என் மலர்

  நீங்கள் தேடியது "baby murder"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாசில்தார் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரேணுகா, ரேவதியை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

  நீடாமங்கலம்:

  நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்தவர் முத்து. இவருக்கும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா வேடம்பூர் கிராமத்தை சேர்ந்த ரேணுகா எண்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகளும் உள்ளனர்.

  இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதனால் ரேணுகா தனது 3 பிள்ளைகளுடன் வேடம்பூரில் உள்ள வீட்டில் தாய்- தந்தையுடன் வசித்து வந்தார். அவர் அங்கிருந்து குடவாசலில் உள்ள ஜவுளிக்கடையில் வேலைக்கு சென்றார். அப்போது அதே கடையில் வேலைபார்க்கும் கமலேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

  இது கள்ளக்காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகினர். இதில் ரேணுகா கர்ப்பம் அடைந்து கடந்த 22-ந்தேதி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

  இந்நிலையில் பச்சிளம் குழந்தையை ரேணுகா, அவரது தாயார் ரேவதி ஆகியோர் சேர்ந்து வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் புதைத்துள்ளதாக வலங்கைமான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு ரேணுகா, ரேவதி இல்லாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை தேடி வந்தனர்.

  இதற்கிடையே தாசில்தார் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

  இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரேணுகா, ரேவதியை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

  அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

  ரேணுகா கணவரை விட்டு பிரிந்த நிலையில் தன்னுடன் வேலைப்பார்த்த கமலேஷ் என்பவருடன் பழகி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் ஊரில் உள்ளவர்கள் அவமானப்படுத்துவார்களே என எண்ணினார். இது குறித்து தாய் ரேவதியிடம் கூறியுள்ளார்.

  பின்னர் அவர்கள் பச்சிளம் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் பஸ்சில் ஊருக்கு வந்துள்ளனர். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கட்டைபையில் குழந்தையை போட்டனர். அங்குள்ள ஒரு பாலத்தின் பக்கவாட்டு சுவரில் ஈவு இரக்கமின்றி குழந்தையை தூக்கி ஓங்கி அடித்தனர். இதில் அந்த பச்சிளங் குழந்தை பரிதாபமாக இறந்தது.

  இதையடுத்து வீட்டின் பின்புறம் இருவரும் சேர்ந்து புதைத்தனர். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் இருவரும் உண்மையை கூறியதும் தெரியவந்தது.

  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே கணவர், குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான காதல் மனைவி தனியாக கொன்று புதைத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
  ஆற்காடு:

  வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி சந்து தெருவை சேர்ந்தவர் ராஜா (28). எலக்ட்ரீசியன், இவரது மனைவி தீபிகா (20). இருவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்களது மகன் பிரவீன் (1).

  இந்த நிலையில் தனது கணவர் மற்றும் குழந்தையை கடந்த 13-ந் தேதி முதல் காணவில்லை என்று ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தீபிகா புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில் தீபிகாவிடம் விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் ராஜா குடித்துவிட்டு அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார்.

  இதனால் விரக்தி அடைந்த நான் கடந்த 12-ந் தேதி இரவு கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரவீன் ஆகியோரை தலையில் கற்களை கொண்டு தாக்கினேன். பின்னர் தலையணையால் அமுக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன்.

  பின்னர் இருவரின் பிணத்தையும் வீட்டின் அருகே சிறிய அளவில் பள்ளம் தோண்டி புதைத்து, அதன்மேல் விறகுகளை அடுக்கி வைத்து மறைத்துவிட்டேன்.

  அவர்களை கொலை செய்யும்போது ஏற்பட்ட ரத்தக்கறைகளை துணிகளால் துடைத்து அவற்றை வீட்டின் அருகிலேயே தீவைத்து எரித்துவிட்டேன் என்று தீபிகா போலீசார் நடத்திய விசாரணையில் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

  அதைத்தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் ஆற்காடு தாசில்தார் வச்சலா மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினர் புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

  இந்த சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து தீபிகாவை கைது செய்தனர்.

  மேலும் இதில் தொடர்புடையதாக கருதி ராஜாவின் நண்பர் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வீட்டில் இருந்து 30 அடி தூரத்தில் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. தனியாக தீபிகா இதனை செய்ய முடியாது. மேலும் புதைக்கப்பட்ட பள்ளம் ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் தீபிகாவுக்கு யாரோ உடந்தையாக இருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்தனர்.

  ஆனால் தான் மட்டுமே கணவர், குழந்தையை கொன்று புதைத்தேன். வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று தீபிகா அடித்து கூறி வருகிறார். எப்படி கொலை செய்தேன் என நடித்தும் காட்டியுள்ளார்.

  போலீசார் தொடர்ந்து தீபிகா மற்றும் ராஜாவின் நண்பரிடம் விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆற்காடு அருகே கணவர் குழந்தைகளை கொன்று புதைத்த காதல் மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  ஆற்காடு:

  ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜா (வயது 25). எலக்ட்ரீசியன். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியில் வசித்து வந்த தீபிகா (20) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஒரு வயது மகன் பிரனீஷ்.

  இந்நிலையில், தீபிகா தனது கணவர் மற்றும் குழந்தையை கடந்த 13-ந் தேதி முதல் காணவில்லை என்று கதறியபடி ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்ய வந்துள்ளார்.

  அப்போது போலீசார், உங்கள் கணவரை விரைவில் கண்டுபிடித்து விடலாம் என்று சமாதானம் செய்தனர். மேலும் அவர், செல்போன் எண்ணைக் கொடுங்கள், அதை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடித்து விடலாம் என கேட்டுள்ளனர்.

  அதற்கு தீபிகா, எனது கணவர் செல்போனை வீட்டிலேயே வைத்து சென்றுவிட்டார் என்று கூறியதுடன், போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.

  இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  அப்போது தீபிகா, நான் எனது கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரனீஷ் ஆகியோரை கொன்று, வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புதைத்துவிட்டேன் என்று கூறி போலீசாரை அதிர வைத்தார்.

  தொடர்ந்து, நேற்றிரவு அங்கு சென்று போலீசார் பார்வையிட்டனர். இரவு 11 மணி ஆகிவிட்டதால், போதிய வெளிச்சம் இல்லாமல் போனது.

  இதனால் 2 பேரையும் கொன்று புதைத்ததாக கூறப்படும் இடத்தை இன்று தோண்டி பார்க்க முடிவு செய்தனர்.

  புதைக்கப்பட்ட இடத்தை தாசில்தார் வத்சலா, டி.எஸ்.பி. கலைச்செல்வன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பானு ஆகியோர் பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கபட்டனர்.


  இதையடுத்து தீபிகாவை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர். அவர் கணவர் மற்றும் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார்.

  அப்போது ராஜாவின் உறவினர்கள் ஆத்திரத்தில் தீபிகாவை தாக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தீபிகாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

  இதனையடுத்து உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இதனை கண்டு ராஜாவின் உறவினர்கள் கதறி அழுதனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர்.

  முதற் கட்ட விசாரணையில் தீபிகா அவரது கணவரை கல்லால் தாக்கி கொன்றுள்ளார். பின்னர் குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

  ராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தீபிகாவிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

  இதனையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

  மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் 3 மாத குழந்தையை கொன்றதாக தந்தை மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர்.
  வாழப்பாடி:

  வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி கிழக்குக்காடு பகுதியை சேர்ந்தவர் பூமலை. இவரது மகன் கேசவன்(33). தனியார் பால் பண்ணையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

  இவருக்கும் கோலாத்துக்கோம்பை புதூர்கிராமத்தை சேர்ந்த பி.டெக். பொறியியல் பட்டதாரி பெண் அபிராமி (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

  அபிராமி ஏற்கனவே வேறொருவருடன் திருமணமாகி விவகாரத்து பெற்றவர் என்பதால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  இவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. மகப்பேறுக்காக தாய் வீட்டிற்கு சென்ற அபிராமி, தனது மூன்று மாத ஆண் குழந்தைக்கு கீர்த்திவாசன் என பெயர் சூட்டி கொஞ்சி மகிழ்ந்து வந்தார்.

  இந்நிலையில் நேற்று மாலை கேசவன் தனது தாய் லட்சுமி மற்றும் உறவினர்கள் சிலருடன் அபிராமியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் கேசவன் தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். மனைவி தன்னுடன் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கேசவன், தனது தாயுடன் சேர்ந்து தனது குழந்தையை தூக்கிக் சென்று விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் குழந்தை இறந்ததாக கூறப்பட்டது.

  இதற்கிடையே குழந்தை கீர்த்திவாசனை தூக்கிச் சென்ற கேசவன் துணியை வைத்து மூச்சை அடைத்து கொலை செய்து விட்டதாக அபிராமி, வாழப்பாடி போலீசில், நேற்றிரவு புகார் கொடுத்தார்.

  உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து போன குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் குழந்தையை கொலை செய்ததாக கூறி கேசவன் மற்றும் மற்றும் அவரது தாய் லெட்சுமியையும் கைது செய்தனர்.

  அ.தி.மு.க.வை சேர்ந்த லெட்சுமி வாழப்பாடி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சித்தூர் அருகே கணவர் பாசம் வைக்கவில்லை எனக்கருதி 6 மாத ஆண் குழந்தையை கொன்று நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.
  ஸ்ரீகாளஹஸ்தி:

  சித்தூர் மாவட்டம் பில்லிக்குண்டலப்பள்ளியைச் சேர்ந்தவர் வினோத்குமார், விவசாயி. இவருடைய மனைவி புவனேஸ்வரி. பிப்ரவரி மாதம் 26-ந்தேதி இவர்களுடைய 6 மாத ஆண் குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு, அன்று கணவன்-மனைவி இருவரும் விவசாயப் பணிகளுக்காக வயலுக்குச் சென்றுள்ளனர்.

  திரும்பி வந்து பார்த்தபோது, குடிசை வீட்டில் தூங்க வைத்திருந்த ஆண் குழந்தை நீர்நிறைந்த பிளாஸ்டிக் டிரம்மில் பிணமாக கிடந்தது. தாங்கள் வேலைக்குச் சென்ற நேரத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் யாரோ குடிசை வீட்டுக்குள் நுழைந்து, தூங்கி கொண்டிருந்த ஆண் குழந்தையைக் கொன்று நீர்நிறைந்த பிளாஸ்டிக் டிரம்மில் பிணத்தை வீசி விட்டுச் சென்று விட்டதாக கூறினர். இதுபற்றி ஸ்ரீரங்கராஜபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகனை, பெற்ற தாயே கொலை செய்தது தெரிய வந்தது.

  பில்லிக்குண்டலப்பள்ளியைச் சேர்ந்த நாகராஜ்-ராஜம்மா தம்பதியரின் மகள் புவனேஸ்வரி. இவர், எகுவமெதவாடா கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை காதலித்தார். திருமணத்துக்கு முன் இருவரும், ஒருநாள் திடீரென வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். மகளை காணவில்லை என, புவனேஸ்வரியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, வினோத்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

  சிறையில் இருந்து வெளியே வந்த அவர், புவனேஸ்வரியை பொதட்டூர்பேட்டையில் வைத்து, திருமணம் செய்து கொண்டு எகுவமெதவாடா கிராமத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்தார். புவனேஸ்வரிக்கு தலைப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் வீட்டை மறந்திருந்த அவர், தனக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்ததும், பெற்றோர் வீட்டுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார்.

  புவனேஸ்வரி 2-வதாக கர்ப்பிணியானார். அவருக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மூத்த மகன் மீது அதிகம் பாசம் வைத்திருந்த வினோத்குமார், இளைய மகன் மற்றும் புவனேஸ்வரி மீது அவ்வளவாக பாசம் வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கணவர், தன்னையும் இளைய மகனையும் சரியாக கவனிக்கவில்லை, பாசம் வைக்கவில்லை எனக் கருதிய புவனேஸ்வரி கடும் மனவேதனையில் இருந்து வந்தார். கணவரின் மனதை மாற்ற முயன்றும், அவரின் முயற்சி பலன் அளிக்கவில்லை. வினோத்குமாரின் போக்கிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

  6 மாதமேயான இளைய மகனை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என அவர் முடிவெடுத்தார். அதன்படி பிப்ரவரி மாதம் 26-ந்தேதி குடும்பத்தினர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புவனேஸ்வரி தனது இளைய மகனை நீர்நிறைந்த பிளாஸ்டிக் டிரம்மில் மூழ்கடித்துக் கொலை செய்தார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி டிரம்மை மூடி விட்டு வயலுக்குச் சென்று விட்டதாக கபட நாடகம் ஆடிய விவரம் தெரிய வந்தது. இதையடுத்து புவனேஸ்வரியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  களக்காடு:

  நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மனைவி பாலம்மாள் (வயது 25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாலகுமார் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது.

  இந்த நிலையில் சண்முகசுந்தரம் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 5 மாதத்துக்கு முன்பு திடீரென்று இறந்து விட்டார். இதனால் பாலம்மாள் சோகத்தில் இருந்து வந்தார். இதையடுத்து பாலம்மாள், தன்னுடைய குழந்தை பாலகுமாருடன் மூலைக்கரைப்பட்டி அருகே பிள்ளையார்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

  இந்த நிலையில் நேற்று இரவு பாலம்மாள் பாலகுமாரின் கழுத்தில் சேலையால் கட்டி தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் அதே சேலையால் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுபற்றி தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தாய் மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த பாலம்மாளின் வீட்டில் அவர் எழுதிய ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

  அதில் தற்கொலை செய்தது ஏன் என்பது பற்றி பாலம்மாள் எழுதியிருந்தார். கணவர் இறந்தபின்னர் பாலம்மாளுக்கும் அவரது மாமியார் மகராசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த‌து. கணவரின் ஆதார் அட்டையை மகராசி எடுத்து வைத்துக்கொண்டு கொடுக்க மறுத்தாராம். மேலும் பாலம்மாள் மீது மகராசி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்துள்ளார்.

  அந்த புகாரின்பேரில் விஜயநாராயணம் போலீசார் மற்றும் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பாலம்மாளிடம் அவர்கள் விசாரித்தபோது போலீசார் அவதூறாகவும் பேசியதாக தெரிகிறது. இது பாலம்மாளை மனவேதனை படுத்தியது. ஏற்கனவே கணவரை பறிகொடுத்த வேதனையில் இருந்த பாலம்மாள், அடுத்து பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு உள்ளானார்.

  இதனால் ஏற்பட்ட வேதனையில் அவர் மகனை கொன்று தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே பாலம்மாள் தற்கொலை சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் அவரது உறவினர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

  இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவு அந்த வழியே சென்ற 2 அரசு பஸ்கள் மீது கல்வீசினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்து சேதமானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது.

  இதனால் அங்கு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். 6 மாத ஆண் குழந்தையை கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது இடைவிடாமல் அழுததால் பெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  வாஷிங்டன்:

  அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது.

  அந்த குழந்தைக்கு ரெய்னர் என பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில் ஜென்னா போல்வெல் பரபரப்பாக போலீஸ் நிலையம் வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டனர் என அழுது கொண்டே புகார் செய்தார்.

  அதை உண்மை என நம்பிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஜென்னாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிரமாக விசாரிக்கப்பட்டது.

  அப்போது அவர் தனது குழந்தையை குளியல் தொட்டியில் தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் குழந்தை ரெய்னரின் உடலை ஒரு பெரிய ‘பேக்’கில் அடைத்து அதை அருகில் உள்ள பூங்காவில் வீசியதாக கூறினார்.

  எனவே, ஜென்னாவை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலும் மீட்கப்பட்டது.

  பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்றது ஏன் என ஜென்னா போலீசில் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். அதில், புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது குழந்தை ரெய்னர் இடைவிடாது தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.

  இதனால் ஆத்திரம் அடைந்த ஜென்னா குழந்தையை குளியல் தொட்டியில் நிரம்பி இருந்த தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளக்குறிச்சி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து 2 வயது பெண் குழந்தையை தந்தை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  கள்ளக்குறிச்சி:

  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீ.கிருஷ்ணாபுரத்தில் விவசாய நிலத்தில் 60 அடி ஆழமுள்ள தரை கிணறு உள்ளது. கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தது. இந்த கிணற்றில் நேற்று மதியம் 2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை பிணமாக மிதந்தது.

  இதை பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கீழ்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  கிணற்றில் பிணமாக மிதந்த குழந்தை யாருடையது? குழந்தையை கிணற்றில் வீசி சென்றது யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருந்தலாகுறிச்சி பகுதியை சேர்ந்த அருள்மணி-அஞ்சலை தம்பதியரின் குழந்தை என்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீசார் கருந்தலாகுறிச்சியில் உள்ள அருள்மணி வீட்டுக்கு சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது.

  இதையடுத்து அருள் மணி மற்றும் அவரது மனைவி அஞ்சலையை தேடி வந்தனர். இந்த நிலையில் அருள்மணி வீ.கிருஷ்ணாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். அங்கு பதுங்கியிருந்த அருள்மணியை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. போலீசாரிடம் அருள்மணி கூறியதாவது:-

  எனக்கும், திருக்கோவிலூர் அருகே உள்ள கோட்டைபுதூரை சேர்ந்த அஞ்சலைக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 வயதில் அனுசியா என்ற பெண் குழந்தை இருந்தது. திருமணம் ஆனதில் இருந்து என் மனைவி அஞ்சலையின் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்தது. இதனால் எங்களுக்கிடையே பலமுறை தகராறு ஏற்பட்டது.

  கடந்த 3 நாட்களுக்கு முன்பு என்னுடன் அஞ்சலை கோபித்து கொண்டு குழந்தையை தனியாக வீட்டில் விட்டு அவளது தாய் வீடான கோட்டைபுதூருக்கு சென்று விட்டாள்.

  இதையடுத்து அவளை வீட்டுக்கு அழைத்து வர நான் கோட்டைபுதூருக்கு சென்றேன். அங்கு அஞ்சலையிடம் சமாதானம் பேசினேன். ஆனால் அவள் என்னுடன் சேர்ந்து வாழ முடியாது என்று சொல்லி விட்டாள். என்னுடன் வர மறுத்து விட்டாள். இதனால் வீட்டுக்கு தனியாக வந்தேன். என் மனைவியின் நடத்தை சரியில்லாததால் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் இது எனக்கு பிறந்த குழந்தையாக இருக்காது என சந்தேகப்பட்டேன்.

  இதனால் மனைவியின் மீது உள்ள ஆத்திரத்தில் 2 வயது குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி அருகே உள்ள வீ.கிருஷ்ணாபுரத்துக்கு குழந்தையை தூக்கி சென்றேன். அங்குள்ள விவசாய கிணற்றில் குழந்தையை தூக்கி வீசினேன். இதில் தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து விட்டது. பின்னர் காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கி கொண்டேன். ஆனால் போலீசார் எப்படியோ என்னை பிடித்து விட்டனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதையடுத்து அருள் மணியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
  ×