என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகன் கைது"

    • சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • எதிர்க்கட்சிகளின் வாயை அடக்க இந்த உத்தி பின்பற்றப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாஹலின் மகன் சைதன்யா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹலும் அவரது மகனும் ஒரே இல்லத்தில் வசிக்கும் நிலையில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின் முடிவில் பூபேஷ் பாஹலின் மகனை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

     

    அமலாக்கத்துறையால் தனது மகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹல் கூறுகையில்,

    காங்கிரஸ் அதானிக்கு எதிராகப் போராடுகிறது. எதிர்க்கட்சிகளின் வாயை அடக்க இந்த உத்தி பின்பற்றப்பட்டுள்ளது.

    அதானிக்கு எதிராக யாரும் குரல் எழுப்பக்கூடாது என்பதற்காக அவர்கள் இப்போது என் மகனைக் குறிவைக்கிறார்கள். நாங்கள் இதற்கு பயப்படவோ அடிபணியவோ மாட்டோம்.

    என் மகன் அவரது பிறந்தநாளில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் எனது பிறந்தநாளில் எனது ஆலோசகர் குறிவைக்கப்பட்டார் என்று கூறினார்.

    • பணத்திற்காக தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலை சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் குமார் போஸ் (வயது 64). மின்வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் சரவணகுமார் (35) கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    குமார் போசுக்கு மாதந்தோறும் வரும் ஓய்வூதிய பணத்தை சரவணகுமார் பல்வேறு காரணங்களை கூறி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி வழக்கம் போல் குமார் போசுக்கு ஓய்வூதிய பணம் வந்தது. இதனை சரவணகுமார் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தர முடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    நேற்று இரவு இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சரவணகுமார் தந்தை என்றும் பாராமல் அவரை சரமாரியாக அடித்து கீழே தள்ளி காலால் மிதித்தார்.

    இதில் குமார் போஸ் படுகாயமடைந்தார். உடனே அவரது குடும்பத்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குமார் போஸ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார். பணத்திற்காக தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • நீண்ட நேரம் ஆகியும் தாய்-மகனை காணாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சக்திவேல் அங்கு இருந்தார். அவர் அழுதபடி காணப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு திருமணமாகி விட்டது. 4 மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இவர் தனது மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.

    இவரது தாய் அசோதை (70). இவர் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு சக்திவேல் தனது தாய் அசோதையிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டார். அதோடு ரேசன் கார்டையும் கேட்டு நச்சரித்தார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 2 பேரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை திடீரென எழுந்த சக்திவேல் நேராக தனது தாய் அசோதையிடம் சென்று பணம் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தனது தாய் என்று கூட பாராமல் அசோதையை கொடூரமாக தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து மயக்கம் அடைந்தார்.

    அதிர்ச்சி அடைந்த சக்திவேல் தனது தாய் இறந்து விட்டார் என கருதி அருகில் உள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்குள்ள உறைகிணற்றில் வீசி சேலையால் அதனை மூடினார்.

    நீண்ட நேரம் ஆகியும் தாய்-மகனை காணாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சக்திவேல் அங்கு இருந்தார். அவர் அழுதபடி காணப்பட்டார். அவரிடம் கிராம மக்கள் விசாரித்த போது, தனது தாயை கொன்று விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிணற்றில் வீசப்பட்ட அசோதையின் உடலை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    பெற்ற தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விசாரணையின் முடிவில் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
    • பெற்றோரை மகன் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டீஸ்வரம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அருகே உள்ள தில்லையம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 75). இவரது மனைவி லட்சுமி (70). இவர்களுக்கு ராஜேந்திரன் (50) உள்பட 2 மகன் உள்ளனர். இதில் ராஜேந்திரன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

    இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று வெகுநேரம் வீட்டின் கதவு திறந்து கிடந்தாலும் யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு கோவிந்தராஜ், லட்சுமி ஆகிய 2 பேரும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தனர். அவர்கள் அருகில் ராஜேந்திரன் இருந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர். பின்னர் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து ராஜேந்திரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ராஜேந்திரன் திடீரென தாய், தந்தையை அரிவாளால் வெட்டி கொன்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். எதற்காக தாய், தந்தையை வெட்டி கொன்றார்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையின் முடிவில் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பெற்றோரை மகன் வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேவி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
    • மனைவியை விட்டு பிரிந்த இளங்கோவன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கிடைத்த வருவாயை தனது முதல் மகனுக்கு மட்டுமே கொடுத்து வந்துள்ளார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொம்முராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 45). இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் விக்ரம் (22) என்பவர் தந்தையுடன் வசித்து வருகிறார்.

    தேவி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு விவசாய கூலி வேலை பார்த்து வந்த இளங்கோவன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

    அடிக்கடி குமணன்தொழு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று இரவு தனது சகோதரியை பார்த்து விட்டு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது காமன் கல்லூர் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு அருகில் உள்ள சாலையோரம் இளங்கோவனை மர்ம நபர்கள் வீசிச் சென்றனர்.

    அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இளங்கோவன் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசாரணையில் இளங்கோவனை அவரது மகன் விக்ரம் மற்றும் அக்கா மகன் தமிழ்செல்வன் (22) ஆகியோர் கொலை செய்தது உறுதியானது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மனைவியை விட்டு பிரிந்த இளங்கோவன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கிடைத்த வருவாயை தனது முதல் மகனுக்கு மட்டுமே கொடுத்து வந்துள்ளார். 2-வது மகன் விக்ரம் திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்த நிலையில் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இது குறித்து அவர் கேட்டபோது, எனக்கு பிறக்கவில்லை. யாருக்கு பிறந்தாய்? என்று உன் அம்மாவிடம் கேட்டுப்பார் என தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார்.

    இதனால் மனவேதனையடைந்த அவர் தனது தந்தையை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். அதன்படி தனது அத்தை மகனான தமிழ்செல்வனுடன் சேர்ந்து நேற்று இரவு இளங்கோவனுக்கு அதிக அளவில் மதுபானங்களை வாங்கிக் கொடுத்தனர். போதையில் தனது வீட்டுக்கு இளங்கோவன் நடந்து சென்று கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த அவர்கள் துண்டால் முகத்தை மூடி கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் சாலையில் வீசி விட்டால் ஏதேனும் வாகனம் மோதி விபத்தில் இறந்ததைப் போல காட்டி விடலாம் என்பதற்காக சாலையோரம் வீசி சென்றுள்ளனர்.

    விசாரணை நடத்தியதில் அவர்கள் கொலை செய்ததை ஒத்துக்கொண்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரவிந்தன் 10-ம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பு படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார்.
    • மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த வாஞ்சியூரை சேர்ந்தவர் மோகன் (வயது 55) விவசாயி. இவரது மனைவி கமலா. இவர்களுக்கு அரவிந்தன் (19), அர்ஜூன் (15) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    அரவிந்தன் 10-ம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பு படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அரவிந்தன் மதுபானம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது மோகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு நடந்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த மகன் அரவிந்தன் குடிபோதையில் வீட்டில் இருந்த கடப்பாரையால் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மோகன் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மோகனை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் மகனே தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சங்கரம்மா வீட்டில் இல்லாததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமுலுவிடம் விசாரித்தனர்.
    • தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அமடபாகுலா பகுதியை சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 64). இவரது மகன் ராமுலு, மருமகள் சிவமணி. ராமுலு அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் சங்கரம்மா கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்தார். ராமுலு தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இதனால் தனது மனைவியுடன் சேர்ந்து தாயை கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தாயை கழுத்தை நெருங்கி 2 பேரும் கொலை செய்தனர்.

    பின்னர் தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தனர்.

    சங்கரம்மா வீட்டில் இல்லாததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமுலுவிடம் விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வனபர்த்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் நாகசேகர் மற்றும் போலீசார் ராமுழு அவரது மனைவி சிவமணி ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாய் நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்ததால் அவரை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கரம்மாவின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனபர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகன், மருமகளை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மணிகண்டன் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூர் வீரமாத்தி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி (60). இவரது மகன் மணிகண்டன் (34) கூலி தொழிலாளி. இந்த நிலையில் இவர் வேலைக்கு சரியாக செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.

    இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் இல்லை என்று மறுத்து விட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க வந்த அவரது சகோதரியையும் அவர் தாக்கினார். பின்னர் இதுகுறித்து தனலட்சுமி குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை மல்லி போலீசார் கைது செய்தனர்.
    • மது போதையில் மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி சித்ரா தெரிவித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணப்பேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது மனைவி சித்ரா (45). இவர்களது மகன் மணிகண்டன்(27). மணிகண்டனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மணிகண்டன் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். ஆறுமுகம் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் விவசாயம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம் தனது வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணபேரி கிராம நிர்வாக அலுவலர் உமாராணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார்.

    அப்போது ஆறுமுகம் மதுபோதையில் மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி சித்ரா தெரிவித்தார்.

    ஆனால் ஆறுமுகத்தின் உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உமாராணி மல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில், கடந்த 10-ம் இரவு குடிபோதையில் வந்த ஆறுமுகம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தும், அப்போது மகன் மணிகண்டன் தாக்கியதில் ஆறுமுகம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ஆறுமுகம் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    • தனது தந்தை ராமனிடம் செலவுக்கு பணம் கேட்டார்.
    • அவர் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த தமிழரசன் தந்தையை கத்தியால் குத்தினார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மடத்தூரை சேர்ந்தவர் ராமன் (வயது 50). ஓசூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் தமிழரசன் (19). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தனது தந்தை ராமனிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த தமிழரசன் தந்தையை கத்தியால் குத்தினார்.

    இதில் காயமடைந்த ராமன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். 

    • பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
    • கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 73). இவருக்கு கடல்கனி என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    கடல்கனி கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் தனது தந்தையை பஸ்சில் நெல்லைக்கு அழைத்து வந்த கடல்கனி, வண்ணார்பேட்டை பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து தரதரவென இழுத்துச்சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே வைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

    இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். அவர் கேரளாவில் வியாபாரம் செய்து வருவதால் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல் சவுத்திரி தலைமையிலான போலீசார் அங்கு சென்று முகாமிட்டு கொலையாளியை தேடி வந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரக்கரையில் வைத்து கடல்கனியை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் கூறியதாவது:-

    எனது தந்தையின் பெயரில் இருந்த ஒரு சொத்தை அவர் ஏற்கனவே விற்றுவிட்டார். தற்போது மற்றொரு சொத்தையும் விற்கப்போவதாக சொன்னார். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். அதே நேரத்தில் அவர் வயது முதிர்ச்சியால் நோய் வாய்ப்பட்டார். அவரை ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் அழைத்துச்சென்று வெறுப்படைந்துவிட்டேன். இதனால் மன விரக்தியில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன் என்றார். இதனை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.
    • வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ராஜசேகர உடையார். அவரது 2-வது மனைவி ஜெயமேரி (வயது 51). இவர்களது மகன் அமலோற்பவ நாதன் (28). பி.டெக் என்ஜினீயர்.

    சொத்து தகராறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ராஜசேகர உடையார் முதல் மனைவியின் உறவினரான மணவாளன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயமேரி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் ஜாமீனில் வந்த அவர் லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் விரிவாக்கம் 20-வது குறுக்கு தெருவில் தனது மகனுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த மகன் அமலோற்பவநாதன், மிகுந்த கோபமடைந்தார். இந்த வயதில் வேறுநபருடன் வீடியோ கால் மூலம் நிர்வாணமாக பேசுகிறாயே என கேட்டு ஆத்திரத்தில் வீட்டில் கிடந்த நாற்காலியால் தாய் என்றும் பாராமல் ஜெயமேரியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். பின்னர் சமையல் அறையில் இருந்த கத்தியால் 12 முறை தாயை அமலோற்பவநாதன் குத்தி கொலை செய்தார். அதன்பின் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    இந்த கொலை தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலோற்பவநாதனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அமலோற்பவநாதன் மீதான கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டு நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இந்த வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    ×