திண்டுக்கல்லில் குடும்ப தகராறில் அண்ணனை குத்திக் கொன்ற தம்பி

திண்டுக்கல்லில் குடும்ப தகராறில் அண்ணணை தம்பியே குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட இஸ்ரவேல் ராஜா.
கொலை செய்யப்பட்ட இஸ்ரவேல் ராஜா.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் முத்தழகுப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இஸ்ரவேல்ராஜா (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில வருடங்களாக குடும்பத்துடன் இஸ்ரவேல்ராஜா திருச்சியில் தங்கி சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.

தற்போது முத்தழகுப்பட்டி செபஸ்தியார் கோவில் திருவிழா நடந்து வருவதால் அதற்காக நேற்று குடும்பத்துடன் ஊருக்கு வந்தார். முத்தகுப்பட்டியில் அவரது தம்பி விஜி என்ற சிங்கராயன் (35). குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவருடன் தாயாரும் வசித்து வருகிறார். திருவிழவுக்கு வந்த சமயத்தில் இஸ்ரவேல் ராஜாவுக்கும் சிங்கராயனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்களது உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இன்று காலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு மூண்டது. இதில் ஆத்திரமடைந்த சிங்கராயன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணன் என்றும் பாராமல் இஸ்ரவேல் ராஜாவை பல இடங்களில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இஸ்ரவேல்ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவுக்கு வந்த சமயத்தில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com