search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Bar Scam"

    • தங்க நகைகளுக்கு பதிலாக செம்பு கட்டிகளை கொடுத்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தங்ககட்டி மோசடி குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    கேரளா மாநிலம் திருச்சூர் ஒல்லூர் சீராச்சி சிரிய கண்டத்து ரேசன் கடை அருகில் வசிப்பவர் ஷேண்டோ வர்கீஸ் (வயது 39). இவர் திருச்சூர் பி.ஆர் ஜூவல்லர்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.

    இவருடன் திருச்சூர் அவினஷ்வரி எழுக்கம்பனி கருக்கயில் இல்லத்தை சேர்ந்தவர் விஷ்ணு (30), திருச்சூர் ஒல்லூர் கைகாட்டுச்சேரி கரிய பள்ளி இல்லத்தை நெல்சன் (29) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு சேலம் வந்தனர்.

    இவர்கள், செவ்வாய்பேட்டை மாதவராயன் செட்டி தெருவில் உள்ள பி.ஜே. ஜூவல்லரி கடைக்கு சென்றனர். கடையின் உரிமையாளர் லால் டூவிடம் எங்களிடம் உள்ள 1 கிலோ தங்கத்தை உருக்கி தருமாறு கொடுத்தனர். இதையடுத்து, லால்டூ அந்த தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக அவர்களிடம் கொடுத்தார்.

    இந்நிலையில், அந்த கட்டிகள் தங்கம்தானா என பரிசோதனை செய்து பார்க்க, ஒருவரை மட்டும் கடையில் உட்கார வைத்துவிட்டு, மற்ற 2 பேர் கட்டிகளுடன் சென்றனர்.

    பரிசோதனையில் அவை தங்க கட்டிகள் இல்லை, செம்பு கட்டிகள் என்று தெரியவந்தது. உடனே 2 பேரும் கடைக்கு வருவதற்குள், லால் டூ அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து வர்கீஸ் உள்பட 3 பேரும், இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய நகை கடை உரிமையாளர் லால் டூவை தேடி வருகின்றனர்.

    தங்க நகைகளுக்கு பதிலாக செம்பு கட்டிகளை கொடுத்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×