என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பழனி அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
- வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமராஜ் தனது தந்தையை அடித்து கீழே தள்ளினார்.
- பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பழனி:
பழனி அருகில் உள்ள அமரபூண்டியை சேர்ந்தவர் ராமசாமி(80). இவரது மகன் ராமராஜ்(50). கூலித்தொழிலாளி. ராமசாமியால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் இவரது மகனிடம் செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார்.
ஆனால் அவர் பணம் தராததால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதேபோல் இன்றும் தனது மகனிடம் ராமசாமி பணம் கேட்டார். அதற்கு ராமராஜ் பணம் தர மறுத்ததுடன் தகாத வார்த்தையால் திட்டினார். அவர் பணம் தராமல் வீட்டைவிட்டு செல்லகூடாது என கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ராமராஜ் தனது தந்தையை அடித்து கீழே தள்ளினார். பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து ராமராஜை கைது செய்தனர்.