தந்தையை தாக்கிய 3 வாலிபர்கள் கைது

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் தந்தையை தாக்கிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கீரைத்துறை போலீசில் புகார் செய்தார்.
தந்தையை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
Published on

மதுரை

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது55). இவரது மகன் பொன்முத்து செல்வம் (24). இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இவர் குடிப்பதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் கொடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொன்முத்துசெல்வம், தந்தையை பீர் பாட்டிலால் தாக்கினார். இதில் காயமடைந்த பொன்னுசாமி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன் முத்து செல்வத்தை கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (61). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவியின் மகன்கள் பாபு, ராஜசேகர். இவர்கள் இருவரும் தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளனர்.

ஆனால் அவர் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு, ராஜசேகரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com