search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vivekananda Vidyashram School"

    • நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி பாளையங்கோட்டை புனித இன்னாசியார் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • பாயில் அணி போட்டியில் சந்தோஷ் குமார், சுகுல், அசுகவி முகேந்திரவாசு ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

    நெல்லை:

    நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி பாளையங்கோட்டை புனித இன்னாசியார் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 300-க்கும் மேட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர்.

    இதில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் பாயில் அணி போட்டியில் சஞ்சய், லெஷ்மன் பரணி, தரண், ஸ்ரீ மகா தேவன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

    17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் சேபர் தனிநபர் போட்டியில் கௌது வருசை முகம்மது தங்க பதக்கம் வென்றார். சேபர் அணி போட்டியில் ஸ்ரீ ஹரிஹரன், செல்வ ராகுல், கௌது வருசை முகம்மது, முகமது நதீம் ஆகியோர் தங்க பதக்கம் வென்றனர். பாயில் அணி போட்டியில் சந்தோஷ் குமார், சுகுல், அசுகவி முகேந்திரவாசு ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

    எப்பி அணி போட்டியில் சஞ்சய், இசக்கி சரவண குரு, சிவ சண்முகம் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் எப்பி தனிநபர் போட்டியில் ஆகாஷ் கிருஷ்ணா தங்க பதக்கம் வென்றார். எப்பி அணி போட்டியில் சாம்சன் டேவிட், ஆகாஷ் கிருஷ்ணா, சஞ்சய் குமார், ராஜா சிவசுப்பிர மணியன் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

    14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பாயில் தனிநபர் போட்டியில் கண்மணி, ஹரீஷ்மா வெங்கலப்பதக்கம் வென்றனர். பாயில் அணி போட்டியில் கண்மணி, ஹரீஷ்மா, நித்திய ஸ்ரீ ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

    வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன், தாளாளர் முனைவர் திருமாறன், முதல்வர் முருக வேள், ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார், பூச்சியம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் இன்று விஜயதசமி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    • புதிய மாணவ- மாணவிகளுக்கு அட்சராப்பியாசம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் இன்று விஜயதசமி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பள்ளியில் புதிய மாணவ- மாணவிகளுக்கு அட்சராப்பியாசம் வழங்கப்பட்டது. பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், முதன்மை முதல்வர் ராஜலட்சுமி, முதல்வர் முருகவேள், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி மற்றும் ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. பின்பு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • தேசிய அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டியில் மாணவி ரேஷிகா தங்க பதக்கம் பெற்றார்.
    • ஆசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி சார்பாக ரேஷிகா தேர்வு பெற்றுள்ளார்.

    நெல்லை:

    தேசிய அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றார்.

    இதன் மூலம் அடுத்த மாதம் சீனாவில் 17-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற இருக்கும் ஆசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி சார்பாக தேர்வு பெற்றுள்ளார். இந்திய அணிக்கு தேர்வு பெற்றுள்ள மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர். திருமாறன், முதல்வர் முருகவேள், ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார், பூச்சியம்மாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • நெல்லை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
    • விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார் வெண்கலப் பதக்கமும், மாணவிகள் பிரிவில் 6-ம் வகுப்பு மாணவி வேணுகா ஸ்ரீ வெங்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளனர்.

    நெல்லை:

    சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு பாளை அரசு அருங்காட்சி யகத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டியில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி மஹன்யா, 3-ம் வகுப்பு மாணவன் பிரணவ் கார்த்திகேயன் மற்றும் மஹிந்தேவ் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    நெல்லை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார் வெண்கலப் பதக்கமும், மாணவிகள் பிரிவில் 6-ம் வகுப்பு மாணவி வேணுகா ஸ்ரீ வெங்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளனர். நெல்லை பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் நடத்திய பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டியில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 11-ம் வகுப்பு மாணவி பெமினா ஷர்மி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன், தாளாளர் திருமாறன், முதல்வல் முருகவேல், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முக ராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • தேசிய அளவிலான இறகு பந்தாட்ட போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது
    • நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ரேஷிகா கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

    நெல்லை:

    தேசிய அளவிலான இறகு பந்தாட்ட போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோ வில் நடைபெற்றது. இதில இந்தியா முழுவதும் இருந்து வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

    இதில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ரேஷிகா கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

    மேலும் சென்னையில் நடைபெற்ற தமிழக வாட்டர் போலோ அணிகளுக்கான தகுதி போட்டியில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் கவின் சாய் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

    வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர்.திருமாறன், முதல்வர் முருகவேள், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன் குமார் மாறும் பூச்சியம்மாள் மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சூர்யநமஸ்கார், பிராணயாமா மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.
    • பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சூர்யநமஸ்கார், பிராணயாமா மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன் தலைமை தாங்கினார். தாளாளர் திருமாறன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் முருகவேல் நாம் தினமும் யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி யோகாவின் சிறப்பினை எடுத்துரைத்தார்.

    இதில் உடற்கல்வி இயக்குனர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன் குமார் மற்றும் பூச்சியம்மாள் ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.

    • தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நடத்தும் 17 வயதுக்குட்பட்ேடாருக்கான மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றது.
    • நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் வீனிஷ் மற்றும் மாணவர் விஷால் கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நடத்தும் 17 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் வீனிஷ் மற்றும் மாணவர் விஷால் கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், முதன்மை முதல்வர் ராஜலெட்சுமி, முதல்வர் முருகவேள், உடற்கல்வி இயக்குனர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமார், பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு போதைப் பொருட்கள், செல் போன் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் அதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

    நெல்லை:

    வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    பள்ளி முதல்வர் முருகவேல் வரவேற்று பேசினார். இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி கலந்து கொண்டு குழந்தைகள் கடத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், மாணவிகள் தற்போது உள்ள சூழ்நிலையில் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துக் கூறினார்.

    மேலும் மாணவர்களுக்கு போதைப் பொருட்கள், செல் போன் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் அதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் விளக்கி பேசினார்.

    • நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–யில் குழந்தைகள் தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    • விழாவில் பள்ளியின் தாளாளர் எஸ்.திருமாறன், முதல்வர் எஸ்.முருகவேள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–யில் குழந்தைகள் தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு நெல்லை தொழிலாளர் உதவி ஆய்வாளர் நளினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம், குழந்தைத்தொழிலாளர் முறையினை அகற்றுதல் மற்றும் 1098 குழந்தைகள் ஹெல்ப்லைன் எண் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் பள்ளியின் தாளாளர் எஸ்.திருமாறன், முதல்வர் எஸ்.முருகவேள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


    • தடகள போட்டிகளில் சுமார் 56 பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன் உள்பட பலரும் பாராட்டினர்

    நெல்லை:

    நெல்லை குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சுமார் 56 பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மாணவிகள் பிரிவில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா 5 தங்கம், மாணவி ரம்யாசெல்வி 2 தங்கம், 3 வெள்ளி, மாணவி ரெனிஷாசரின் 4 தங்கம், மாணவி உஷா 1 தங்கம், மாணவி ஷிரேயா பாலா 4 தங்கம் 1 வெள்ளி, மாணவி சுமிதா 1 தங்கம் 1 வெள்ளி, மாணவி பிரியா 1 வெள்ளி பதக்கம் வென்றனர்.

    மாணவர்கள் பிரிவில் மாணவன் சஞ்சீவ் ராம் 2 தங்கம், மாணவன் ஸ்ரீகாந்த் 4 தங்கம், மாணவன் சுடலை 4 தங்கம், மாணவன் தனுஷ் ஜெட்சன் 2 தங்கம் 1 வெள்ளி, மாணவன் சஞ்சய் 1 தங்கம், மாணவன் பார்வதி கிருஷ்ண லோகேஷ் 1 வெள்ளி, மாணவன் கணேஷ் கார்த்திக் 1 தங்கம், மாணவன்முஹம்மது நதீம் 1 வெண்கலம், மொத்தம் 22 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன் பள்ளியின் தாளாளர் முனைவர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல் பள்ளியின் துணை முதல்வர் ஜேக்கப் துரைராஜ், உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர் மோகன் குமார், பாலமுருகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாநில அளவிலான தடகளப் போட்டி கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • பிளஸ்-1 மாணவி அபிநயா 100 மீட்டர் ஓட்ட போட்டியில் 12.38 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார்

    நெல்லை:

    மாநில அளவிலான தடகளப் போட்டி கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவி அபிநயா 100 மீட்டர் ஓட்ட போட்டியில் 12.38 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.

    இவர் 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் நடைபெற இருக்கும் தென் இந்திய அளவிலான தடகள போட்டிக்கு தேர்வாகி உள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் சேர்மன் சிவாசேதுராமன், தாளாளர் முனைவர் திருமாறன், முதல்வர் முருகவேள், துணைமுதல்வர் ஜேக்கப்துரைராஜ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை பிரிவு மாவட்ட நீச்சல் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற நீச்சல் வீரர் நிதிஷ்சையும், நீச்சல் பயிற்சியாளர் கர்ணனையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    நெல்லை:

    பாளை அண்ணா விளையாட்டரங்கில் தமிழகத்தின் சார்பில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இளையோருக்கான அகில இந்திய நீச்சல் போட்டியில், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் நிதிஷ்க்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை பிரிவு மாவட்ட நீச்சல் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு நீச்சல் கழகத்தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். செயலர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற நீச்சல் வீரர் நிதிஷ்சையும், நீச்சல் பயிற்சியாளர் கர்ணனையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


    ×