என் மலர்
நீங்கள் தேடியது "3 youths arrested"
- சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் சந்தேகம்.
- சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி பிருந்தா (வயது 25). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தர்ஷினி என்ற 2½ வயது பெண் குழந்தை உள்ளது.
சரத் கோவையில் உள்ள ஒரு பொம்மை கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பிருந்தா தனது குழந்தையுடன் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன் குளத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை பிருந்தா நடுவக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த தனது குழந்தை தர்ஷினி இறந்துவிட்டதாக கூறினார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த பெற்றோர், உடனே குழந்தையை திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதேநேரத்தில் சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் சந்தேகம் அடைந்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பிருந்தாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் சில வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்தபோது இடையூறாக இருந்ததால் சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.
காதல் திருமணம் செய்து கொண்ட போதிலும், பிருந்தாவுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. அவ்வப்போது அவர்களுடன் தனிமையான இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அப்போது குழந்தையை தனியாக வீட்டில் விட்டு விட்டு செல்ல முடியாது என்பதால் குழந்தையையும் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு பகுதியை சேர்ந்த ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் வாலிபரான லிங்கசெல்வம் (28 ) என்பவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முத்துசுடர் (28), பெஞ்சமின் (28) ஆகியோருடன் மதுபோதையில் பிருந்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து குழந்தையுடன் பிருந்தாவை 3 பேரும் அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தில் இருட்டு நிறைந்த பகுதியில் அந்த வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது சிறுமி தர்ஷினி அழுதுள்ளார். உடனே அவர்களில் 2 வாலிபர்கள் தர்ஷினியை சற்று தூரத்திற்கு அழைத்து சென்று தின்பண்டம் கொடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் 2 பேரும் அங்கிருந்தபடி மது குடித்துக்கொண்டு இருந்தனர். சிறுமி தின்பண்டம் சாப்பிட்டதும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். போதையில் இருந்த வாலிபர்கள், சிறுமி என்றும் பாராமல் குளிர்பானத்தில் மதுவை கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளனர். அதனை குடித்த சிறுமி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சிறுமியின் மூக்கை பொத்தியும், தாக்கியும் கொலை செய்துள்ளனர். இதனால் மூச்சு பேச்சு இல்லாமல் போன சிறுமியை வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து பிருந்தாவிடம் ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் தனது குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக பெற்றோரிடம் பிருந்தா நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து பிருந்தாவை கைது செய்த போலீசார், கள்ளக்காதலில் ஈடுபட்டு சிறுமியையும் கொலை செய்த லிங்க செல்வன், முத்து சுடர், பெஞ்சமின் உள்ளிட்டவர்களையும் கைது செய்தனர்.
- ஜெயந்தி ரேஸ்கோர்சில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்
- போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
கோவை,
கோவை கணபதி உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மனைவி ஜெயந்தி (வயது41). இவர் ரேஸ்கோர்சில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஜெயந்தி நிறுவன வரவேற்பு அறையில் தனது செல்போனை சார்ஜ் போட்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பின் வந்து பார்த்த போது செல்போனை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து ஜெயந்தி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் செல்போனை திருடி சென்றது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார்(23), வால்பாறையை சேர்ந்த வினோத் (27), ராஜஸ்தானை சேர்ந்த சந்த்(30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்.
- கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சேரம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் சேரம்பாடி அடுத்த செப்பந்தோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படி வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் எருமாடு பஜார் பகுதியை சேர்ந்த முகமது நிசார் (வயது 32) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் சேரம்பாடி எலியாஸ் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த முருகேசன் (35), எருமாடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மண்ணாத்தி வயல் பகுதியை சேர்ந்த பிரேம நாதன் (32) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
- ஆறுமுகம் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
- போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் முத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஒரு ஆடு ேதாட்டத்தை விட்டு வழி தவறி வெளியே சென்றது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற 3 வாலிபர்கள் ஆட்டை திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து ஆறுமுகம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆட்டை திருடிய ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த மதன் பிரகாஷ் (19), மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த அஜய்குமார் (19), காளிங்கராயர் நகரை சேர்ந்த ரமணி (19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ஆட்டை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- அசோகன் (வயது 44). இவர் தியாகதுருகத்தில் பட்டறை நடத்தி வருகிறார்,இவர் வீட்டுக்கு திரும்பும்போது 4 இளைஞர்கள் வழி மறைத்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்..
- 3 இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்..
கள்ளக்குறிச்சி:
நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் (வயது 44). இவர் தியாகதுருகத்தில் பட்டறை நடத்தி வருகிறார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். இரவு 10 மணி அளவில் தோட்டபாடி வனகாப்பு சாலையில் செல்லும் பொழுது 4 இளைஞர்கள் வழி மறைத்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.இது குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் 4 இளைஞர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்
. அப்பொது நயினார்பாளையம் செல்லும் வனப்பகுதியில் பதுங்கி இருந்த 3 இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர் ,பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் கடலூர் மாவட்டம், அடரி, வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் சிவக்குமார் (வயது 21), சின்னசேலம், சிவன் கோயில் தெருவை சேர்ந்த சின்னதுரை மகன் சூர்யா (வயது 20), சூளாங்குறிச்சி காந்திநகர் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராக்பெல்லா (வயது 19) என்பதும் தெரியவந்தது. பின்னர் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற மற்றொரு இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது போன்ற வழிப்பறியில் ஈடுபடு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
- மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் தந்தையை தாக்கிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- கீரைத்துறை போலீசில் புகார் செய்தார்.
மதுரை
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது55). இவரது மகன் பொன்முத்து செல்வம் (24). இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இவர் குடிப்பதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் கொடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொன்முத்துசெல்வம், தந்தையை பீர் பாட்டிலால் தாக்கினார். இதில் காயமடைந்த பொன்னுசாமி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன் முத்து செல்வத்தை கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (61). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவியின் மகன்கள் பாபு, ராஜசேகர். இவர்கள் இருவரும் தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளனர்.
ஆனால் அவர் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு, ராஜசேகரை கைது செய்தனர்.






