search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father murder"

    • நாராயணசாமி மீது அஸ்வத் குமார் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
    • அஸ்வத் குமார் அரிவாளுடன் நேராக போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் தசரதன் (வயது 50) விவசாயி.

    இவரது மகன் அஸ்வத் குமார் (30) பசுவந்தனையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அருணா. கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அருணா கீழகூட்டுப்பண்ணை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    அஸ்வத் குமார் கடந்த சில நாட்களாகவே தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாகவும், இதுதொடர்பாக அவருக்கும், அவரது மாமனார் நாராயணசாமிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் நாராயணசாமி மீது அஸ்வத் குமார் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இது தொடர்பாக ஆவேசம் அடைந்த அஸ்வத் குமார் இன்று காலை அரிவாளுடன் மாமனார் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதைப்பார்த்த அவரது தந்தை தசரதன் அதிர்ச்சி அடைந்தார். அவர் இதுபற்றி தனது சம்பந்தி நாராயணசாமியிடம் போன் மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நாராயணசாமி வீட்டில் அனைத்து கதவுகளையும் அடைத்து விட்டு வீட்டிற்குள் இருந்துள்ளார். அப்போது அரிவாளுடன் அங்கு சென்ற அஸ்வத் குமார் வீட்டு கதவை அடித்து உடைத்து சூறையாடி உள்ளார்.

    இந்நிலையில் மகனை சமாதானப்படுத்துவதற்காக அங்கு சென்ற தசரதன், அஸ்வத் குமாரை கண்டித்து அவரை தடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆவேசம் அடைந்த அஸ்வத் குமார் தந்தை என்றும் பாராமல் தசரதனை அரிவாளால் வெட்டினார். இதனால் படுகாயம் அடைந்த அவர் அங்கிருந்து ஓடிய போது அவரை அஸ்வத் குமார் மீண்டும் சரமாரியாக வெட்டினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தசரதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இந்த கொலை பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆன்டனி திலீப் மற்றும் போலீசார் விரைந்து சென்று தசரதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் அஸ்வத் குமார் அரிவாளுடன் நேராக போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவரை வழியிலேயே தடுத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய் அழுது கொண்டிருப்பதை கண்ட பிரேம்குமாருக்கு தந்தை மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது.
    • மணல்மேல்குடி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணல்மேல் குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்( வயது 46) மீன்பிடி தொழிலாளி.

    இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரேம்குமார் (23) சிவகங்கை மாவட்டத்தில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான வேல்முருகன் அவ்வப்போது குடிபோதையில் அவரது மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனை அவரது மகன்கள் கண்டித்தனர்.

    இருந்த போதிலும் வேல்முருகன் குடிபோதையில் மனைவியிடம் ரகளை செய்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம் போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த வேல்முருகன் மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் அவரை தாக்கினார். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் கதறி அழுதார். தாய் அழுது கொண்டிருப்பதை கண்ட பிரேம்குமாருக்கு தந்தை மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தந்தையின் வயிற்றுப் பகுதியில் ஓங்கி குத்தினார். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    பின்னர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு வேல்முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த மணல்மேல்குடி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தாயை தாக்கியதால் தந்தையை மகன் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
    • கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 73). இவருக்கு கடல்கனி என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    கடல்கனி கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் தனது தந்தையை பஸ்சில் நெல்லைக்கு அழைத்து வந்த கடல்கனி, வண்ணார்பேட்டை பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து தரதரவென இழுத்துச்சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே வைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

    இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். அவர் கேரளாவில் வியாபாரம் செய்து வருவதால் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல் சவுத்திரி தலைமையிலான போலீசார் அங்கு சென்று முகாமிட்டு கொலையாளியை தேடி வந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரக்கரையில் வைத்து கடல்கனியை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் கூறியதாவது:-

    எனது தந்தையின் பெயரில் இருந்த ஒரு சொத்தை அவர் ஏற்கனவே விற்றுவிட்டார். தற்போது மற்றொரு சொத்தையும் விற்கப்போவதாக சொன்னார். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். அதே நேரத்தில் அவர் வயது முதிர்ச்சியால் நோய் வாய்ப்பட்டார். அவரை ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் அழைத்துச்சென்று வெறுப்படைந்துவிட்டேன். இதனால் மன விரக்தியில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன் என்றார். இதனை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஸ்ரீலட்சுமியின் தந்தை, மகளை ஜிஷ்ணுவுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி ஜிஷ்ணு உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 63). இவரது மகள் ஸ்ரீலட்சுமி.

    ஸ்ரீலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜிஷ்ணு என்பவருக்கும் பழக்கம் இருந்தது. இதில் நெருக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலட்சுமியை ஜிஷ்ணு காதலிக்க தொடங்கினார். மேலும் அவர் ஸ்ரீலட்சுமியின் தந்தை ராஜூவிடம் சென்று அவரை தனக்கு திருமணம் செய்து தர கேட்டார்.

    ஆனால் ஸ்ரீலட்சுமியின் தந்தை, மகளை ஜிஷ்ணுவுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார். மேலும் அவசரமாக ஸ்ரீலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். இவர்களின் திருமணம் இன்று நடக்க இருந்தது.

    இந்த தகவல் அறிந்து ஜிஷ்ணு ஆத்திரம் அடைந்தார். இன்று அதிகாலையில் அவர், தனது நண்பர்கள் சிலருடன் ஸ்ரீலட்சுமி வீட்டுக்கு சென்றார். அங்கு ஸ்ரீலட்சுமியும், அவரது தந்தையும் இருந்தனர். அவர்களை ஜிஷ்ணுவும், அவரது நண்பர்களும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த ராஜூ, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே ஜிஷ்ணுவும், அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதற்கிடையே ராஜூவின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்தனர். அவர்கள் ராஜூவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே ராஜூ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி கல்லம்பலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ஜிஷ்ணு உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    ஸ்ரீலட்சுமிக்கு இன்று காலை 10.30 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் அவரது கண்முன்பு தந்தையை முன்னாள் காதலன் ஜிஷ்ணு கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனது தந்தை தாக்கப்படுவதை கண்ட மகன் தடுக்க முயன்றபோது அவரையும் மர்மகும்பல் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இரு கொலைகளுக்கும் பழிக்குப்பழியாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னை:

    ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது41). இவர் தனது வீட்டு அருகில் வசிக்கும் உறவினர் ஒருவரின் 16-ம் நாள் துக்க காரிய நிகழ்ச்சிக்காக 10-ம் வகுப்பு பயிலும் தனது மகனுடன் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டோ மற்றும் 3 இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 8 பேர் கொண்ட மர்மகும்பல் சீனிவாசனை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தனது தந்தை தாக்கப்படுவதை கண்ட மகன் தடுக்க முயன்றபோது அவரையும் மர்மகும்பல் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    கொலையுண்ட சீனிவாசன் மீது 2014-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கும் 2021-ம் ஆண்டு பிரபல ரவுடி நாகூர் மீரான் கொலை வழக்கிலும் சிறைக்கு சென்று வந்தவர் எனவும் மேலும் பல வழக்குகள் அவர் மீது உள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த இரு கொலைகளுக்கும் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கொலை சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவை வைத்தும் விசாரணை செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியான ஆதம்பாக்கத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பணத்திற்காக தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலை சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் குமார் போஸ் (வயது 64). மின்வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் சரவணகுமார் (35) கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    குமார் போசுக்கு மாதந்தோறும் வரும் ஓய்வூதிய பணத்தை சரவணகுமார் பல்வேறு காரணங்களை கூறி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி வழக்கம் போல் குமார் போசுக்கு ஓய்வூதிய பணம் வந்தது. இதனை சரவணகுமார் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தர முடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    நேற்று இரவு இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சரவணகுமார் தந்தை என்றும் பாராமல் அவரை சரமாரியாக அடித்து கீழே தள்ளி காலால் மிதித்தார்.

    இதில் குமார் போஸ் படுகாயமடைந்தார். உடனே அவரது குடும்பத்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குமார் போஸ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார். பணத்திற்காக தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமராஜ் தனது தந்தையை அடித்து கீழே தள்ளினார்.
    • பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பழனி:

    பழனி அருகில் உள்ள அமரபூண்டியை சேர்ந்தவர் ராமசாமி(80). இவரது மகன் ராமராஜ்(50). கூலித்தொழிலாளி. ராமசாமியால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் இவரது மகனிடம் செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார்.

    ஆனால் அவர் பணம் தராததால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதேபோல் இன்றும் தனது மகனிடம் ராமசாமி பணம் கேட்டார். அதற்கு ராமராஜ் பணம் தர மறுத்ததுடன் தகாத வார்த்தையால் திட்டினார். அவர் பணம் தராமல் வீட்டைவிட்டு செல்லகூடாது என கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ராமராஜ் தனது தந்தையை அடித்து கீழே தள்ளினார். பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து ராமராஜை கைது செய்தனர்.

    • தந்தையின் கழுத்தை அறுத்த ரத்த கறை படிந்த கத்தியுடன் தனது காதலி வீட்டுக்கு சென்ற நரசிம்மலு காதலுக்கு இடையூறாக இருந்த தனது தந்தையை வெட்டி கொலை செய்து விட்டதாக தெருவில் நின்று சத்தமிட்டார்.
    • நரசிம்மலுவின் சத்தத்தை கேட்ட அங்கிருந்தவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது சட்டை முழுவதும் ரத்தக் கறையுடன் நரசிம்மலு நின்று கொண்டு இருந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கோசுகி நாகண்ணா காலனியை சேர்ந்தவர் வீரய்யா (வயது 45). இவரது மகன் நரசிம்மலு (23). நரசிம்மலு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் வீரய்யாவுக்கு தெரியவந்தது.

    மகன் இளம்பெண்ணை காதல் செய்வது பிடிக்காததால் இளம்பெண் கடைக்கு, கோவிலுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் அவரை மடக்கி காதலை கைவிடுமாறு மகனின் காதலியை வீரய்யா மிரட்டி வந்தார்.

    இதனால் இளம்பெண் மிகுந்த துயரத்திற்கு ஆளானார். இதுகுறித்து தனது காதலனிடம் தெரிவித்தார்.

    அவரும் இளம்பெண்ணை சிறிது நாட்கள் பொறுத்துக் கொள்ளுமாறு சமாதானம் செய்து வந்தார்.

    இருப்பினும் வீரய்யா தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மலு கத்தியை எடுத்து வந்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தனது தந்தையை சரமாரியாக வெட்டினார்.

    இதில் வீரய்யா துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தந்தையின் கழுத்தை அறுத்த ரத்த கறை படிந்த கத்தியுடன் தனது காதலி வீட்டுக்கு சென்ற நரசிம்மலு காதலுக்கு இடையூறாக இருந்த தனது தந்தையை வெட்டி கொலை செய்து விட்டதாக தெருவில் நின்று சத்தமிட்டார்.

    நரசிம்மலுவின் சத்தத்தை கேட்ட அங்கிருந்தவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது சட்டை முழுவதும் ரத்தக் கறையுடன் நரசிம்மலு நின்று கொண்டு இருந்தார்.

    அங்கிருந்த பொதுமக்கள் நரசிம்மலுவை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் தன்னை பிடிக்க வந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டினார்.

    இது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நரசிம்மலுவை பிடித்து கைது செய்து அவரது தந்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவனந்தபுரத்தில் 6 வயது மகனின் வாக்குமூலத்தால் தந்தையை கொன்ற தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு வட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 35). இவரது மனைவி ராக்கி (26). இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    கடந்த 12-ந்தேதி வினோத் தனது மனைவி மற்றும் மகனுடன் அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சத்தம்போட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் ராக்கி அலறும் சத்தம் கேட்டதால் அக்கம், பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிச் சென்றனர்.

    அப்போது தனது வீட்டு முன்பு கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வினோத் பிணமாக கிடந்தார். தன்னுடன் தகராறு செய்த கணவர் வினோத் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி ராக்கி கதறி அழுதார்.

    இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று வினோத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையில் வினோத்தின் தந்தை ஜோசப் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் எனது மகன் வினோத்துக்கும், ராக்கிக்கும் திருமணம் ஆனதில் இருந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர்கள் தனிக்குடித்தனம் சென்று விட்டனர். அதன் பிறகும் அவர்கள் இடையே தகராறு நீடித்தது. இதனால் வினோத்தை ஆள் வைத்து ராக்கி தாக்கிய சம்பவமும் நடந்து உள்ளது. எனவே எனது மகன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. அதில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையில் பிரேத பரிசோதனையின் போது வினோத்தின் கையில் ராக்கியின் தலைமுடி இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது ராக்கியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர் கணவர் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவே போலீசாரிடம் மீண்டும், மீண்டும் கூறினார்.

    இதனால் ராக்கியின் 6 வயது மகனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் தனது மகன் பேசுவதை இடைமறித்து ராக்கி பேசியபடி இருந்தார். இதைத்தொடர்ந்து அந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.

    அப்போது வினோத் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. ராக்கியும், அவரது கள்ளக்காதலன் மனோஜ் ஆகியோர் சேர்ந்து வினோத்தை தீர்த்து கட்டியதும் தெரிய வந்தது.

    வினோத்தின் உறவினரான மனோஜ் அந்த பகுதியில் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி வினோத் வீட்டிற்கு வந்து சென்றதில் ராக்கியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    சம்பவத்தன்று ஆலயத்திற்கு சென்று வந்ததும் வினோத் கடைக்கு சென்று உள்ளார். அப்போது மனோஜ், ராக்கியை பார்ப்பதற்காக அங்கு வந்தார். உடனே தனது மகனை வீட்டுக்கு வெளியே விளையாடும்படி அனுப்பிவிட்டு ராக்கி கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

    அந்த நேரம் வினோத் வீட்டிற்கு வந்துவிட்டதால் அந்த காட்சியை நேரில் பார்த்து ஆத்திரமடைந்தார். இதனால் மனோஜ் அங்கிருந்த கத்தியை எடுத்து வினோத் கழுத்தில் குத்தி உள்ளார். கணவர் வினோத் தப்பிவிடாமல் இருக்க அவரது கைகளை ராக்கி பிடித்துக்கொண்டு கொலைக்கு உடந்தையாக இருந்து உள்ளார். இந்த தகவல்களை அந்த சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான்.

    இதைத்தொடர்ந்து கள்ளக்காதலன் மனோஜை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக ராக்கியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
    சென்னை பாடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தந்தை என்றும் பாராமல் மகன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அம்பத்தூர்:

    சென்னை பாடி கலைவாணர் நகர் மதுரைவீரன் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (52).

    இவர் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். மகன்கள் குமரேசன், சூரிய பிரகாஷ் ஆகியோரும் தந்தையுடன் சேர்ந்து பழக்கடையை கவனித்து வந்தனர்.

    நேற்று இரவு 11.30 மணி அளவில் பழக்கடையை மூடி விட்டு தமிழ்செல்வன், 2 மகன்களுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் வைத்து 2-வது மகனான சூரியபிரகாசுக்கும், தமிழ் செல்வனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த சூரியபிரகாஷ் தந்தையுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

    அப்போது வீட்டில் இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து சூரிய பிரகாஷ், தந்தை என்றும் பாராமல் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

    பலத்த காயம் அடைந்த தமிழ்செல்வனை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சூரியபிரகாசை கைது செய்தார்.
    ஈரோடு அருகே சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு நாராயண வலசு, வாய்க்கால் மேடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் நாராயணமூர்த்தி (39). திருமணமாகவில்லை. மகள் தங்கமணி (36) திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    ராமசாமி மகன்நாராயண மூர்த்தி மகள் தங்கமணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே சொத்து தொடர்பாக தந்தை-மகன் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு இது தொடர்பாக மீண்டும் அவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது ராமசாமி தனது பெயரில் உள்ள வீட்டை தனது மகள் தங்க மணிக்கு எழுதிவைப்பதாக கூறினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த நாராயண மூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழல் மற்றும் கட்டையால் ராமசாமியை சராமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த ராமசாமி உயிருக்காக போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு போராடிய ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி இரவு 10.45 மணிக்கு ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ராமசாமியின் மகள் தங்கமணி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.

    அதன்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து நாராயண மூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு தந்தையை கொன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). அவரது மனைவி மகாலட்சுமி (46). அதே பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தனர்.

    இவர்களுக்கு வினோத்குமார் (26) என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். வினோத்குமார் எம்.பி.ஏ. முடித்து விட்டு கோவிலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அபிராமி ஆசிரியர் பயிற்சி முடித்து நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    வினோத்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வினோத்குமாருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. நேற்று இரவு போதையில் வீட்டிற்கு வந்த அவர் தந்தையின் தலையில் அம்மி கல்லைபோட்டு கொலை செய்தார். இதை பார்த்ததும் அருகில் இருந்த அவரது தாய் மகாலட்சுமி சத்தம்போட்டார்.

    இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தனது தாயை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவர்களது சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இது குறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வேடசந்தூர் டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் அங்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் செல்வராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வராஜுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருக்கும் அடிக்கடி தகராறு இருந்து உள்ளது. நேற்று இரவு போதையில் வந்த வினோத்குமார் அவர்களிடம் எதற்காக எங்களது வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்கிறீர்கள் என சத்தம் போட்டார். இதனால் அவர்களுக்கு கடும் வாக்கு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த மகாலட்சுமி தனது மகனை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் அங்கு வராமல் கத்தியால் தாய் என்று கூட பாராமல் சரமாரியாக குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் தடுக்க வந்தார். அவரை கீழே தள்ளி அருகில் கிடந்த அம்மிக்கல்லை செல்வராஜ் தலையில் வினோத்குமார் போட்டார். இதில் அவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்து உள்ளது. அதன்பின்னர் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.
    ×