.
இதனையடுத்து போலீசார் உல்லாசத்து இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய் ரூபினியை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ரூபினியின் கள்ளக்காதலன் தமிழ் (36) என்பவரை போலீசார் 3 தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த தனியார் பெட்ரோல் பங்க் ஊழியரின் மனைவி கடந்த 14-ந்தேதி தனது 3½ வயது பெண் குழந்தையுடன் மாயமானார்.
அதன் பின் 3 நாட்களுக்கு முன்பு குழந்தையுடன் வீட்டிற்கு திரும்பி வந்தார்.
விசாரணையில் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் உள்ள உறவுக்கார வாலிபர்கள் சிவா மற்றும் மணி ஆகியோருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் அவர்களுடன் சென்று தங்கியது தெரிய வந்தது.
இந்த நிலையில் பெண் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவா, மணி ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேலும் குழந்தையின் மீதான பாலியல் கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துறவிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் மனைவி நடாயி (வயது 42). பிச்சை எடுக்கும் தொழில் செய்து வரும் அவர், கிடைக்கும் வருமானத்தில் தினமும் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இவர் நேற்று காலை அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் ஒரு மது பாட்டிலில் இருந்து மது அருந்தியுள்ளார். பின்னர் அவர் தான் மடியில் வைத்திருந்த ஒன்றரை வயது கைக்குழந்தையின் வாயில் மதுவை ஊற்றியுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் வந்து நடாயியையும், குழந்தையையும் மீட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் புதுக்கோட்டை சைல்டுலைன் திட்ட இயக்குனர் லில்லிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சைல்டுலைன் பணியாளர்கள் ரஞ்சிதா, முருகேஸ்வரி ஆகியோர் வந்து, மது போதையில் இருந்த நடாயியையும், ஒன்றரை வயது குழந்தையையும் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகின்றனர். அறந்தாங்கியில் ஒன்றரை வயது குழந்தைக்கு தாயே மது கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் தற்போது மதுபானம் பெட்டிக்கடைகளில் கூட சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. இதுகுறித்து மது விலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் கண்டுகொள்வதில்லை.
அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்களில் மதுவிற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. 24 மணி நேரமும் மதுபானம் தடையின்றி கிடைப்பதால், இளைஞர்கள் பலர் மது போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான பெண் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தைக்கு பால் புகட்டுவதற்கு பதிலாக மது புகட்டியது பலரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
குழந்தைக்கு மது கொடுத்தது பற்றி நடாயி கூறுகையில், மது அருந்தும் தான் போதையில் மயங்கி விட்டால், ஒன்றரை வயது குழந்தை எங்காவது சென்று விடும் என்பதால், அந்த குழந்தைக்கும் மது கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்தி விடுவதாக கூறியுள்ளார்.
சித்தூர் மாவட்டம் பில்லிக்குண்டலப்பள்ளியைச் சேர்ந்தவர் வினோத்குமார், விவசாயி. இவருடைய மனைவி புவனேஸ்வரி. பிப்ரவரி மாதம் 26-ந்தேதி இவர்களுடைய 6 மாத ஆண் குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு, அன்று கணவன்-மனைவி இருவரும் விவசாயப் பணிகளுக்காக வயலுக்குச் சென்றுள்ளனர்.
திரும்பி வந்து பார்த்தபோது, குடிசை வீட்டில் தூங்க வைத்திருந்த ஆண் குழந்தை நீர்நிறைந்த பிளாஸ்டிக் டிரம்மில் பிணமாக கிடந்தது. தாங்கள் வேலைக்குச் சென்ற நேரத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் யாரோ குடிசை வீட்டுக்குள் நுழைந்து, தூங்கி கொண்டிருந்த ஆண் குழந்தையைக் கொன்று நீர்நிறைந்த பிளாஸ்டிக் டிரம்மில் பிணத்தை வீசி விட்டுச் சென்று விட்டதாக கூறினர். இதுபற்றி ஸ்ரீரங்கராஜபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகனை, பெற்ற தாயே கொலை செய்தது தெரிய வந்தது.
பில்லிக்குண்டலப்பள்ளியைச் சேர்ந்த நாகராஜ்-ராஜம்மா தம்பதியரின் மகள் புவனேஸ்வரி. இவர், எகுவமெதவாடா கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை காதலித்தார். திருமணத்துக்கு முன் இருவரும், ஒருநாள் திடீரென வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். மகளை காணவில்லை என, புவனேஸ்வரியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, வினோத்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த அவர், புவனேஸ்வரியை பொதட்டூர்பேட்டையில் வைத்து, திருமணம் செய்து கொண்டு எகுவமெதவாடா கிராமத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்தார். புவனேஸ்வரிக்கு தலைப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் வீட்டை மறந்திருந்த அவர், தனக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்ததும், பெற்றோர் வீட்டுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார்.
புவனேஸ்வரி 2-வதாக கர்ப்பிணியானார். அவருக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மூத்த மகன் மீது அதிகம் பாசம் வைத்திருந்த வினோத்குமார், இளைய மகன் மற்றும் புவனேஸ்வரி மீது அவ்வளவாக பாசம் வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கணவர், தன்னையும் இளைய மகனையும் சரியாக கவனிக்கவில்லை, பாசம் வைக்கவில்லை எனக் கருதிய புவனேஸ்வரி கடும் மனவேதனையில் இருந்து வந்தார். கணவரின் மனதை மாற்ற முயன்றும், அவரின் முயற்சி பலன் அளிக்கவில்லை. வினோத்குமாரின் போக்கிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
6 மாதமேயான இளைய மகனை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என அவர் முடிவெடுத்தார். அதன்படி பிப்ரவரி மாதம் 26-ந்தேதி குடும்பத்தினர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புவனேஸ்வரி தனது இளைய மகனை நீர்நிறைந்த பிளாஸ்டிக் டிரம்மில் மூழ்கடித்துக் கொலை செய்தார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி டிரம்மை மூடி விட்டு வயலுக்குச் சென்று விட்டதாக கபட நாடகம் ஆடிய விவரம் தெரிய வந்தது. இதையடுத்து புவனேஸ்வரியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வாணியம்பாடி, பிப்.17-
வாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய்-கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங்களூரை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் 7 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 குழந்தைகள். 3-வது குழந்தை ரித்திகா (வயது 1½) பெங்களூரில் குடும்பம் நடத்தி வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முரளி என்பவருடன் நளினிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட தகராறில் கணவரை பிரிந்து வாணியம்பாடிக்கு வந்தார். நேற்று முன்தினம் நளினி வீட்டுக்கு முரளி வந்திருந்தார். அப்போது நளினி கடைக்கு சென்று விட்டார். திரும்பி வந்த போது குழந்தை ரித்திகா உடலில் காயத்துடன் உயிருக்கு போராடியது.
வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் குழந்தை இறந்து விட்டது. வாணியம்பாடி டவுன் போலீசார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து நளினி அவரது கள்ளக்காதலன் முரளி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நளினி, முரளியை கைது செய்தனர். குழந்தைக்கு பாலியல் தொல்லை செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது28). இவர் சென்னையில் வேலை செய்யும்போது நெசப்பாக்கத்தை சேர்ந்த மஞ்சுளாவுடன் (வயது 37) கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் கணவருக்கு தெரியவரவே கள்ளக்காதலனுடனான தொடர்பை மஞ்சுளா நிறுத்திக்கொண்டார்.
இதற்கு மஞ்சுளாவின் மகன் ரித்தேஷ் (10) காரணம் என நினைத்து அவனை நாகராஜ் கடத்திக் கொலை செய்தார். இந்த சம்பவத்தில் நாகராஜை போலீசார் கைது செய்தனர்.
ஜாமீனில் வெளியேவந்த அவர் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதியன்று மாலை 5 பேர் கொண்ட கும்பல் நாகராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக நாகராஜின் கள்ளக்காதலி மஞ்சுளா மற்றும் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார், அரும்பாக்கத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் ஆகியோர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தனர். தொடர்ந்து போலீசார் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சஞ்சீவி (19) என்பவரையும் கைது செய்தனர்.
சென்னை கோர்ட்டில் சரண் அடைந்த மஞ்சுளா உள்பட 5 பேரும் கடந்த 7-ந் தேதி மாலையில் திருவண்ணாமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை திருவண்ணாமலை டவுன் போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
மஞ்சுளா உள்பட 5 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது.
மஞ்சுளா தனது மகன் ரித்தேஷ் கொலைக்கு பழிவாங்குவதற்காக நாகராஜை கொலை செய்ய முடிவு செய்தார். முதலில் இதற்காக ஒரு கும்பலிடம் கள்ளத்துப்பாக்கி ஒன்றை வாங்கி உள்ளார்.
ஆனால் அவர்கள் மஞ்சுளாவிற்கு பொம்மை துப்பாக்கியை கொடுத்து ஏமாற்றி உள்ளனர். கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரத்தில் மஞ்சுளா சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தார்.
தொடர்ந்து அவர் நாகராஜை கொலை செய்ய வேண்டும் என்ற ஆத்திரத்திலும், மகன் ரித்தேஷ் இறந்த துக்கத்திலும் காணப்பட்டார்.
அப்போது அவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரின் வீட்டிற்கு வெள்ளையடிப்பதற்காக சரவணன் வந்து உள்ளார்.
சோகத்துடன் காணப்பட்ட மஞ்சுளாவிடம் அவர் பேச்சுக் கொடுத்து உள்ளார். நடந்த சம்பவத்தை மஞ்சுளா சரவணனிடம் கூறியுள்ளார். பின்னர் அவர் மஞ்சுளாவிற்கு ஆறுதல் தெரிவித்து பேசி வந்து உள்ளார்.
சரவணனிடம் "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், நாகராஜை கொலை செய்ய வேண்டும்" என்று மஞ்சுளா கூறியுள்ளார். அதனை கேட்ட சரவணன் தனது நண்பர்கள் மூலம் நாகராஜை கொலை செய்வதாக மஞ்சுளாவிடம் வாக்குறுதி அளித்து உள்ளார். இதற்காக அவர் மஞ்சுளாவிடம் அடிக்கடி பணம் வாங்கி உள்ளார்.
பின்னர் சரவணன் தனது நண்பர்கள் தினேஷ்குமார், ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சஞ்சீவி ஆகியோருடன் கடந்த 29-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்து நாகராஜை வெட்டி கொலை செய்துள்ளார்.
மேற்கண்ட தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீஸ் காவல் முடிந்து மஞ்சுளா சென்னை ஜெயிலிலும் மற்ற 4 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
மஞ்சுளாவின் 10 வயது மகன் ரித்தேஷ் என்பவரை நாகராஜ், கடந்த மார்ச் மாதம் கடத்தி கொலை செய்தார். இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நாகராஜ் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, நாகராஜ் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 29-ந்தேதி மாலை கடைக்கு அருகே மர்ம கும்பலால் நாகராஜ் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கூலிப்படை உதவியுடன் கள்ளக்காதலன் நாகராஜை மஞ்சுளா கொலை செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில், நாகராஜ் கொலையில் தேடப்பட்டு வந்த மஞ்சுளா மற்றும் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ் குமார், அரும்பாக்கத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் உள்ளிட்ட 5 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் 7-வது நீதிமன்ற நீதிபதி பஷீர் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். 5 பேரையும் 4-ந்தேதி வரை சிறையில் அடைக்கவும், அன்றைய தினம் திருவண்ணாமலை கோர்ட்டில் 5 பேரையும் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை டவுன் போலீசார் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
கூலிப்படையை சேர்ந்த மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். நேற்று சென்னை சென்ற தனிப்படை போலீசார் அரும்பாக்கத்தை சேர்ந்த சஞ்சீவி (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.