தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு தட்சணமாற நாடார் சங்கம் பாராட்டு

அபிநயா என்ற மாணவி கோவையில் நடைபெற்ற தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 200 மீட்டர் ஓட்டத்தில் 24.16 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு தட்சணமாற நாடார் சங்கம் பாராட்டு
Published on

நெல்லை:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கல்லூத்து கிராமத்தை சேர்ந்த ஏ.ராஜராஜன் நாடார் மகள் ஆர்.அபிநயா என்ற மாணவி கோவையில் நடைபெற்ற 38-வது தேசிய இளையோருக்கான தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 1,000 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் 200 மீட்டர் ஓட்டத்தில் 2012-ம் ஆண்டு 24.28 வினாடிகளில் கடந்த சாதனையை தற்போது 24.16 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து மாணவி ஆர். அபிநயா நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைமை அலுவலகத்திற்கு சென்று நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார். மாணவியை, சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் டி.ராஜகுமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார், துணை செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார், நிர்வாக சபை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.வைத்திலிங்கம் நாடார், எஸ்.காமராஜ் நாடார், எஸ்.கே.டி.பி. காமராஜ் நாடார், எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர் நாடார், பி.ரகுநாதன் நாடார் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com