search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "awareness meeting"

    • சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
    • சேலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

    சேலம்:

    சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சேலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் கலெக்டர் பேசியதாவது:-

    சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த விழிப்புணர்வினை உள்ளூர் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், தொழிலார்வம் கொண்ட இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

    சேலம் மாவட்டம் தொழில் நிறுவனங்கள் தொடங்கத் தேவையான ஒப்புதல்கள், தடையின்மைச்சான்றுகள், புதுப்பித்தல் போன்றவற்றை எளிதாகப் பெற ஒரு ஒற்றைச் சாளர தீர்வுக்கான இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பி டப்பட்ட கால வரம்புக்குள் பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

    இதனைக் கண்காணிக்க மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது. தொழில்முனைவோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக உள்ளது. எனவே, தொழில்முனைவோர் சேலம் மாவட்டத்தில் மென்மேலும் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் 4,334 இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 124 தொழில் முனைவோர்கள் ரூ.1,638.91 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் சிவகுமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், இந்திய தொழில் கூட்டமைப்பு (மாநில எம்.எஸ்.எம்.இ கொள்கை) சுதாகர், மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க பொதுச் செயலாளர் செந்தில்முருகன், உற்பத்தி திறன் குழுத் தலைவர் இளங்கோவன், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் நாகராஜன் மற்றும் தொழில் வணிக சங்கப் பிரதிநிதிகள், தொழில திபர்கள், தொழிலார்வம் கொண்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல்லில் மளிகை மற்றும் பலசரக்கு கடை வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் மளிகை மற்றும் பலசரக்கு கடை வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசுகையில், தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் போன்றவற்றை வணிகர்கள் விற்பனை செய்ய கூடாது. இதை மீறி விற்பனை செய்வோர் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது மிக அவசியம். மேலும் வணிகர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என வணிகர்கள் உறுதியேற்க வேண்டும். அவ்வாறு விற்பனை செய்வோர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

    இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் நாமக்கல் நகர மளிகை வர்த்தகர் சங்க தலைவர் பத்ரி நாராயணன், துணை தலைவர் ஜிக்கி ஜெகதீசன், பேரமைப்பு மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான மளிகைக் கடை உரிமை யாளர்கள் கலந்துகொண்டனர்.

    • கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், நபார்டு வங்கி ,கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் திருச்சி ராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை யும் இணைந்து இக்கூட்டத்தை நடத்தின.
    • கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், நபார்டு வங்கி ,கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் திருச்சி ராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை யும் இணைந்து இக்கூட்டத்தை நடத்தின.

    கரூர்

    கரூர் மாவட்டத்தில் கரூர் வட்டாரத்தில் உள்ள ஆர்.1561 தாந்தோணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில், கோடங்கிபட்டியில் சங்க உறுப்பினர்களுக்கு உறுப்பினர் கல்வி திட்ட கூட்டமும், நிதி சார் மேலாண்மை மற்றும் விழிப்பு ணர்வு கூட்டமும் நடைபெற்றது. கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், நபார்டு வங்கி ,கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் திருச்சி ராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை யும் இணைந்து இக்கூட்டத்தை நடத்தின.

    கரூர் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் வசந்தகுமார் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவதுf:-

    சங்க உறுப்பினர்கள் எத்தனை வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளோம் என்பது முக்கிய மில்லை. ஒரு வங்கி அல்லது ஒரு சங்கத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் போதுமானது. அந்த கணக்கை தொடர்ந்து பயன்படுத்தி வரவேண்டும். குடும்பத்தில் 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் யாராக இருந்தாலும் மேல்படிப்பு படிப்பதற்கு கல்வி கடன் பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    கரூர் மாவட்ட நபார்டு வங்கியின் கோட்ட மேலாளர்மோகன் கார்த்திக் பேசும்போது:-

    சங்கத்தில் உறுப்பினர்க ளுக்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகிறது, ஒரு வங்கியிலோ அல்லது ஒரு சங்கத்திலோ கடன் பெற்ற பிறகு வேறு ஊரிலோ, பக்கத்தில் உள்ள வங்கியிலோ, முன்னர் பெற்ற கடனை கட்டி முடிக்காமல் புதிய கடன்கள் பெற முடியாது. பயிர்க்கடன்,சுய உதவிக்குழு கடன் எதுவானாலும் முழு வதும் திருப்பி செலுத்தி விட்டு புதிய கடன்கள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கரூர் வட்டார கள மேலாளர் கதிர்வேல் அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கரூர் சரக மேற்பார்வையாளர் ரமேஷ் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து மகளிர் சுயஉதவி குழு ஆரம்பித்து சங்கத்தி ல் கடன்பெற்று தங்களுடைய வாழ்வாதா ரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    சங்க செயலாள வளர் மதி, கரூர் மாவட்ட கூட்டு றவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திருப்பதி, சங்க பணியாளர் குணசேகரன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விளக்கம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா நகராட்சி அலுவ லக கூட்ட அரங்கில் குழந்தை கள் பாதுகாப்பு அலகு சார் பில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.

    நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை தலைமை தாங்கினார். கூட்டத்தில் குழந் தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குழந்தை திரும ணம், குழந்தை கடத்தல், குழந் தைகள் மீதான வன்முறை, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் குழந்தைகளுக்கு உதவிட சைல்டு லைன் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கவும், இது போன்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கூட்டங்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் நிரோஷா, நக ராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்கரசன், குழந்தை வளர்ச்சிதிட்ட அலு வலர் அம்ச பிரியா, சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப் பாளர் சதீஷ்குமார், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்ட மேலாளர் நாகப்பன் பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குற்றச்செயல்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
    • அச்சம் போக்க இரவு நேர ரோந்து பணி தீவிரம்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட திருப்பாற்கடல் மற்றும் அத்திபட்டு கிராமங்களில் நேற்று காவேரிப்பாக்கம் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு குற்றசம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார்.

    கடந்த 2 நாட்களாக திருப்பாற்கடல் மற்றும் அத்திபட்டு ஆகிய கிராமங்களில் முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக வதந்திகள் பரவி வருகிறது.

    முகமூடி கொள்ளையர்கள் பற்றிய வீண் வதந்தியை நம்பவேண்டாம் மேலும் அதுபோன்ற சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. குற்ற செயல்களை போலீசாரால் மட்டுமே தடுத்து விட முடியாது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். இருப்பினும் பொதுமக்களின் அச்சம் போக்க இரவு நேர ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடிப்பதற்கு வசதியாக தெருக்கள் மற்றும் வீடுகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க முன் வர வேண்டும்.

    மேலும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    • அசம்பாவித சம்பவங்கள் இனிவரும் நாட்களில் நடைபெறாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஆனங்கூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் இனிவரும் நாட்களில் நடைபெறாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஆனங்கூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.

    போலீஸ் சூப்பிரண்டு

    கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆனங்கூர் ஊராட்சித் தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலர் சந்திரன், ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர்.

    முற்றுப்புள்ளி

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பேசியதாவது:-

    ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று வரும் வன்முறை, அசம்பாவித சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆங்காங்கே வாழை மரங்களை வெட்டுதல், டிராக்டர்களுக்கு தீ வைத்தல், பாக்கு மரங்களை வெட்டுதல் போன்றவை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜ், கிராம நிர்வாக அலுவலர், ஆனங்கூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கொத்தமங்கலம், வடகரையாத்தூர், அ.குன்னத்தூர், பிலிக்கல்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    • பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் 400 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    மதுரை

    திருமங்கலம் ஆலம் பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீபாவளி பண்டிகையை பாது காப்பான முறையில் கொண்டாட மாணவ மாண விகளை அறிவுறுத்தும் வகையில் தீயணைப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கல்லூரி தாளாளர் எம். எஸ்.ஷா மற்றும் பொருளாளர் சகிலாஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நடந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பேசினார்.

    திருமங்கலம் தீயணைப்புத்துறை சார்ந்த அலுவலர்கள் கவியரசு மற்றும் வரதராஜன் ஆகியோர் பேசுகையில், பட்டாசுகளை வெடிக்க செய்யும் பொழுது எதிர் பாராமல் ஏற்படக்கூடிய தீ விபத்துக்களை தடுக்கும் வண்ணம் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக அருகில் மணல் மற்றும் தண்ணீர் நிரம்பிய வாளி களை வைத்துக்கொள்ள வேண்டும். நமது உடைக ளையும் பாதுகாப்பான முறையில் அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.

    வீட்டில் தீபாவளி பலகாரங்கள் செய்யும் பொழுது எண்ணெய் சட்டியில் ஏற்படும் தீயை அணைக்க தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. அடுப்பை உடனடியாக அணைத்துவிட்டு எண்ணை சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி வேண்டும் என தெரிவித்தனர்.

    முன்னதாக கல்லூரியின் தமிழ்த்துறை தலைவரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான முனியாண்டி வரவேற்புரை ஆற்றினார். கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் 400 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகா பழனிச்சாமி, பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • கழிவுநீர் குழாய் பராமரிப்பு, பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகா பழனிச்சாமி, பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் குறித்தும்,கழிவுநீர் குழாய் பராமரிப்பு, பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் சமூக மருத்துவத்துறை சார்பில் நடத்தப்பட்டது.
    • முடிவில் அனைவரும் டெங்கு ஒழிப்பு சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் சமூக மருத்துவத்துறை சார்பில் நடத்தப்பட்டது. அதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் டெங்கு விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர்.

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். துணை முதல்வர் சலீம், அனைத்து துறைத் தலைவர்கள், டாக்டர்கள் மற்றும் 300 மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். முடிவில் அனைவரும் டெங்கு ஒழிப்பு சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • பீட்சா, பர்கர் போன்ற துரித உணவை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.
    • அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் அறிவுரை வழங்கினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் நாட்டு நல பணித்திட்டம் மற்றும் திருமங்கலம் வட் டார ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் அனுமதி யின் பேரில் கல்லூரி முதல் வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற் றது.

    இதில் இளம் வயதில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய விட்டால் பிற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை தவிர்த்து சரிவிகித சத்தான உணவை மாணவ, மாணவிகள் உட் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழவேண்டும் என கூறினார்.

    மருத்துவ அலுவலர் ஹரிஷ் ஊட்டச்சத்து சரி விகித உணவு பற்றியும், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காந்திமதி ரத்த சோகை பற்றியும், வட்டார ஒருங்கிணைப்பாளர் பாரதி பெண்களுக்காக அரசு வழங்கும் சுகாதார திட்டங் கள் பற்றியும் எடுத்துரைத் தனர்.

    இறுதியில் ஊட்டச் சத்து பற்றி எழுப்பிய வினாக்க ளுக்கு சரியான விடை அளித்த மாணவ, மாணவிக ளான தமிழ் துறை யைச் சார்ந்த ஹரி சங்கர், துர்க்கா, வணிகவியல் துறையைச் சார்ந்த ஹேமஸ்ரீ, ரூபஸ்ரீ, நாகஜோதி ஆகியோ ருக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி னார். முன்னதாக தமிழ்த்து றைத் தலைவரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரு மான முனைவர் முனி யாண்டி வரவேற்றார்.

    கூட்டத்தில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் ராமுத்தாய், சிங்கராஜா, ராஜேஸ்வரி, இன்பமேரி, ஜோதி, ஆறுமுகஜோதி வர லாற்றுத்துறைத் தலை வர் மணிமேகலை, உதவிப்பேரா சிரியர் இருளாயி, வணிகவி யல் துறை உதவிப்பேராசி ரியர் சிவசுந்தரி, சகாய வாணி, முத்துலெட்சுமி, கதிரேசன் உள்ளிட்ட 20 பேராசிரியர்களும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை நாட்டு நல பணித்திட்ட தொண்டர் கள் செய்தனர். இறுதியில் வணிகவியல் துறைத்தலை வர் தனலெட்சுமி நன்றி கூறினார்.

    • கொள்ளை சம்பவங்கள் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில்போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே முருங்கதொழுவு ஊராட்சி க்கு உட்பட்ட ஒட்டன் கொட்டை கரியாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள்.

    இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்ய ப்பட்டனர். மேலும் இவர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டது தெரிய வந்தது.

    இதையொட்டி பொது மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யிலும் கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் சென்னிமலை அருகே அம்மன் கோவில் புதூரில் உள்ள வாகை த்தொழுவு அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமை தாங்கினார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சர வணன் முன்னிலை வகி த்தார்.

    இந்த கூட்டத்தில் தனியாக தோட்ட பகுதி களில் குடியிருப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள், போலீசார் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • நெசவாளர்களுக்கான முத்ரா கடன் மேளா மற்றும் அரசு நல்வாழ்வு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது.

    விருதுநகர்

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை வட்டார மருத்துவ அலுவலர் கருணாகர பிரபு ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி துணை சேர்மன் செல்வமணி, விருதுநகர் கைத்தறித்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசுதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    முகாமில் நெசவாளர்களுக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த சர்க்கரை அளவ பரிசோதனை, நவீன இசிஜி பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தேவைப்படுவோருக்கு மருந்துகளும் வழங்கப்பட்டன. யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 229 நெசவாளர்கள் பங்கேற்றனர். நெசவாளர்களுக்கான முத்ரா கடன் மேளா மற்றும் அரசு நல்வாழ்வு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது.

    ×