மாநில டென்னிஸ் போட்டியில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நடத்தும் 17 வயதுக்குட்பட்ேடாருக்கான மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் வீனிஷ் மற்றும் மாணவர் விஷால் கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் திருமாறன் கேடயம் வழங்கிய காட்சி.
மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் திருமாறன் கேடயம் வழங்கிய காட்சி.
Published on

நெல்லை:

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நடத்தும் 17 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் வீனிஷ் மற்றும் மாணவர் விஷால் கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், முதன்மை முதல்வர் ராஜலெட்சுமி, முதல்வர் முருகவேள், உடற்கல்வி இயக்குனர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமார், பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com