என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்
- திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்தது
- வாகனங்கள் இயக்கும் முறை, பாதுகாப்பான வேகத்தில் செல்வது குறித்து அறிவுரை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காலை பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தி இருந்தார்.
இதனை தொடர்ந்து திருப்பத்தூர் அரசு கலைக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
விழிப்புணர்வு கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர். டாக்டர் விஜயராஜ் தலைமை வகித்தார் மற்றும் கல்லூர் பேராசிரியர்கள்.
மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் வாணியம்பாடி போக்கு வரத்து அலுவலர்.ராமகிருஷ்ணன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முரளி சாலை பாதுகாப்பு குறித்த குறும்படம் மற்றும் விபத்துக்கள் குறித்த புள்ளி விவரங்களை திரையிட்டு மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், சாலையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வாகனங்க ள்இயக்கும் முறை சரியான பாதுகாப்பான வேகத்தில் செல்லுதல், சாலையில் செய்யக்கூடாத தவறுகள், குறித்து எடுத்துரை க்கப்பட்டது.
மாணவர்கள் அவர்கள் எதிர்காலம் கருதி மிகவும் பாதுகாப்பான முறையில் சாலையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.






