என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மதுரை அருகே தந்தையை அடித்துக்கொன்ற மகன்
- பணத்திற்காக தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கொலை சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் குமார் போஸ் (வயது 64). மின்வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் சரவணகுமார் (35) கட்டிட வேலை பார்த்து வந்தார்.
குமார் போசுக்கு மாதந்தோறும் வரும் ஓய்வூதிய பணத்தை சரவணகுமார் பல்வேறு காரணங்களை கூறி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி வழக்கம் போல் குமார் போசுக்கு ஓய்வூதிய பணம் வந்தது. இதனை சரவணகுமார் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தர முடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.
நேற்று இரவு இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சரவணகுமார் தந்தை என்றும் பாராமல் அவரை சரமாரியாக அடித்து கீழே தள்ளி காலால் மிதித்தார்.
இதில் குமார் போஸ் படுகாயமடைந்தார். உடனே அவரது குடும்பத்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குமார் போஸ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார். பணத்திற்காக தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.