திருமணம் செய்ய வீட்டை விட்டு ஓடி வந்த இன்ஸ்டாகிராம் காதலி கொலை- காதலன் கைது

விக்னேஷ் மேல்பேட்டையில் உள்ள தனது நண்பர் வீட்டில் சிறுமியை தங்க வைத்து பலாத்காரம் செய்துள்ளார். விக்னேஷ்-க்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
திருமணம் செய்ய வீட்டை விட்டு ஓடி வந்த இன்ஸ்டாகிராம் காதலி கொலை- காதலன் கைது
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் நரசிம்மா நகரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவருக்கு அப்குடாவை சேர்ந்த சிந்து என்கிற விக்னேஷ் (22) என்ற வாலிபருடன் இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டது.

இவர்களது நட்பு பின்னர் காதலாக மாறியது. இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் மணிகணக்கில் அரட்டை அடித்து வந்தனர். விக்னேஷ் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

இதனை உண்மை என நம்பிய சிறுமி காதல் திருமணம் செய்வதற்காக கடந்த மாதம் 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.

அப்போது விக்னேஷ் மேல்பேட்டையில் உள்ள தனது நண்பரான சாகித் வீட்டில் அவரை தங்க வைத்துள்ளார். அங்கு வைத்து சிறுமியை விக்னேஷ் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி அடிக்கடி வற்புறுத்தி உள்ளார். திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் மிரட்டினார்.

இதனால் ஆதிரமடைந்த விக்னேஷ் அவரை கொலை செய்ய முடிவெடுத்தார். இதற்காக தனது நண்பர் சாகித் மற்றும் அவரது மனைவி கல்யாணியிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்தனர். இதனால் வேறு ஒரு திட்டத்தை முன் எடுத்தார். திருமணத்தை முடித்து விட்டு சிறுமியை கொலை செய்ய முடிவு எடுத்தார்.

அதன்படி விக்னேஷ் சிறுமியை கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். திருமண போட்டோவை சிறுமியின் பெற்றோருக்கு விக்னேஷ் அனுப்பி வைத்தார். பின்னர் சாகித், கல்யாணி வீட்டில் இல்லாத சமயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தில் அழுத்தியும் கொலை செய்தார்.

பின்னர் வீட்டுக்கு திரும்பிய கல்யாணி சிறுமி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தால். உடனே கணவருக்கு போன் செய்து வரவைத்தார். உடனே நண்பர்கள் உதவியுடன் சிறுமியின் பிணத்தை பைக்கில் எடுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள தொழிற்பேட்டை குப்பையில் வீசினர்.

மகள் காணாமல் போனது குறித்து சிறுமியின் தாய் மியாபூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் குப்பைகளுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டனர். மேலும் விக்னேஷ் அவரது நண்பர்களான சாகித், கல்யாண் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com