search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhoomadevi temple"

    • கோவில்பட்டி அருகே அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அய்யா வைகுண்ட அவதார விழா நடைபெற்றது.
    • அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அய்யா வைகுண்ட அவதார விழா நடைபெற்றது

    அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 7.36 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அய்யா வைகுண்டருக்கு சிறப்பு பணிவிடை செய்யப்பட்டு போதனைகள் லட்சுமணன் பணிவிடையாளர் தலைமை யில் ஆலய பணிவிடையாளர் செல்வ சுப்பிரமணியன் செய்தார்.

    இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், மகாராஜா, ஆறுமுகம், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.

    • கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • இரவு 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு 18 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாயரச்சை பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு 18 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு படையல் வைத்து சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி, தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், மாரியப்பன் செய்தார்கள். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி மகாராஜா, மாரிஸ் வரன், கதிர்காம சுப்பிரமணியன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, சங்கரி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தார்கள்.

    • கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் தை முதல் செவ்வாய் காட்சி திருவிழா நடைபெற்றது.
    • பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகியோர் செய்தார்கள்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் தை முதல் செவ்வாய் காட்சி திருவிழா நடைபெற்றது.

    அதை தொடர்ந்து காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், கும்பபூஜை, அம்பாள் மூலமந்திர ஜெபம் ஹோமம் நடைபெற்றது. 8 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 9.30 மணிக்கு மூன்று திருவிளக்கு வைத்து புஷ்பாஞ்சலியும், சோடனை தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு செண்பகவல்லி அம்பாள் ஆலயத்தில் இருந்து பால்குடம் கற்புரஜோதியுடன் குருநாதர் அம்மா பூமாதேவி திருவீதி உலாவும், இரவு 10 மணிக்கு அன்னதான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகியோர் செய்தார்கள். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், இசக்கிமுத்து, மீனாட்சி, மாரித்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய காட்சி குழுவினர் செய்தார்கள்.

    ×