என் மலர்
நீங்கள் தேடியது "Athletics competition"
- திருப்பூர் மாவட்ட பள்ளிகளை சார்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- மாநில முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப்போட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட பள்ளிகளை சார்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் ப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் சண்முகம்உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசும், 10ம் வகுப்பு மாணவர் ஜோ ஜெப்ரி உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் பரிசும், 10ம் வகுப்பு மாணவி பவித்ர லட்சுமி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம்பரிசும் பெற்று மாநில முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தேசிய அளவிலான தடகள போட்டியில் ப்ரண்ட்லைன்மிலேனியம் பள்ளி மாணவர் ஜோ ஜெப்ரி உயரம் தாண்டுதல்போட்டியில் 1.78மீ தாண்டி தேசிய அளவில் நான்காமிடம் பெற்றார். போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த விளையாட்டுஆசிரியர்கள் நந்தகுமார் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி,இயக்குநர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி சக்திநந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.
- தூத்துக்குடி மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் வேலவன் வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளியில் நடைபெற்றது.
- போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று சுப்பையா வித்யாலயா பள்ளி முதல் இடத்தை பெற்று ஓட்டுமொத்த சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் வேலவன் வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகள் வேலவன் வித்யாலயா அறக்கட்டளை நிறுவனர்கள் தங்கவேல், அன்னபுஷ்பம் மற்றும் பள்ளித் தாளாளர் ஆனந்த் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆண்டனி அதிஷ்டராஜ், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், அன்னை ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பிரபுராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
நீலா சீபுட்ஸ், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, அன்னை ஜூவல்லர்ஸ் இப்போட்டி நடத்துவதற்கு பெரும் பங்களித்தனர். போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று சுப்பையா வித்யாலயா பள்ளி முதல் இடத்தை பெற்று ஓட்டுமொத்த சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றனர்.
தனிப்பட்ட வெற்றியாளருக்கான ஆண்கள் பிரிவில் முதல் பரிசை செயிண்ட் ஆன்ஸ் பள்ளியின் மாக்வின் ராய், 2-ம் பரிசை முறையே செயின்ட் தாமஸ் பள்ளியின் ஜெஸ்வின் பால் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் முதல் பரிசை செயின்ட் ஆன்ஸ் பள்ளியின் மது ரனிகா, 2-ம் பரிசை ஹோலி கிராஸ் பள்ளியின் ரேணுபாலா முறையே பெற்றனர். போட்டிகள் அனைத்தையும் சகிலா ஆனந்த் மேற்பார்வையில், வேலவன் வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள், ஆசரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
- வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
- திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
காங்கயம் :
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகள போட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற காங்கயம் சிவன்மலை ஜேஸீஸ் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் லிங்கேஷ் 14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இம்மாத இறுதியில் திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவனை பள்ளி பொருளாளர் பழனிச்சாமி, மோகனசுந்தரம், சாவித்திரிசுப்ரமணியம், முதல்வர் சுப்ரமணி,பள்ளியின் தாளாளர்,அகடமிக் டைரக்டர்ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.
- தடகள போட்டிகளில் சுமார் 56 பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன் உள்பட பலரும் பாராட்டினர்
நெல்லை:
நெல்லை குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சுமார் 56 பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவிகள் பிரிவில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா 5 தங்கம், மாணவி ரம்யாசெல்வி 2 தங்கம், 3 வெள்ளி, மாணவி ரெனிஷாசரின் 4 தங்கம், மாணவி உஷா 1 தங்கம், மாணவி ஷிரேயா பாலா 4 தங்கம் 1 வெள்ளி, மாணவி சுமிதா 1 தங்கம் 1 வெள்ளி, மாணவி பிரியா 1 வெள்ளி பதக்கம் வென்றனர்.
மாணவர்கள் பிரிவில் மாணவன் சஞ்சீவ் ராம் 2 தங்கம், மாணவன் ஸ்ரீகாந்த் 4 தங்கம், மாணவன் சுடலை 4 தங்கம், மாணவன் தனுஷ் ஜெட்சன் 2 தங்கம் 1 வெள்ளி, மாணவன் சஞ்சய் 1 தங்கம், மாணவன் பார்வதி கிருஷ்ண லோகேஷ் 1 வெள்ளி, மாணவன் கணேஷ் கார்த்திக் 1 தங்கம், மாணவன்முஹம்மது நதீம் 1 வெண்கலம், மொத்தம் 22 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன் பள்ளியின் தாளாளர் முனைவர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல் பள்ளியின் துணை முதல்வர் ஜேக்கப் துரைராஜ், உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர் மோகன் குமார், பாலமுருகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- போட்டியில் சுமார் 500 குழந்தைகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் குழந்தைகளுக்கான தடகள போட்டி நடந்தது.போட்டிகளுக்கு கல்லூரி முதல்வர் கல்யாணி, திருப்பூர் தடகள சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் பங்கேற்றார். இந்த போட்டியில் 27 பள்ளிகள் மற்றும் கிளப்களில் இருந்து சுமார் 500 குழந்தைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு உடுமலை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு கலைக் கல்லூரி உடற்கல்வித்துறை, லயன்ஸ் கிளப் ,தேஜஸ் ரோட்டரி இணைந்து செய்திருந்தனர்.