என் மலர்
நீங்கள் தேடியது "land dispute"
- விவசாய நிலம் காரணமாக அண்ணன் தம்பி இடையேமுன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.
- சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே டி. குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாவாடை. இவரது தம்பி குமார். இவர்களுக்கு அதே பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலம் காரணமாக அண்ணன் தம்பி இடையே சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் முன் விரோதம் காரணமாக நேற்று குமார் மற்றும் குமாரின் மனைவி கலையரசி மகன் அய்யப்பனுடன் பாவாடை வீட்டிற்கு சென்று அவரது மனைவி அலமேலுவை தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த அலமேலு கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கனகராஜ் என்பவருக்கும் செல்வகுமார் நிலம் எதிரே விவசாய நிலம் உள்ளது.
- கனகராஜ் மண்வெட்டியால் செல்வ குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 55) விவசாயி. இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் கந்தாடு பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் செல்வகுமார் நிலம் எதிரே விவசாய நிலம் உள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலினால் ஓரிரு இடங்களில் அதிகமாக மழை பெய்து ஏரி, குளங்கள் எல்லாம் நிரம்பி வயல்வெளிகளில் அதிகமான தண்ணீர் தேங்கியது. மரகாணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் தண்ணீர் அளவுக்கு அதிகமாக தேங்கியது.
இதனால் செல்வகுமார் தனது வயலில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற வரப்புகளை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கனகராஜ் அவரது வயலில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வரப்புக ளை சரி செய்ய முயன்றார். இதனால் செல்வ குமாருக்கும் கனகராஜு க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த கனகராஜ் தன் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் செல்வ குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் மரக்கணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேலும் இதுகுறித்து செல்வகுமார் மரக்கணம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ெஜயிலில் அடைத்தனர்
- அளவு கற்கைகளை அகற்றியதால் ஆத்திரம்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் வினாயகம். இவரது மனைவி ஜமுனா (வயது 52)இவர்களுக்கும் மகிமைதாஸ் என்பவருக்கும் சமீப காலமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து கடந்த 15-ந் தேதி வருவாய் அலுவலர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தினை சொந்தமானவர்களுக்கு அளவீடு செய்து அளவுகல் நட்டு சென்றனர்.
இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த வினோத் குமார், மகிமைதாஸ், ஜெயந்தி, முரளி ஆகிய 4 பேரும் சேர்ந்து அளவு கற்கைகளை அகற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் ஜமுனாவை ஆபாசமாக திட்டியுள்ளனர்.
இதனையடுத்து ஜமுனா வேப்பங்குப்பம் போலீஸ்சில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்குமார், மகிமைதாஸ், ஜெயந்தி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புளியங்குடி அருகே உள்ள பாறைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் காளியப்பன்(வயது 70). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
- இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடத்தை சமீபத்தில் அதே ஊரை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவருக்கு பத்திரம் கிரயம் முடித்து கொடுத்துள்ளார். இதற்கு காளியப்பனின் வாரிசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள பாறைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் காளியப்பன்(வயது 70). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடத்தை சமீபத்தில் அதே ஊரை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவருக்கு பத்திரம் கிரயம் முடித்து கொடுத்துள்ளார். இதற்கு காளியப்பனின் வாரிசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் தனது தந்தையின் இடத்தை தங்களுக்கு தெரியாமல் எழுதி வாங்கி கொண்டதாக கூறி ஊர்க்காவல் படைவீரரிடமும் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனவேதனையில் காணப்பட்ட காளியப்பன் கடந்த 19-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நில பிரச்சினை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.
- இரு தரப்பினரும் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அருகே பல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரது குடும்பத்திற்கும் நில பிரச்சினை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இரு தரப்பினரும் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் ஏழுமலை மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மனைவி வசந்தா, மூர்த்தி, மணி இவரது மனைவி சுகன்யா ஆகியோர் மீதும், அண்ணாமலை மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, இவரது மனைவி லதா, மகன்கள் அருண், சரவணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது.
- கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில் துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன்கள் மைக்கேல் மற்றும் ஞானவேல். இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
- சட கோபன் (வயது 40). சடகோபனுக்கும் அவரது அண்ணன் சாமுவேலுக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோ தம் இருந்து வந்தது
- சாமு வேல், சடகோபனை வழி மறித்து திட்டி தடியால் தலை யில் அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்தார்.,
கடலூர்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தக்கா கிரா மத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேல். இவரது மகன் சட கோபன் (வயது 40). இவர் சென்னை தனியார் கல்லூரியில் பணிபுரிந்துவருகிறார். சடகோபனுக்கும் அவரது அண்ணன் சாமுவேலுக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோ தம் இருந்து வந்தது.
இந்நிலையில் சடகோ பன் தனது நிலத்தை உழுவதற்காக வழி கேட்டு தாயிடம் சென்றுள் ளார். அப்போது அண்ணன் சாமு வேல், சடகோபனை வழி மறித்து திட்டி தடியால் தலை யில் அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சடகோபன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சடகோபன் மனைவி வேதநாயகி திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகா ரளித்தார். இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் வழக்குப்பதிவு செய்து சாமுவேலை கைது செய்தனர்.
- ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.
- நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு மேற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 60). அதே பகுதியைச் சேர்ந்த இவரது தம்பி பாதர்.
முருகேசன் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். முருகேசனுக்கும் அவரது தம்பி பாதருக்கும் இடையே கடந்த 5 ஆண்டாக நிலம் பிரிப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை விவசாயி பாதரின் வீட்டின் அருகே முருகேசன் நின்று கொண்டிருந்தார். அப்போது பாதரின் மகன் தினேஷ் குமார் (31), பெரியப்பா முருகேசனிடம், நிலத்தை எப்போது பிரித்துக் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், அங்கிருந்த கட்டையால் முருகேசனை பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சரிந்து விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1 மணி அளவில் முருகேசன் இறந்தார்.
இதுபற்றி ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.
நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருநாவலூர் அருகே நிலத்தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
- ஏன் அதிகமாக வரப்பைக் கழிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கங்கை அம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 36). விவசாயி. இவருக்கும் இவருடைய சகோதரர் அன்னப்பன் (40), இருவருக்கும் சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ராஜாராமன் அவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு வரப்பை மண்வெட்டியால் கழித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அன்னப்பன் ஏன் அதிகமாக வரப்பைக் கழிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு அண்ணப்பன் கையில் வைத்திருந்த ஸ்பிரேயர் மிஷின் பைப்பால் ராஜாராமன் கழுத்தில் அடித்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கிருந்து பொதுமக்கள் உதவியுடன் உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராஜாராமன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்னப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோக த்தையும் ஏற்படுத்தியது. மேலும், அங்கு பதட்டம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இரு தரப்பினரும் ஆயுதங்களால் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.
- துப்பாக்கிச்சூட்டில் லேசான காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் நிலப்பிரச்சனை தொடர்பாக தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் குடும்பத்தினருக்கு இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஆயுதங்களால் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.
மோதலில் கஜேந்திர சிங் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் மற்றொரு தரப்பு சுட்டுக்கொன்றது. துப்பாக்கிச்சூட்டில் லேசான காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலத்தகராறு மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான பதற வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
- நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்.
ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் டெல் ஃபேக்டரி பகுதியைச் சேர்ந்த காஸ்கிரஸின் பரான் நகரப் பிரிவுத் தலைவர் கவுரவ் சர்மா (43) தலவாரா சாலையில் வீட்டு மனை காண சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ராஜூ என்கிற ராஜேந்திர மீனா என்பவர் கவுரவ் சர்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.
இருவருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை சண்டையாக மாறியது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கவுரவ் சுருண்டு விழுந்தார்.
பின்னர், கவுரவை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
- Arrested for assaulting mother-brother over land dispute near ரிஷிவந்தியம் கைது செய்யப்பட்டார்.
- வீரம்மாள் முனியனின் பங்கை அவாிடம் கொடுத்து விடு, என்று கூறியுள்ளார்
கள்ளக்குறிச்சி:
ரிஷிவந்தியம் அருகே வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வீரம்மாள் (வயது50). இவர் தனக்கு சொந்தமான விளை நிலத்தை தனது மகன்கள் ஏழுமலை(30), முனியன்(28) ஆகியோருக்கு சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் மொத்த நிலத்திலும் ஏழுமலை விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீரம்மாள், ஏழுமலையிடம் உன்னுடைய பங்கில் மட்டும் விவசாயம் செய்ய வேண்டும், முனியனின் பங்கை அவாிடம் கொடுத்து விடு, என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி கிரிஜா ஆகியோர் வீரம்மாளை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தடுத்த முனியனையும் அவர் தாக்கியதாக தொிகிறது. இதுகுறித்து வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, கிரிஜா ஆகிய 2 பேர் மீது ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.