search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brother arrest"

    • ஆத்திரம் அடைந்த வாலிபர் தங்கை என்று கூட பார்க்காமல் நர்சை சரமாரியாக தாக்கினார்.
    • தலையில் மாறி மாறி தாக்கியதால் நர்சு மயங்கி விழுந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கோத்தகுடெம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்.

    நர்சிங் படிப்பு முடித்த இவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் டிக்டாக் போன்ற வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வந்தார்.

    இவரது வீடியோவிற்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இது பற்றி அறிந்த அவரது அண்ணன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட வேண்டாம். அது நல்லதல்ல ஒரு சிலர் ஆபாச கருத்துகளையும் வெளியிடலாம் என கூறி எச்சரித்தார்.

    ஆனாலும் நர்சு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். நேற்று முன்தினம் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதனை கண்ட அவரது அண்ணன் கடுமையாக எச்சரித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தங்கை என்று கூட பார்க்காமல் நர்சை சரமாரியாக தாக்கினார். தலையில் அவர் மாறி மாறி தாக்கியதால் நர்சு மயங்கி விழுந்தார்.

    இதனைக் கண்டு திடுக்கிட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நர்சை கம்மத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வாரங்கல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நர்சின் அண்ணனை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • கார்த்திக்கின் மனைவி புனிதா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வெண்ணவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன்கள் சக்திவேல் (வயது 35). கார்த்திக் (வயது 28).

    கார்த்திக் மனைவி புனிதா (வயது 24). இவர்களுக்கு காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது தாயாரிடம் தகராறில் ஈடுப்பட்ட புனிதாவை கார்த்திக்கின் அண்ணன் சக்திவேல் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இந்த தகராறு சகோதர்களான சக்திவேல், கார்த்திக் இடையே சண்டையாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் கையில் வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை உறவினர்கள் அத்திக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கார்த்திக் கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கார்த்திக்கின் உடல் திருவாரூரில் உள்ள பிரேத பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கார்த்திக்கின் மனைவி புனிதா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண்டிப்பட்டி அருகே சொத்து கேட்டு மிரட்டிய அண்ணன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள முறுக்கோடை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பெருமாயி. இவர்களுக்கு பட்டுராஜன் (வயது26), சவுந்தர்ராஜன் (24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆக வில்லை.

    பட்டுராஜன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தனது வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் தனது சேர வேண்டிய சொத்தை பிரித்து எழுதி தரும்படி தகராறு செய்து வந்துள்ளார்.

    நேற்று மாலை வழக்கம் போல் போதையில் வந்த பட்டுராஜன் சொத்து கேட்டு தனது தாயிடம் தகராறு செய்தார். சொத்தை எழுதி தராவிட்டால் தாய் மற்றும் தம்பியை கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என மிரட்டினார்.

    பின்னர் வீட்டு திண்ணையில் தூங்கி விட்டார். அதன் பின் வீட்டுக்கு வந்த சவுந்தர்ராஜனிடம் தாய் நடந்த விபரங்களை கூறினார். இதை கேட்டு ஆத்திரமடைந்த அவர் தூங்கிக் கொண்டு இருந்த தனது அண்ணன் பட்டு ராஜன் தலையில் கல்லைப் போட்டார். பலத்த காயங்களுடன் அவரை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து வரு‌ஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.

    நெல்லையில் புதுப்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது தம்பி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இளங்கோ நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் கனிமொழி (வயது25). ‘பி.இ.’ பட்டதாரி. இவரது மகன் சுந்தரபாண்டியன் (20). இவர் பாளை அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

    கனிமொழிக்கு கடந்த 6.2.19 அன்று ஏர்வாடியை சேர்ந்த லெனின் என்ற வாலிபருடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கனிமொழி மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த கனிமொழியை அவரது தம்பி சுந்தரபாண்டியன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். ரத்தம் கொட்டிய அரிவாளுடன் அவர் பாளை போலீசில் சரண் அடைந்தார்.

    பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் சுந்தரபாண்டியனை கைது செய்தனர். கைதான சுந்தர பாண்டியன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது அக்காள் கனிமொழியின் திருமணம், கடந்த மாதம் மிகவும் சிறப்பாக நடந்தது. மாப்பிள்ளை லெனின் லாரி டிரைவராக இருப்பது என் அக்காவுக்கு தெரிந்து, சம்மதித்து தான் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார்.

    பின்னர் சமரசம் செய்து கனிமொழியை மீண்டும் மாப்பிள்ளையுடன் சேர்த்து வைத்தோம். 10 நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு, நான் அவருடன் வாழ மாட்டேன் என்று மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார். இது எங்கள் குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரத்தில் அவளை வெட்டிக் கொலை செய்தேன்.

    இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து பாளை போலீசார் சுந்தர பாண்டியனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    சொத்து தகராறில் அண்ணன் கழுத்தை, தம்பி பிளேடால் அறுத்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் சிஎஸ்எம் தோப்பு தெரு பகுதிகைச் சேர்ந்தவர் சண்முகம் (54). சமையல் தொழில் செய்து வருகிறார்.

    இவரது தம்பி சீனிவாசன் (49). இவர் சமையல், எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். சண்முகம், சீனிவாசன் இருவரும் அவர்கள் தாயார் வீட்டில் முன்பாகத்திலும், பின் பாகத்திலும் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சீனிவாசன் முன்பாக சொத்தை தனது தாயாரிடம் கேட்டு சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 10 மணியளவில் குடிபோதையில் வந்த சீனிவாசன் தனது தாயார் மற்றும் அண்ணன் சண்முகத்திடம் சொத்து கேட்டு சண்டை போட்டுள்ளார்.

    இதை தட்டி கேட்ட அண்ணன் சண்முகம் கழுத்தை தன்னிடம் இருந்த பிளேடால் சீனிவாசன் அறுத்துள்ளார். அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    தப்பி ஓடிய சீனிவாசனை, சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி கைது செய்தார். சொத்து தகராறில் அண்ணன் கழுத்தை, தம்பி பிளேடால் அறுத்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சொத்து தகராறில் தம்பியை, அண்ணனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கல்லுப்பட்டி ஜோசியர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர். இவருக்கு நாகராஜ் (வயது 45), செந்தில் நாயகன் (43), ஞானேஸ்வரன் (40) என 3 மகன்கள் உள்ளனர். 3 மாடிகள் கொண்ட வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு பகுதியில் வசித்தனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு தனது சொத்துக்களை 3 மகன்களுக்கும் வெள்ளைச்சாமி உயில் எழுதி வைத்துள்ளார். கடந்த ஆண்டு அவர் இறந்த நிலையில் உயில் விவகாரம் தெரியவந்தது. அதில் மற்றவர்களை விட செந்தில் நாயகனுக்கு அதிக அளவில் சொத்துக்களை வெள்ளைச்சாமி பிரித்து எழுதி இருந்தார். இது தொடர்பாக சகோதரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் செந்தில் நாயகன் தனது பெயருக்கு சொத்துக்களை மாற்றும் பணியில் ஈடுபட்டார். இது நாகராஜூக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நேற்று இரவு வீட்டின் கீழ் தளத்தில் உள்ள தனது வீட்டில் செந்தில் நாயகன் படுத்திருந்தார். இன்று அதிகாலை அங்கு வந்த நாகராஜ், வீட்டில் இருந்த அம்மிக்குழவிக்கல்லை எடுத்து செந்தில் நாயகன் தலையில் போட்டார். இதில் தலை நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது தான் சொத்து தகராறில் தம்பியை, அண்ணனே கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

    கொலை செய்யப்பட்ட செந்தில்நாயகன், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி டிஸ்மிஸ் செய்யப்பட்டவர். அவருக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×