பெண்ணிடம் செல்போன் திருடிய 3 வாலிபர்கள் கைது

ஜெயந்தி ரேஸ்கோர்சில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
பெண்ணிடம் செல்போன் திருடிய 3 வாலிபர்கள் கைது
Published on

கோவை,

கோவை கணபதி உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மனைவி ஜெயந்தி (வயது41). இவர் ரேஸ்கோர்சில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஜெயந்தி நிறுவன வரவேற்பு அறையில் தனது செல்போனை சார்ஜ் போட்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பின் வந்து பார்த்த போது செல்போனை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து ஜெயந்தி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் செல்போனை திருடி சென்றது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார்(23), வால்பாறையை சேர்ந்த வினோத் (27), ராஜஸ்தானை சேர்ந்த சந்த்(30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com