search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul murder"

    • திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிலப்பிரச்சினையில் விவசாயி கொல்லப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே பொன்மாந்துறையை சேர்ந்தவர் குட்டிமயில் என்ற பெருமாள்(26). இவர் நேற்றிரவு பொன்மாந்துறை புதுப்பட்டி ஆற்றுப்பாலம் சுடுகாடு பகுதியில் வீரமணி, சேசுராஜ், தமிழ் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினார்.

    அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் அடித்து மோதிக்கொண்டனர். அப்போது குட்டிமயில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நண்பர்களை மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் குட்டிமயிலை கத்தியால் முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினர்.

    ரத்தகாயங்களுடன் சரிந்த குட்டிமயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் விரைந்து வந்து குட்டிமயில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீரமணி, சேசுராஜ், தமிழ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் எதிரே பர்னிச்சர் கடை நடத்தி வந்த மணிகண்டன் என்பவர் சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் குட்டிமயில் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் நண்பர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிலப்பிரச்சினையில் விவசாயி கொல்லப்பட்டார். இதேபோல் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • மணிமாலமுருகன் மற்றும் அவரது உறவினர் உத்தப்பனை வழி மறித்து தகராறு செய்தார்.
    • பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உத்தப்பனை கழுத்தை அறுத்தார்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த ஜாதிக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் உத்தப்பன் (வயது 55). விவசாயியான இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவியும், நாகபாலன் என்ற மகன் மற்றும் முருகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். மகன் நாகபாலன் கரூரில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். உத்தப்பனுக்கு ஜாதிகவுண்டன்பட்டி அருகே உள்ள கொல்லபட்டியில் விவசாய நிலம் உள்ளது. உத்தப்பனின் மனைவி சுப்பம்மாளின் உறவினரான கொல்லபட்டியை சேர்ந்த மணிமாலமுருகன் என்பவருக்கும் உத்தப்பனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. நிலம் சம்பந்தமாக இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வருவதால் உத்தப்பன் தனது நிலத்தில் விவசாயம் செய்யாமல் தரிசாக போட்டு விட்டு விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று மாலை தோட்டத்தில் கூலி வேலை பார்த்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மணிமாலமுருகன் மற்றும் அவரது உறவினர் உத்தப்பனை வழி மறித்து தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உத்தப்பனை கழுத்தை அறுத்தார். இதில் அவர் கழுத்து அறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அம்பாத்துரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை செய்தனர். பின்னர் கொலையில் ஈடுபட்ட மணிமாலமுருகன் மற்றும் தினேஷ் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியைச் சேர்ந்த பாலு மகன் கார்த்திக் (வயது 35). இவருக்கு சந்திரா என்ற மனைவியும், கவுசல்யா (7) என்ற மகளும் உள்ளனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வெள்ளைப்பூண்டு, மாதுளம்பழம் போன்றவை வாங்கி வாகனத்தில் வைத்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு அனுமந்தன்நகரில் போடப்பட்டுள்ள புதிய பாலத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் இவரை பயங்கர ஆயுதங்களுடன் விரட்டி வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் உயிருக்கு பயந்து பாலத்தின் மீது ஓடினார். ஆனால் 2 புறமும் சுற்றி வளைத்த அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அரிவாள் மற்றும் பட்டா கத்தி போன்ற ஆயுதங்களுடன் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

    15-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்தது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஏ.டி.எஸ்.பி. சுகாசினி தலைமையில் நகர் வடக்கு போலீசார் விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட கார்த்திக்கின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் விட்டுச் சென்ற 2 ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கார்த்திக் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேவல் சண்டை நடத்திய தகராறில் கார்த்திக் ஒரு சிலரை அரிவாளால் வெட்ட முயன்றார். இதனால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இவரது அண்ணன் செல்வம் என்பவரும் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார்த்திக் முக்கிய சாட்சியாக உள்ளார்.

    தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் மனைவி மற்றும் குழந்தையுடன் கோபால்பட்டியில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ரவுண்டு ரோட்டுக்கு குடி வந்துள்ளார்.

    ஏற்கனவே இவர் மீது முன் விரோதத்தில் இருந்த நபர்கள்தான் கார்த்திக்கை வெட்டி படுகொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகப்படுகிறோம். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தனர்.
    திண்டுக்கல் அருகே வெடிகுண்டு வீசி கணவன், மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பூர் பாண்டி (வயது 43). கூலித் தொழிலாளி. அவரது மனைவி பஞ்சு என்கிற பஞ்சவர்ணம் (40). இவர்களது மகன்கள் அசோக், சேகர்.

    திருப்பூர் பாண்டி தனது மகன்கள், மனைவியுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் தாலுகா போலீஸ் சரகம் நல்லாம்பட்டி நெசவாளர் காலனியில் உள்ள உறவினர் தங்கராஜ் வீட்டுக்கு வந்திருந்தனர்.

    இன்று காலை அசோக், சேகர் ஆகிய 2 பேரும் காலை கடன்களை முடிப்பதற்காக வெளியே சென்று விட்டனர். திருப்பூர் பாண்டியும், பஞ்சவர்ணமும் உறவினர் வீட்டில் இருந்தனர். காலை 10 மணியளவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்தது. அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தங்கராஜ் வீட்டின் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசினர்.

    அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீடு சேதமடைந்தது. சத்தம் கேட்டு பஞ்சவர்ணம் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு நின்ற 4 பேர் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சவர்ணம் இறந்தார். சத்தம் கேட்டு திருப்பூர் பாண்டி வந்தார். மர்ம நபர்களை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார்.

    உஷாரான அந்த கும்பல் திருப்பூர் பாண்டியை ஓட ஓட அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

    தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சம்பவ இடத்துக்கு விரைந்தார். 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கொலையுண்ட திருப்பூர் பாண்டியின் சொந்த ஊரான பாறைபட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல ரவுடி குமரேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திருப்பூர் பாண்டியின் மகன்கள், அசோக், சேகர் சம்பந்தப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் கைதான 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்து கோவையில் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்லாம்பட்டி உறவினர் வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்த கொலை வெறி கும்பல் அசோக், சேகரை கொல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்கள் வெளியே சென்றிருந்ததால் தாய்-தந்தையை மர்ம கும்பல் வெட்டி கொன்றுள்ளது. மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சிறிது நேரம் கழித்து வெளியே சென்றிருந்த 2 மகன்களும் வீட்டுக்கு வந்தனர். அப்போது தனது தாய் தந்தை கொலை செய்யப்பட்டதை அறிந்து கதறி துடித்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள்.
    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு தந்தையை கொன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). அவரது மனைவி மகாலட்சுமி (46). அதே பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தனர்.

    இவர்களுக்கு வினோத்குமார் (26) என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். வினோத்குமார் எம்.பி.ஏ. முடித்து விட்டு கோவிலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அபிராமி ஆசிரியர் பயிற்சி முடித்து நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    வினோத்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வினோத்குமாருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. நேற்று இரவு போதையில் வீட்டிற்கு வந்த அவர் தந்தையின் தலையில் அம்மி கல்லைபோட்டு கொலை செய்தார். இதை பார்த்ததும் அருகில் இருந்த அவரது தாய் மகாலட்சுமி சத்தம்போட்டார்.

    இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தனது தாயை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவர்களது சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இது குறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வேடசந்தூர் டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் அங்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் செல்வராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வராஜுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருக்கும் அடிக்கடி தகராறு இருந்து உள்ளது. நேற்று இரவு போதையில் வந்த வினோத்குமார் அவர்களிடம் எதற்காக எங்களது வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்கிறீர்கள் என சத்தம் போட்டார். இதனால் அவர்களுக்கு கடும் வாக்கு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த மகாலட்சுமி தனது மகனை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் அங்கு வராமல் கத்தியால் தாய் என்று கூட பாராமல் சரமாரியாக குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் தடுக்க வந்தார். அவரை கீழே தள்ளி அருகில் கிடந்த அம்மிக்கல்லை செல்வராஜ் தலையில் வினோத்குமார் போட்டார். இதில் அவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்து உள்ளது. அதன்பின்னர் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.
    திண்டுக்கல் அருகே பஞ்சம்பட்டியில் ஓய்வு பெற்ற ஆசிரியரை கீழே தள்ளி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள பஞ்சம்பட்டி செபஸ்தியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் யாகப்பராஜ் (வயது 70). இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகன்கள் திருமணமாகி வெளி நாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று என்.பஞ்சம்பட்டியைச் சேர்ந்த சுறா பாஸ்கர் (27) என்பவர் குடிபோதையில் அதே பகுதியில் தகாத வார்த்தைகளால் பேசி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

    அப்போது அவ்வழியே சென்ற ஜான்யாகப்பராஜ் அவர் சத்தம் போடுவதை தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு சுறா பாஸ்கர் அவரையும் தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளியுள்ளார்.

    நிலை தடுமாறி கீழே விழுந்த ஆசிரியர் ஜான் யாகப்பராஜ் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அறிந்த சின்னாளப்பட்டி போலீசார் விரைந்து சென்று ஆசிரியரை கொலை செய்த வழக்கில் சுறா பாஸ்கரை கைது செய்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×