search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl murdered"

    • எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
    • தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சிறுமி படுகொலை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

    சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை காலைத்து வருகின்றனர். pondஇதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • படுகொலை விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
    • உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி காணாமல் போன ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்து சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சந்தித்து பேசினர்.

    குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியில் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தரப்பில் கோரப்பட்டது.

    உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் ரங்கசாமியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    • சிறுமியின் பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • சம்பவத்தன்று வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தியை நைசாக பேசி சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி மைதிலி.

    தம்பதியின் 2-வது மகள் ஆர்த்தி (வயது 9) கடந்த 2-ந் தேதி வீட்டுக்கு வெளியே ஆர்த்தி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஒரு சி.சி.டி.வி.யில் மட்டும் சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் எங்கே சென்றார்? என்ற எந்த பதிவும் கிடைக்கவில்லை.

    போலீசார் அந்த பகுதியில் வீடு வீடாக தேடியும் சிறுமி பற்றி தகவல் தெரியவில்லை. 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றவும் வலியுறுத்தினர்.

     

    4 நாட்களாகியும் சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் 40 போலீசார் நேற்று முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    அப்போது ஒரு கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. சோலை நகரை ஒட்டிய அம்பேத்கார் நகர் பகுதி மாட்டு கொட்டகைக்கு பின்புறம் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது வாய்க்காலில் வேட்டியால் கட்டி மூட்டை ஒன்று கிடைப்பதை பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை பிரித்து பார்த்தனர். அதில் மாயமான சிறுமியின் உடல் இருந்தது. அவரை கொலை செய்து கை, கால், வாயை கட்டி மூட்டையாக வீசியது தெரியவந்தது.

    இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாலியல் துன்புறுத்தல் நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய கோரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ள 5 நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆவேசமாக கூறினர்.

    முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்துக்குள் மறியல் செய்த பொதுமக்கள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைத்தனர்.

    இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    கொலையாளிகளை பிடிக்க போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தியை நைசாக பேசி சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த விவேகானந்தனும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதில் மூச்சு திணறிய சிறுமி மயங்கி விழுந்தார்.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த 2 பேரும் சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்தனர். பின்னர் சிறுமியின் உடலை வேட்டியில் மூட்டையாக கட்டி வீட்டிற்கு பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் வீசியுள்ளனர்.

    இவ்வாறு போலீசார் கூறினார்.

    இதுதொடர்பாக 2 பேரிடமும் மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. #GirlHarassment
    கவுண்டம்பாளையம்:

    கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி மாயமானார். மறுநாள் காலை வீட்டருகே சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் பனியனால் கட்டப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொலையாளிகளை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் செய்தனர். நேற்று துடியலூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சிறுமியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் மீது சந்தேகம் தெரிவித்திருந்தனர். அந்த வாலிபர்கள் மற்றும் பிளஸ்-2 மாணவர் ஒருவர் உள்பட மொத்தம் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.



    சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. #GirlHarassment
    கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிளஸ்-2 மாணவர் உள்பட மொத்தம் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #GirlHarassment
    கவுண்டம்பாளையம்:

    கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி மாயமானார். மறுநாள் காலை வீட்டருகே சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் பனியனால் கட்டப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொலையாளிகளை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் செய்தனர். நேற்று துடியலூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சிறுமியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் மீது சந்தேகம் தெரிவித்திருந்தனர். அந்த வாலிபர்கள் மற்றும் பிளஸ்-2 மாணவர் ஒருவர் உள்பட மொத்தம் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை சிறுமியின் பெற்றோரிடம் கூறிய போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதை வீடியோ மூலம் காட்டினர். விரைவில் கொலையாளிகளை கைது செய்து விடுவோம் என போலீசார் உறுதி அளித்ததை ஏற்று, சிறுமியின் உடலை பெற்றுக் கொண்டனர்.

    இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. மணி மேற்பார்வையில் 10 தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

    மேலும், நள்ளிரவில் செல்போனில் பேசியவர்களின் பட்டியல் சேகரித்து விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த வழக்கில் சட்டப்பிரிவுகள் கொலை(302), பாலியல் வன்புணர்ச்சி(376ஏ) மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிடிபட்ட 6 பேரிடமும் விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    சிறுமி படித்த பள்ளிக்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கு முன்பு யாரேனும் மிட்டாய் வாங்கி தருகிறேன் என்று ஆசை காட்டி சிறுமிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டிருந்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா, தனிப்படை போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். வழக்கு விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், விசாரணை நிலவரத்தை சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என கூறி உள்ளார். #GirlHarassment

    ×