என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police investigating"
- ஏட்டு செந்தில்குமார் டிரைவர் ரவியை கொலை செய்வதற்கு ஐசக் என்ற ரவுடியையும், அவரது கூட்டாளிகளையும் துணைக்கு சேர்த்துக் கொண்டதும் விசாரணையில் அம்பலமானது.
- டிரைவர் ரவி கொலை வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது இருப்பதால் 5 நாட்கள் வரை 2 பேரையும் காவலில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த கார் டிரைவர் ரவி கடத்தி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் மற்றும் படாளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோயம்பேட்டைச் சேர்ந்த ஏட்டு செந்தில்குமார், டிரைவர் ரவியை கொலை செய்து ஆம்னி வேனில் உடலை கடத்திச் சென்று செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரிய வந்தது. ஏட்டு செந்தில்குமாரின் காதலியான கவிதாவுக்கும், கொலையுண்ட ரவியின் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் ஏற்பட்ட தகராறில் ரவி, செந்தில்குமாரை தாக்கி உள்ளார். இந்த மோதலே கொலையில் முடிந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
ஏட்டு செந்தில்குமார் டிரைவர் ரவியை கொலை செய்வதற்கு ஐசக் என்ற ரவுடியையும், அவரது கூட்டாளிகளையும் துணைக்கு சேர்த்துக் கொண்டதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து ஏட்டு செந்தில் குமாரையும் ஐசக் உள்பட 4 ரவுடிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வநதனர். போலீஸ் பிடி இறுகியதால் ஏட்டு செந்தில்குமாரும், ரவுடி ஐசக்கும் நெல்லை கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.
மாஜிஸ்திரேட்டு ஆறுமுகம், 2 பேரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். வருகிற 16-ந்தேதி செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் மாஜிஸ்திரேட்டு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து ஏட்டு செந்தில் குமாரும், ரவுடி ஐசக்கும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். செங்கல்பட்டு கோர்ட்டில் வருகிற 16-ந்தேதி ஏட்டு செந்தில்குமாரும், ஐசக்கும் ஆஜர்படுத்தப்படும் போது படாளம் போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த மனு அளிக்க உள்ளனர்.
டிரைவர் ரவி கொலை வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது இருப்பதால் 5 நாட்கள் வரை 2 பேரையும் காவலில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் எடுக்கும் போது, ஏட்டு செந்தில்குமார், ரவுடி ஐசக் இருவரையும் கொலை நடந்த வீடு, உடல் எரிக்கப்பட்ட இடம் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த கொலை வழக்கில் ஐசக்கின் கூட்டாளிகளான எட்வின், மகி, கார்த்தி ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள 3 ரேையும் பிடிக்க போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கே.கே.நகர் மற்றும் படாளம் போலீசார் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடு பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏட்டு செந்தில்குமாரின் காதலி கவிதா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வாலிபர் ஒருவர் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அடிபட்டு கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே மரக்கடை பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயிலில் அடிபட்டு கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தங்க நகைகளுக்கு பதிலாக செம்பு கட்டிகளை கொடுத்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தங்ககட்டி மோசடி குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
கேரளா மாநிலம் திருச்சூர் ஒல்லூர் சீராச்சி சிரிய கண்டத்து ரேசன் கடை அருகில் வசிப்பவர் ஷேண்டோ வர்கீஸ் (வயது 39). இவர் திருச்சூர் பி.ஆர் ஜூவல்லர்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.
இவருடன் திருச்சூர் அவினஷ்வரி எழுக்கம்பனி கருக்கயில் இல்லத்தை சேர்ந்தவர் விஷ்ணு (30), திருச்சூர் ஒல்லூர் கைகாட்டுச்சேரி கரிய பள்ளி இல்லத்தை நெல்சன் (29) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு சேலம் வந்தனர்.
இவர்கள், செவ்வாய்பேட்டை மாதவராயன் செட்டி தெருவில் உள்ள பி.ஜே. ஜூவல்லரி கடைக்கு சென்றனர். கடையின் உரிமையாளர் லால் டூவிடம் எங்களிடம் உள்ள 1 கிலோ தங்கத்தை உருக்கி தருமாறு கொடுத்தனர். இதையடுத்து, லால்டூ அந்த தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக அவர்களிடம் கொடுத்தார்.
இந்நிலையில், அந்த கட்டிகள் தங்கம்தானா என பரிசோதனை செய்து பார்க்க, ஒருவரை மட்டும் கடையில் உட்கார வைத்துவிட்டு, மற்ற 2 பேர் கட்டிகளுடன் சென்றனர்.
பரிசோதனையில் அவை தங்க கட்டிகள் இல்லை, செம்பு கட்டிகள் என்று தெரியவந்தது. உடனே 2 பேரும் கடைக்கு வருவதற்குள், லால் டூ அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து வர்கீஸ் உள்பட 3 பேரும், இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய நகை கடை உரிமையாளர் லால் டூவை தேடி வருகின்றனர்.
தங்க நகைகளுக்கு பதிலாக செம்பு கட்டிகளை கொடுத்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் ஆத்துப்பாளையம் ஜே.சி.கே. கார்டன் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். கார் டயர்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சண்முகபிரியா (வயது 34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மாலை சண்முக பிரியா வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்காக திரு முருகன்பூண்டிக்கு சென்றார்.அங்கு காய்கறிகள் வாங்கி விட்டு மொபட்டில் ஆத்துப்பாளையத்திற்கு புறப்பட்டார். செல்லும் வழியில் பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகபிரியா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் திரு முருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சண்முகபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி மரணமடைந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த தியாகராஜன் உடனடியாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றார். அங்கு அவரிடம் போலீசார் சண்முகபிரியா அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் அவர் வைத்திருந்த பொருட்களை ஒப்படைத்தனர். அப்போது சண்முகபிரியா அணிந்திருந்த 3½ பவுன் மதிப்புள்ள தங்க தாலி செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும்.
இது பற்றி தியாகராஜன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் நகைகளை திருடிய மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சண்முகபிரியாவின் நகைகளை மர்மநபர்கள் திருடினார்களா? அல்லது தனியார் ஆம்புலன்சில் உடலை கொண்டு செல்லும் போது திருடப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
- சிறுவன் அடிக்கடி செல்போனில் வீடியோ கேம் விளையாடி வந்தான்.
- செல்போனில் கேம் விளையாடுவதை தாயார் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் பெற்ற தாயை துப்பாக்கியால் சுட்டான்.
லக்னோ:
சிறுவர்கள் செல்போனில் வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அப்படி செல்போனில் 'கேம்' விளையாடுவதை தடுத்த தாயை சிறுவன் சுட்டுக் கொன்றுள்ளான்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 16 வயது மகன், 9 வயது மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். அவரது கணவர் ராணுவ அதிகாரி. மேற்கு வங்காளத்தில் பணியாற்றி வருகிறார்.
சிறுவன் அடிக்கடி செல்போனில் வீடியோ கேம் விளையாடி வந்தான். இதை அவனது தாயார் கண்டித்து செல்போனில் கேம் விளையாடுவதை தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் பெற்ற தாயை துப்பாக்கியால் சுட்டான்.
தந்தை உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியால் தலையில் குறி வைத்து சுட்டான். இதில் பலத்த காயம் அடைந்த தாய் அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தாயின் பிணத்தை வீட்டில் மறைத்து வைத்தான். சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க ஏர்பிரெஷ்னரை பயன்படுத்தி இருக்கிறான். 3 நாட்கள் பிணத்துடன் மகன் இருந்தான்.
வீட்டில் உள்ள 9 வயது சகோதரியிடம் கொலை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினான்.
தந்தை வீட்டுக்கு வந்த போது எலெக்ட்ரீசியன் தாயை சுட்டுக் கொன்றதாக கூறி மகன் நாடகமானடினான்.
போலீஸ் விசாரணையில் அவன் தாயை சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டான். இதைத் தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர்.
பெற்ற தாயை மகனே சுட்டுக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பி.ஆர். நிறுவனத்தின் உரிமையாளரான அணிரூத் பிம்ப்லபுரே போலீசில் புகார் அளித்தார்.
- அதில் தங்கள் நிறுவனம் மீதான நடவடிக்கையை தவிர்க்க ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
சாகர்:
மத்தியபிரதேச மாநிலத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் மண்டல கமிஷனராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார்.
இவருக்கு எதிராக பி.ஆர். நிறுவனத்தின் உரிமையாளரான அணிரூத் பிம்ப்லபுரே போலீசில் புகார் அளித்தார். அதில் தங்கள் நிறுவனம் மீதான நடவடிக்கையை தவிர்க்க ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
புகாரை பெற்ற போலீசார் வருங்கால வைப்பு நிதி அதிகாரி சதீஷ்குமாரை பொறிவைத்து பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை அவர் வாங்கினார். அப்போது மறைந்து இருந்த போலீஸ்காரர்கள் அவரை வீட்டில் வைத்து கையும் களவுமாக பிடித்தனர்.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
- திருட்டு நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
- போலீசார் விசாரித்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.
காரமடை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை போலீஸ்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் சந்திரசேகர்.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் பணி முடிந்து தனது மோட்டார்சைக்கிளில் காரமடை தொட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். வீட்டு முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார்ைசக்கிள் காணாமல் போய் இருந்தது. இதுகுறித்து சந்திரசேகர் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதேநாளில் காரமடை கண்ணார்பாளையம் பாலாஜிநகரைச் சேர்ந்த தனபால் என்பவரது மோட்டார்சைக்கிளும் திருட்டு போனது. இதுகுறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோட்டார்சைக்கிள் திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருட்டு நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது மோட்டார்சைக்கிளை திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நிசார் முஹம்மது, ஹரிகரன், தமிழ்ச்செல்வன் மற்றும் காரமடை பகுதியை சேர்ந்த நித்திஷ் ஆகி யோர் என்பது தெரிய வந்தது. கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்