search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puliangudi"

    • புளியங்குடி நகராட்சி சார்பில்அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • புளியங்குடி காந்தி மார்க்கெட்டில் கடைகள் கட்டும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது,

    புளியங்குடி:

    புளியங்குடியில் சாலை மற்றும் வாறுகால் கட்ட நிதியுதவி வழங்க வலியுறுத்தி அமைச்சர் நேருவிடம் நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் கோரிக்கை மனு அளித்தார். இதுபற்றி நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் கூறுகையில், புளியங்குடி நகராட்சி சார்பில் நகர்புற சாலைகள் அபிவிருத்தி திட்டம், நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், தூய்மை இந்தியா திட்டம் போன்ற திட்டங்கள் மூலமாக அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு பொது கழிப்பிடங்கள் சீரமைக்கப்படுகிறது.

    மேலும் புளியங்குடி காந்தி மார்க்கெட்டில் கடைகள் கட்டும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது, தற்போது வாறுகால் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா ஆலோசனையின் பேரில் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து புளியங்குடி நகராட்சிக்கு நிதியுதவி வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். அமைச்சரும் உடனடியாக நிதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்று கூறினார்.

    • பூஜையை முன்னிட்டு மாலை 5 மணிக்கு குருநாதர் சக்தியம்மா வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.
    • தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மாக்களுக்கு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    புளியங்குடி அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரிய பாளை யத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், பால நாகம்மன் ஆகிய தெய்வங்க ளுக்கு வைகாசி மாதாந்திர பவுர்ணமி பூஜை நடை பெற்றது.

    பூஜையை முன்னிட்டு மாலை 5 மணிக்கு குருநாதர் சக்தியம்மா வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். மாலை 6 மணி அளவில் பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம் மற்றும் நறுமணப் பொருள்கள் உட்பட 21 வகையான அபிஷேகங்களும், உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

    கோவில் வளாகத்தில் உள்ள பரிகார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், 18-ம் படி கருப்பசாமி, பவானி பத்ரகாளியம்மன், மகாகாளியம்மன், புற்று காளி, நாகக்காளி ரத்தக்காளி, சூலக்காளி ஆகிய தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மாக்களுக்கு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், நெய் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நாக கன்னியம்மன், பெரிய பாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 4-ம் திருநாளனா நேற்று கும்மியடி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு முளைப்பாரி பாடல்கள் பாடி கும்மி அடித்தார்கள். முன்னதாக மாலையில் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், நெய் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடந்தது. திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக 3-ம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • புளியங்குடியில் சிந்தாமணி ராஜகோபால் யாதவ் அறக்கட்டளை மற்றும் தெலுங்கு யாதவ சமுதாயம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது
    • முகாமில் ஓய்வு பெற்ற மருத்துவ பேராசிரியர் மதுரை சோமசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

    புளியங்குடி:

    புளியங்குடியில் சிந்தாமணி ராஜகோபால் யாதவ் அறக்கட்டளை மற்றும் தெலுங்கு யாதவ சமுதாயம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஓய்வு பெற்ற மருத்துவ பேராசிரியர் மதுரை சோமசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

    முகாமில் அறக்கட்டளை செயலாளர் துரைராஜ், சுப்பையா, சித்துராஜ், தலைமையாசிரியர் சேதுராமலிங்கம், ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் மனோகரன், தெலுங்கு யாதவ சமுதாய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கங்காதரன், கோபாலகிருஷ்ணன், ராஜா மற்றும் நர்ஸ் பிரான்ஸி சாமிராஜ், பரிசோதகர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • காந்தி நினைவு தினசரி அங்காடி வளாகம் நகரின் மையப்பகுதியில் சுமார் 28 செண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது.
    • புளியங்குடி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    புளியங்குடி:

    நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புளியங்குடி நகராட்சிக்கு சொந்தமான காந்தி நினைவு தினசரி அங்காடி வளாகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை யான கட்டிட வளாகம் ஆகும். மேற் குறிப்பிட்ட காந்தி நினைவு தினசரி அங்காடி வளாகம் நகரின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் சுமார் 28 செண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது.

    காந்தி நினைவு தினசரி வியாபாரிகளின் கோரிக்கைப்படி அப்பகுதியில் வைத்திருந்த வியாபாரிகளின் வாழ்வா தாரம். கருதி மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்படி இடத்தில் புதிய காந்தி வணிக வளாகம் தரைதளம் மற்றும் முதல் தளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும், தென்காசி மாவட்ட கலெக்டர் கடிதத்தின் படி புளியங்குடி நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு வடக்கு ரதவீதியில் வருவாய் துறைக்கு சொந்தமான வார்டு-ஈ பிளாக்-2. டி 5.நம்.1/7- ல் 30 செண்ட் நிலமும், சுகாதார நிலையம் கட்டுவதற்கு 20 செண்ட் நிலமும் ஒதுக்கீடு செய்து அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புளியங்குடி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு உத்தேச தொகை ரூ.10 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தருமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த சந்திப்பின் போது சதன் திருமலை குமார் எம்.எல்.ஏ. மற்றும் புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சவுந்தரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகன்னியம்மன், பால நாகம்மன், ஆகிய தெய்வங்களுக்கு தை பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • கோவில் முன்பு தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி செங்கரும்பு, காய்கறிகள், பழங்கள், பனங்கிழங்கு படையல் வைத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகன்னியம்மன், பால நாகம்மன், ஆகிய தெய்வங்களுக்கு தை பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மாக்களுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம், சவ்வாது மற்றும் 21 வகையான நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பெரிய தீபாரதனை காண்பிக்கப்பட்டது. கோவில் முன்பு தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி செங்கரும்பு, காய்கறிகள், பழங்கள், பனங்கிழங்கு படையல் வைத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை பற்றி கோவில் குருநாதர் சக்தியம்மா பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கப்பட்டது. மதியம் அறுவை அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜையை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவி பவானி அம்மன் கோவில் அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்றது.
    • புத்தாண்டு சிறப்புகள் குறித்து பக்தர்களுக்கு குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவி பவானி அம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர், நறுமண பொருட்கள் உள்பட 18 வகை அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புத்தாண்டு சிறப்புகள் குறித்து பக்தர்களுக்கு குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து சிறப்பு அருள் வாக்கு மற்றும் மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • குருவையா , சின்னமாரியப்பன் ஆகியோர் மைதுகனியை வெட்டிக்கொலை செய்தனர்.
    • மைதுகனி தனது தோட்டத்தில் காவலுக்காக நாய்களை வளர்த்து வந்தார்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி அம்பேத்கர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மைதுகனி ( வயது 46). இவருக்கு திருமணமாகி ராமலெட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    விவசாயி கொலை

    மைதுகனி அப்பகுதியில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் மைது கனி தோட்டத்தில் காவலுக்கு தங்கியிருந்தார்.

    அப்போது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த குருவையா ( 45), அவரது தம்பி சின்னமாரியப்பன் (40) ஆகியோர் மைதுகனியை வெட்டிக்கொலை செய்தனர்.

    சகோதரர்கள் கைது

    இது தொடர்பாக புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளான குருவையா, சின்ன மாரியப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூறியதாவது:-

    மைதுகனி தனது தோட்டத்தில் காவலுக்காக நாய்களை வளர்த்து வந்தார். அந்த நாய்கள் எங்கள் தோட்டத்திற்குள் அடிக்கடி புகுந்து நாங்கள் வளர்த்து வரும் கோழி, மாடுகளை கடித்து வந்தது. இதுகுறித்து நாங்கள் அவரிடம் தட்டி கேட்டோம்.

    இதேபோன்று அவரிடம் தட்டிகேட்டபோது அவர் எங்களை தாங்கினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்தோம். எனினும் அவர் தொடர்ந்து எங்களுக்கு இடையூறு செய்து வந்தார். இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று காவல் பணியில் ஈடுபட்டிருந்த மைதுகனியை நாங்கள் வெட்டிக்கொன்றோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புளியங்குடி அருகே உள்ள பாறைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் காளியப்பன்(வயது 70). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
    • இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடத்தை சமீபத்தில் அதே ஊரை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவருக்கு பத்திரம் கிரயம் முடித்து கொடுத்துள்ளார். இதற்கு காளியப்பனின் வாரிசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள பாறைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் காளியப்பன்(வயது 70). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

    இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடத்தை சமீபத்தில் அதே ஊரை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவருக்கு பத்திரம் கிரயம் முடித்து கொடுத்துள்ளார். இதற்கு காளியப்பனின் வாரிசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    மேலும் தனது தந்தையின் இடத்தை தங்களுக்கு தெரியாமல் எழுதி வாங்கி கொண்டதாக கூறி ஊர்க்காவல் படைவீரரிடமும் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனவேதனையில் காணப்பட்ட காளியப்பன் கடந்த 19-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டை முன்னேற்ற உதவும் சிறந்த பாதை கல்வி என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • பா.ஜனதா வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத் தலைவர் விஸ்வை ஆனந்தன் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

    புளியங்குடி:

    புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டை முன்னேற்ற உதவும் சிறந்த பாதை கல்வி என்ற தலைப்பில் பா.ஜனதா வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத் தலைவர் விஸ்வை ஆனந்தன் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது மாணவிகள் கல்வியில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும், செய்திகளை உள்ளார்ந்து உற்று நோக்கும் திறனை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எழுத்து பயிற்சியையும், ஏன் எப்படி என்ற சிந்தனை அனைத்திலும் புதுமையான முயற்சிகளை கையாள தெரிந்திருக்க வேண்டும். மேலும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இடையே அடிப்படை எண் மற்றும் எழுத்து அறிவை மேம்படுத்த மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மழலைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பொறுப்பு பாலாம்பிகா மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்

    • தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு வருகை தந்தார் .
    • நிகழ்ச்சி முடிந்த பின் புளியங்குடிக்கு வருகை தந்த முதல்- அமைச்சருக்கு புளியங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் மேள தாளங்கள் முழங்க நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு வருகை தந்தார் . நிகழ்ச்சி முடிந்த பின் புளியங்குடிக்கு வருகை தந்த முதல்- அமைச்சருக்கு புளியங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் மேள தாளங்கள் முழங்க நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து முதல்-அமைச்சரை வரவேற்றனர். நகராட்சி சேர்மன் முதல்-அமைச்சருக்கு மலர் கொத்து வழங்கி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, முன்னாள் நகர பொறுப்பாளர் ராஜ்காந்த், நகர் மன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ரெஜிகலா, பீர்பாத் சாகுல்ஹமீது , சித்ரா செல்வக்குமார், செந்தாமரை, மைதீன் அப்துல்காதர், சங்கர நாராயணன், முகமது நைனார், சேக் காதர்மைதீன், நைனார், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பிச்சையா, குகன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நகர் முழுவதும் சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் நின்று முதல்-அமைச்சரை வரவேற்றனர்.றனர்.

    • முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக தமிழக அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் நிகழ்ச்சி டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    புளியங்குடி:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நலதிட்ட உதவிகள் வழங்கவும் மற்றும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக தென்காசி மாவட்டதிற்கு நாளை வருகிறார்.

    துண்டுபிரசுரம்

    இந்நிலையில் முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக தமிழக அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் நிகழ்ச்சி டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் கமீது வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    பிரசார வாகனம்

    மேலும் முதல்-அமைச்சரின் வருகையை தெரிவிக்கும் வகையில் பிரசார வாகனத்தையும் தொடங்கி வைத்தார். நிகழ்சியில் நகர தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.




    ×