உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் பீர் பாட்டிலால் குழந்தையை அடித்து கொன்றேன்- தாயின் கள்ளக்காதலன் வாக்குமூலம்

குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார். ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது.
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் பீர் பாட்டிலால் குழந்தையை அடித்து கொன்றேன்- தாயின் கள்ளக்காதலன் வாக்குமூலம்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆலூரைச் சேர்ந்தவர் சக்தி (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கட்டிட பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார். இவரது மனைவி நந்தினி (25).

இவர்களுக்கு பிரவீன் (6), ஜெகநாதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் பிரவீனை ஓசூர் அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நந்தினி சேர்த்து விட்டு குழந்தை ஜெகநாதனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார். ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டது.

இந்த நிலையில் தனது பேரன் சாவில் சந்தேகம் உள்ளதாக நந்தினியின் தாயார் வள்ளி அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நந்தினியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலன் தனது மகனை கொன்றதை நந்தினி ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நந்தினியின் கள்ளக்காதலனான ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

கணவர் இறந்த பிறகு நந்தினி 2 குழந்தைகளுடன் ஓசூர் தேர்பேட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவளுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி நந்தினியுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். கடந்த மாதம் 6-ந் தேதி நந்தினி வீட்டிற்கு சென்று அவளுடன் உல்லாசமாக இருந்தேன்.

குழந்தை எங்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்தது. அதனால் ஆத்திரத்தில் நான் பீர்பாட்டிலால் குழந்தையின் தலையில் தாக்கினேன். இதில் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஒரு நாள் கழித்து குழந்தையை ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நந்தினி சேர்த்தாள். அங்கு குழந்தை படியில் இருந்து விழுந்ததில் காயம் அடைந்ததாக கூறி நாடகமாடினார். பின்னர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை 22-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆனது. அங்கிருந்து வீட்டிற்கு வந்த குழந்தை கடந்த 25-ந் தேதி காலை திடீரென இறந்து விட்டது. பின்னர் உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் நாங்கள் 2 பேரும் புதைத்து விட்டோம். நந்தினியின் தாய் கொடுத்த புகாரால் நான் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com