மாவட்ட அளவிலான தடகள போட்டியில் ஸ்ரீ கலைவாணி பள்ளி சாதனை

போட்டியில் ஸ்ரீ கலைவாணி பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக பெற்றனர்.மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம், 2-ம் இடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான தடகள போட்டியில் ஸ்ரீ கலைவாணி பள்ளி சாதனை
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றன. போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 88 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவர்களில் மிக மூத்தோர் பிரிவில் பிரகாஷ் 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.

மாவட்ட அளவிலான இந்த போட்டியில் முதலிடம், 2-ம் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடை பெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வரும், நிர்வாகியுமான பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com