என் மலர்
நீங்கள் தேடியது "property dispute"
- சொத்துக்காக மனைவியை அடித்து எரித்து கொன்றேன் என்று கைதான கணவர் வாக்குமூலம் கொடுத்தார்.
- ஞானம்மாள் அடித்து கொலை செய்யப்பட்ட பிறகே அவரது உடல்எரிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்கண்ணு (வயது 70). இவரது மனைவி ஞானம்மாள் (67). இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டில்உடல் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது அண்ணன் பாண்டுரங்கன் எனது தங்கையின்சாவில் மர்மம் இருப்பதாக மரக்கா ணம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்துகிடந்த ஞானம்மாள் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது ஞானம்மாளின் கணவர் எனக்கும், எனது மனைவிக்கு ம்சம்பவத்தன்று காலையில் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் மன முடைந்த எனது மனைவிவீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்றுபோலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து போலீசார்,மர்மமான முறையில் இறந்து கிடந்த ஞானம்மாளின்உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரது உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், ஞானம்மாள் அடித்து கொலை செய்யப்பட்ட பிறகே அவரது உடல்எரிக்கப்பட்டுள்ளது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித் திருந்தனர். இதனை தொடர்ந்து போலீசார், ஞானம்மாளின்கணவர் செல்லக்கண்ணுவை காவல் நிலையம் கொண்டுசென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்போலீசாரிடம் வாக்குமூலமாக கூறியதாவது:-
ஞானம்மா ளைஎனக்கு திருமணம் செய்து கொடுத்த போது அவரது அண்ண ன்பாண்டு ரங்கன், தனது தங்கைக்கு 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கி எழுதி வைத்தார். அந்த நிலத்தை தற்போது என் பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்கு மாறு என் மனைவியிடம் நான் கேட்டேன். அதற்கு அவர், அப்படி எழுதி கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த நான், சம்பவ த்தன்று எனது மனைவியை அடி த்தேன். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். அப்போது அருகில்கிடந்த கயிற்றை எடுத்து கழுத்தை இருக்கினேன். அதில் எனது மனைவிஇறந்துவிட்டார். இந்த சம்பவத்தை மறைக்க நான் வீட்டில் இருந்த மண்எண்ணையை அவரது உடலில் ஊற்றி எரித்தேன். இந்த சம்பவத்தில் இருந்து தப்பித்துவிட லாம் என்று நினைத்தேன். ஆனால்போலீசார் நடத்திய முறையான விசாரணையால் நான் மாட்டிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார். சொத்துக்காக மனைவியை, வயதான காலத்திலும் கணவன் அடித்து கொன்று மண்எண்ணை ஊற்றி எரித்துகொன்ற சம்பவம் அப்பகுதி பொதுமக் கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அண்ணன் சமுத்திரம், அவரது மகன் மணிகண்டன் மற்றும் உறவினர் தலைமுத்து ஆகியோர் மாரிமுத்துவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளனர்.
- அப்போது அதனை தடுக்க முயன்ற மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாளை மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தின்போது மாரிமுத்துவும் அரிவாளால் மணிகண்டனை வெட்டி உள்ளார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மீனாட்சிபுரம் தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 59), விவசாயி. இவரது அண்ணன் சமுத்திரம் (60). இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
சமுத்திரம் தனது தம்பிக்கு சொந்தமான இடத்தில் 15 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாரிமுத்து தனது நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டு இருந்தார். அதில் நாற்றுகள் அழுகி விட்டதால் நேற்று மாலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் எலுமிச்சை நாற்றுகளை அகற்றி விட்டு நிலத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் அண்ணன் ஆக்கிரமித்து இருந்த இடத்தையும் சீர் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அவரது அண்ணன் சமுத்திரம், அவரது மகன் மணிகண்டன் மற்றும் உறவினர் தலைமுத்து ஆகியோர் மாரிமுத்துவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளனர்.
அப்போது அதனை தடுக்க முயன்ற மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாளை மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தின்போது மாரிமுத்துவும் அரிவாளால் மணிகண்டனை வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாள் தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சமுத்திரம், மணிகண்டன், தலைமுத்து ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து தகராறில் அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவா் குப்பன் (வயது 70) தொழிலாளி. இவருக்கு 4 மகன்கள், 1 மகள் உள்ளனர். குப்பன் தனது குடும்ப சொத்தான 1½ ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் குப்பனின் 3-வது மகன் ஆறுமுகம் என்பவர் தனது குழந்தைகள் பெயரில் 50 சென்ட் நிலத்தை குப்பனிடம் இருந்து எழுதி வாங்கி கொண்டார்.
இது பற்றி அறிந்த 2-வது மகன் சின்னவன் என்பவர் தனது தந்தை குப்பனிடம் சென்று ஆறுமுகத்தின் குழந்தைகளுக்கு சொத்து எழுதி கொடுத்தது பற்றி கேட்டு்ள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சின்னவன் தனது தந்தை குப்பனை தள்ளிவுள்ளார். இதில் மயக்கமடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னவன் தள்ளிவிட்டதில் குப்பன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு நாராயண வலசு, வாய்க்கால் மேடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் நாராயணமூர்த்தி (39). திருமணமாகவில்லை. மகள் தங்கமணி (36) திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
ராமசாமி மகன் நாராயணமூர்த்தி மகள் தங்கமணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். நாராயணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் அவ்வப்போது வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபடுவாராம். மேலும் நாராயணமூர்த்தி தனது தந்தையிடம் வீட்டை எனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை ராமசாமி மறுத்து விட்டார். நேற்று முன்தினம் அவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ராமசாமி தனது பெயரில் உள்ள வீட்டை தனது மகள் தங்கமணிக்கு எழுதி வைப்பதாக கூறினார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த நாராயணமூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழல் மற்றும் கட்டையால் ராமசாமியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராமசாமி உயிருக்காக போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு போராடிய ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமசாமியின் மகள் தங்கமணி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.
அதன்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து நாராயணமூர்த்தியை கைது செய்தனர்.
அப்போது அவர் கூறும்போது சம்பவத்தன்று வீட்டை எனது பெயருக்கு எழுதி வைக்குமாறு என் தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர் மறுத்து என்னை உதாசீனப்படுத்தினார். எனது வீட்டை உனது பெயருக்கு எழுதி கொடுக்க மாட்டேன் எனது மகள் தங்கமணி பெயரில்தான் எழுதி வைப்பேன். நீ குடித்து குடித்து விட்டை அழித்து விடுவாய் என்றார். இதனால் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழலை எடுத்து தந்தையை தாக்கினேன். மேலும் அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரை அடித்தேன்.
இவ்வாறு நாராயண மூர்த்தி போலீசில் வாக்கு மூலமாக தெரிவித்தார். இதையடுத்து நாராயண மூர்த்தியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாய் நகரை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 42). இவரது தம்பி ஆரோக்கியசாமி (40). விவசாயிகளான இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக அருளானந்தம் மனைவி விக்டோரியா மேரி, ஆரோக்கியசாமி மனைவி லீமா ரோஸ்மேரி இடையேயும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சொத்து தகராறு தொடர்பாக பட்டுக்கோட்டை போலீஸ்நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நேற்று அருளானந்தம், ஆரோக்கியசாமி இடையே மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருளானந்தம் கட்டையால் ஆரோக்கியசாமியை அடித்துள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த ஆரோக்கியசாமி சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆரோக்கியசாமி பரிதாபமாக இறந்தார்.
இதுப்பற்றி பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சொத்து தகராறில் தம்பியை அடித்து கொன்ற அருளானந்தம், அவரது மனைவி விக்டோரியா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் சிஎஸ்எம் தோப்பு தெரு பகுதிகைச் சேர்ந்தவர் சண்முகம் (54). சமையல் தொழில் செய்து வருகிறார்.
இவரது தம்பி சீனிவாசன் (49). இவர் சமையல், எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். சண்முகம், சீனிவாசன் இருவரும் அவர்கள் தாயார் வீட்டில் முன்பாகத்திலும், பின் பாகத்திலும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சீனிவாசன் முன்பாக சொத்தை தனது தாயாரிடம் கேட்டு சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 10 மணியளவில் குடிபோதையில் வந்த சீனிவாசன் தனது தாயார் மற்றும் அண்ணன் சண்முகத்திடம் சொத்து கேட்டு சண்டை போட்டுள்ளார்.
இதை தட்டி கேட்ட அண்ணன் சண்முகம் கழுத்தை தன்னிடம் இருந்த பிளேடால் சீனிவாசன் அறுத்துள்ளார். அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
தப்பி ஓடிய சீனிவாசனை, சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி கைது செய்தார். சொத்து தகராறில் அண்ணன் கழுத்தை, தம்பி பிளேடால் அறுத்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா கோயில்பிள்ளை (வயது 60). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மேலும் இவர் கடலூரில் கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராஜா கோயில்பிள்ளையின் அண்ணன் பால் தங்கசாமி. இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக பணியாற்றினார். இவருடைய மகன் ராஜா (32), ஆட்டோ டிரைவர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பால் தங்கசாமியும், அவருடைய மனைவியும் இறந்து விட்டனர். இதனால் ராஜாபுதுக்குடியில் உள்ள பூர்வீக வீட்டில் ராஜா தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது.
இந்த நிலையில் ராஜா கோயில்பிள்ளைக்கும், ராஜாவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. பூர்வீக சொத்துக்களை ராஜா கோயில்பிள்ளை அபகரித்ததாக ராஜா புகார் கூறியிருந்தார். இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
கடலூரில் இருக்கும் ராஜா கோயில்பிள்ளை அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று, தனது நிலங்களை பார்த்து வந்தார். அதேபோல் நேற்று முன்தினம் இரவில் சொந்த ஊரில் உள்ள தனது நிலங்களை பார்ப்பதற்காக இவர் தனியாக புறப்பட்டு வந்தார்.
நேற்று மதியம் அவர், ராஜாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராஜா திடீரென அரிவாளால் ராஜா கோயில்பிள்ளையை சரமாரியாக வெட்டினார்.
இதில் தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் ராஜா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுபற்றி கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ், கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட ராஜா கோயில்பிள்ளையின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள கல்லுப்பட்டி ஜோசியர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர். இவருக்கு நாகராஜ் (வயது 45), செந்தில் நாயகன் (43), ஞானேஸ்வரன் (40) என 3 மகன்கள் உள்ளனர். 3 மாடிகள் கொண்ட வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு பகுதியில் வசித்தனர்.
கடந்த 2014-ம் ஆண்டு தனது சொத்துக்களை 3 மகன்களுக்கும் வெள்ளைச்சாமி உயில் எழுதி வைத்துள்ளார். கடந்த ஆண்டு அவர் இறந்த நிலையில் உயில் விவகாரம் தெரியவந்தது. அதில் மற்றவர்களை விட செந்தில் நாயகனுக்கு அதிக அளவில் சொத்துக்களை வெள்ளைச்சாமி பிரித்து எழுதி இருந்தார். இது தொடர்பாக சகோதரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் செந்தில் நாயகன் தனது பெயருக்கு சொத்துக்களை மாற்றும் பணியில் ஈடுபட்டார். இது நாகராஜூக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நேற்று இரவு வீட்டின் கீழ் தளத்தில் உள்ள தனது வீட்டில் செந்தில் நாயகன் படுத்திருந்தார். இன்று அதிகாலை அங்கு வந்த நாகராஜ், வீட்டில் இருந்த அம்மிக்குழவிக்கல்லை எடுத்து செந்தில் நாயகன் தலையில் போட்டார். இதில் தலை நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது தான் சொத்து தகராறில் தம்பியை, அண்ணனே கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட செந்தில்நாயகன், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி டிஸ்மிஸ் செய்யப்பட்டவர். அவருக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சோளக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 67), விவசாயி. இவரது மகன் ரவிச்சந்திரன் (38). லாரி டிரைவர்.
கடந்த 28-ந் தேதி இரவு தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ரவிச்சந்திரன் தனக்கு சொத்தில் பங்கு பிரித்து தரும்படி தந்தை ராமசாமியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். ஆனால் அதற்கு சொத்தில் தற்போது எந்தவித பங்கும் தர முடியாது என்று ராமசாமி கூறியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை உடைந்து ராமசாமிக்கு ரத்தம் கொட்டியது. வலியால் அலறி துடித்த அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ராமசாமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வாழவந்திநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து தந்தையை கொன்ற ரவிச்சந்திரனை கைது செய்தார்.
பின்னர் அவர் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மகனே தந்தையை அடித்து கொன்ற சம்பவம் வாழவந்திநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே மணப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது தம்பிகள் ரவிச்சந்திரன், கிருஷ்ணராஜ். இவர்கள் 3 பேருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் 3 பேருக்கும் பொதுவான இடத்தில் இருந்த வாழை மரங்கள் புயல் காற்றினால் சாய்ந்து போனது. இதனை நாகராஜனின் மகன் ராஜேந்திரன் (வயது 24) அப்புறப்படுத்தினார்.
அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன், கிருஷ்ணராஜ் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 3 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரனும், கிருஷ்ணராஜும் சேர்ந்து ராஜேந்திரனை கையாலும், கல்லாலும் தாக்கினர். மேலும் ராஜேந்திரனின் வலது கையை கடித்து காயப்படுத்தினர்.
இதில் காயம் அடைந்த ராஜேந்திரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இதுபற்றி கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
பின்னர் அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போலீசில் புகார் கொடுத்த ஆத்திரத்தில் ரவிச் சந்திரனும், கிருஷ்ணராஜும், ராஜேந்திரனின் தாய் கமலத்தை தாக்கி அங்கிருந்த குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தினர்.
இதுபற்றி ராஜேந்திரன் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரன், மற்றும் கிருஷ்ணராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் அருகில் உள்ள பிடஹெடி கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் யாதவ். இவரது குடும்பத்தில் அவருக்கும் மற்றவர்களுக்கும் இடையே சொத்துப் பிரச்சனை இருந்து வந்தது.
சிவ பக்தரான தீபக் யாதவ் சொத்துப் பிரச்சனை சுமூகமாக தீர வேண்டி வழிபாடு நடத்தி வந்தார். அவருக்கு சொத்துப் பிரச்சனை தீரவில்லை.
இந்த நிலையில் மனவேதனை அடைந்த தீபக் யாதவ் தான் வழக்கமாக செல்லும் சிவன் கோவிலுக்கு சென்றார். அங்கு திடீர் என்று ஆவேசம் அடைந்த அவர் சிவலிங்கத்தை கடப்பாரையால் பெயர்த்து எடுத்தார். சிலையை தூக்கிச் சென்று சேதப்படுத்தினார்.
முன்னதாக அவர் ஆவேசமாக சத்தம் போட்டு குரல் எழுப்பினார். இதைப் பார்த்து பூசாரியும் அங்கு இருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று தீபக் யாதவை கைது செய்தனர். சிவலிங்கத்தை போலீசார் கைபற்றி கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. கோவில் முன் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.