என் மலர்

  நீங்கள் தேடியது "special pooja"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கைபத்மாவதி தாயார் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
  • பெண்கள் கலந்து கொண்ட கோலாட்டம் பக்தி பாடல்கள் பஜனை நடைபெற்றது.

  கோவில்பட்டி:

  கோவில்பட்டி வணிகவைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட தனுஷ்கோடியாபுரம் தெருவில் அமைந்து உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கைபத்மாவதி தாயார் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

  அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாலையில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் முன்பு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கை பத்மாவதி தாயார்அலங்கரிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட கோலாட்டம் பக்தி பாடல்கள் பஜனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், மாரிக்கண்ணன், செல்வம், தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
  • ஆவணி மாத சஷ்டியையொட்டி நடந்தது

  புதுக்கோட்டை

  புதுக்கோட்டை மேல ராஜ வீதியிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆவணிமாத சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி தண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் பாலாபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும், விநாயகர் வெள்ளிக்கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி அவர் பூரண நலம் பெற வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடை பெற்றது.
  • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக தட்டை பெற்றுக் கொண்டார்.

  அந்தியூர்:

  தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளை யொட்டி அவர் பூரண நலம் பெற வேண்டி அந்தியூர் ஒன்றிய செயலாளர் ஈ.சுதாகர் தலைமையில் பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடை பெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக தட்டை பெற்றுக் கொண்டார்.

  முன்னதாக நகரப் பொரு ளாளர் விஜயகுமார் அனை வரையும் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடிப்பூரத்தை முன்னிட்டு குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி 108திருவிளக்கு பூஜை நடந்தது.
  • சிவல் விளை புதூர் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும் பக்தர்களுக்கு வளையல் பிரசாதம் வழங்கினர்

  உடன்குடி:

  உடன்குடி அருகே காரங்காடு சிவசந்தடி–யம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழாவையொட்டி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வளைகாப்பு பொருட்கள் பக்தர்களால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தொடர்ந்து கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.

  மேலும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி 108திருவிளக்கு பூஜை நடந்தது.திருமணமான பெண்களுக்கு பெண்மணி ஒருவர் வளைகாப்பு விழா நடத்துவதாக பாவித்து பெண்களுக்கு குங்குமம், மஞ்சலிட்டு, வளையல்கள் அணிவித்து வளைகாப்பு விழா நடந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான திருமணமான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில்நிர்வாகத்தினர் செய்திருந்தனர். உடன்குடிசந்தையடியூர் முத்தாரம்மன் கோவில், பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில், கொட்டங்காடு பத்ரகாளி அம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில்அம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டுசிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கினர்.உடன்குடி வடக்கு காலன் குடியிருப்பு, சிவல் விளை புதூர் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும் பக்தர்களுக்கு வளையல் பிரசாதம் வழங்கினர்.உடன்குடி அருகே பிறை குடியிருப்பு தேவி முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவிலிகளில் வழிபாடுகள் செய்தவற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
  • ஆடி 18 அன்று குலத்தெய்வ வழிபாடு செய்வது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

   திருப்பூர் :

  ஆடிப்பெருக்கையொட்டி திருப்பூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். திருப்பூர், ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், வாலிபளையம் மகாகாளியம்மன் கோவில், முருகன் கோவில்வில்களில் காலை முதலே மக்கள் வந்து தனிசனம் செய்தனர். கோவிலிகளில் வழிபாடுகள் செய்தவற்கு ஏதுவாக ஏற்பாடு்கள் செய்யப்பட்டு இருந்தன.

  தாராபுரம் பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி 18 அன்று குலத்தெய்வ வழிபாடு செய்வது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆடிபெருக்கான இன்று தாராபுரம் அமாரவதி ஆற்றங்கரை ஈஸ்வரன் கோவில் அருகே காலை 6 மணி முதல் புத்தாடை அணிந்து வந்த பெண்கள், குழந்தைகள் பலகாரங்கள், பழங்கள், பூக்கள் வைத்து வழிப்பாடு செய்து மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். அதே போன்று பல்வேறு சமூக மக்கள் ஆற்றுக்கு வந்து குடம் மற்றும் கரகத்தில் ஆற்றின் புனித நீரை எடுத்து குடத்தில் பூக்கள் அலங்காரம் செய்து தங்களது குலந்தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு எடுத்து சென்றனர். அவினாசிலிங்கேசுவரர்கோவிலில் சுவாமிக்கு சிறப்பஅபிஷேக அலஙகார ஆராதனை நடந்தது. அதிகாலை 5 மணி முதல் அவினாசி, பழங்கரை, சேவூர், கருவலூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பெண்கள் உள்ளிட்ட திரளான பக்கர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் அனைவருககும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் அவினாசி ஆகாசராயர் கோவில், பெருமாள் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், சேவூர் வாலிசுவரர் கோவில், நடுவச்சேரி சிவா புரி அம்மன் கோவில், நல்லி கவுண்டம்பாளையம் கருப்பராயன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

  உடுமலை திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காலையிலேயே திரண்டு வந்தனர். சுவாமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்ன. பஞ்சலிங்க அருவியில் புனித நீராடி அரச்சனை செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இதே மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விசாலாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
  • விசாலாட்சி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார்

  அரியலூர்:

  அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விஸ்வநாதர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விசாலாட்சி அம்மன் அகிலாண்டேஸ்வரி கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, வளையல், மாலை அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விசாலாட்சி அம்மன் ராஜ வீதிகளில் ஆடிப்பூரத்து அம்மனாக எழுந்தருளி வீதி உலா வந்தார். விடையாற்றி உற்சவத்துக்கு பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கூடலூர் 2-ம் மைல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
  • பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  ஊட்டி:

  ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில் இன்று 2-வது ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். மங்கல பொருட்கள் முன்னதாக கூழ் ஊற்றப்பட்டது. மேலும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இரவு 8 மணி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

  இது தவிர கூடலூர் 2-ம் மைல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோன்று ஊட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு காலை முதல் மாலை வரை ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கற்பூரம் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

  சிறப்பு பூஜை அரசு ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓம்சக்தி பத்ர காளியம்மன் கோவில், அக்ரஹாரம் பகுதியில் உள்ள துளிர் காத்த அம்மன் கோவில், காந்தல் மூவுலகரசியம்மன் கோவில், கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
  • ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.

  திருப்பூர் :

  ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.பெண்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ ஆகியவற்றை, பக்தர்களுக்கு வழங்கினர். கோவில் வளாகத்தில் அன்னதானமும், கேழ்வரகு கூழ் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

  கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி கேழ்வரகு கூழ் வழங்கினர்.பூம்புகார்நகர் முத்துமாரியம்மன் கோவில், கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவில் உட்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

  அனைத்து அம்மன் கோவில்களும் வேப்பிலை தோரணம், வாழை கம்பங்கள், பூமாலை அலங்காரத்துடன், விழாக்கோலம் பூண்டிருந்தன. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள முனீஸ்வரன் மற்றும் அண்ணமார் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அபிேஷகம் மற்றும் அபிேஷக பூஜையும் நடந்தது. பல்லடம், ஸ்ரீ பொங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இது போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், வழிபாடுகள் நடந்தன.

  திருப்பூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் குழந்தை வேடத்தில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில் புற்றுக்கண் நாகம்மாள் வேடத்தில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
  • விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

  கோவில்பட்டி:

  கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் ஆடி செவ்வாய் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது.

  சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.

  இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு, முககவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாரயணன், பிரேமா முருகன், சீதா எட்டப்பன் ஆகியோர் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
  • பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

  பெரம்பலூர்:

  ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். ஆடி மாத பிறப்பையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு மதியம் உச்சிக்கால பூஜை நடைபெற்றது. இதில் பெரம்பலூர் துறைமங்கலம் நியூ காலனியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை மாவட்டத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டமாக கடற்கரையில் திரண்டனர்.
  • குறுக்குத்துறை முருகன்கோவில், சாலை குமாரசுவாமி கோவில், பாளை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பட ஏராளமான கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிசேகங்கள் நடைபெற்றன.

  நெல்லை:

  வைகாசி விசாக திருநாளையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

  இதனையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை மாவட்டத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டமாக கடற்கரையில் திரண்டனர்.

  தொடர்ந்து அங்கு தங்களது நேமிதங்களை நிறைவேற்றும் விதமாக கடலில் இருந்து மண் சுமந்து கோவிலுக்கு சென்றனர். இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் குளித்து மகிழ்ந்தனர்.

  இதேபோல் மாநகர பகுதியில் உள்ள குறுக்குத்துறை முருகன்கோவில், சந்திப்பு சாலை குமாரசுவாமி கோவில், பாளை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பட ஏராளமான கோவில்களில் சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிசேகங்கள் நடைபெற்றன.

  கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் காலையில் மலை மீதுள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்து கொண்டு வந்து அடிவாரத்தில் உள்ள உற்சவர் சிலைக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

  தோரணமலை முருகன் பக்தர்கள் குழுவின் சார்பில் பஜனை வழிபாடு நடைபெற்றது. விழாவில் பக்தர்களுக்கு காலை முதல் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

  ஏற்பாடுகளை தோரண மலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

  இதேபோல் தென்காசி, சிவகிரி, சங்கரன்கோவில், ஆலங்குளம் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo