மாநில தடகளப் போட்டியில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவி புதிய சாதனை

மாநில அளவிலான தடகளப் போட்டி கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பிளஸ்-1 மாணவி அபிநயா 100 மீட்டர் ஓட்ட போட்டியில் 12.38 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார்
சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் முனைவர் திருமாறன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டியபோது எடுத்தபடம்.
சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் முனைவர் திருமாறன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டியபோது எடுத்தபடம்.
Published on

நெல்லை:

மாநில அளவிலான தடகளப் போட்டி கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவி அபிநயா 100 மீட்டர் ஓட்ட போட்டியில் 12.38 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.

இவர் 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் நடைபெற இருக்கும் தென் இந்திய அளவிலான தடகள போட்டிக்கு தேர்வாகி உள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் சேர்மன் சிவாசேதுராமன், தாளாளர் முனைவர் திருமாறன், முதல்வர் முருகவேள், துணைமுதல்வர் ஜேக்கப்துரைராஜ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com