என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாட்டம்
    X

    யோகாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாட்டம்

    • வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சூர்யநமஸ்கார், பிராணயாமா மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.
    • பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சூர்யநமஸ்கார், பிராணயாமா மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன் தலைமை தாங்கினார். தாளாளர் திருமாறன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் முருகவேல் நாம் தினமும் யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி யோகாவின் சிறப்பினை எடுத்துரைத்தார்.

    இதில் உடற்கல்வி இயக்குனர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன் குமார் மற்றும் பூச்சியம்மாள் ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.

    Next Story
    ×