நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கான போட்டியில் 156 புள்ளிகள் பெற்று நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தது. தொடர்ந்து வெற்றி பெற்ற துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டன.
வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Published on

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் இ-குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இதற்கு கலை கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் 60 பள்ளிகள் கலந்து கொண்டன. முடிவில் மாணவர்களுக்கான போட்டியில் 156 புள்ளிகள் பெற்று நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தது. பெண்களுக்கான போட்டியில் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.

தொடர்ந்து வெற்றி பெற்ற துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி மாணவர்களை உடற்கல்வி இயக்குநர் சம்சுதீன், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்,சோலைமலை கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.பின்னர் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com