புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதானவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை

விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.விவேகானந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தன்
விவேகானந்தன்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறுமியை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகாலையில் கழிவறைக்கு சென்ற விவேகானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட விவேகானந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

சிறுமி கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com