என் மலர்
நீங்கள் தேடியது "student"
- மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
- போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு சென்ற அந்த சிறுமி வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அந்த மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மாணவியை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தது தெரிய வந்தது.
சம்பவத்தன்று வந்த சிறுவன், மாணவியை கடத்தி சென்றுள்ளார். பின்னர் திருச்செந்தூருக்கு சென்று அங்கு கோவிலில் வைத்து மாணவியை வற்புறுத்தி கட்டாய திருமணம் செய்ததும் தெரிய வந்தது.
அதன் பின்னர் தஞ்சாவூருக்கு அந்த மாணவியை அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து 2 பேரும் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று சிறுவனை நெல்லைக்கு அழைத்து வந்தனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
- கடந்த 13-ந் தேதி மாணவனை ஆசிரியை ஒருவர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.
- இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் அழகாபுரம் ரெட்டியூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தென் அழகாபுரத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 13-ந் தேதி இந்த மாணவனை ஆசிரியை ஒருவர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் அந்த மாணவனின் தந்தைக்கு நேற்று தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்த அவர் நேற்று பகல் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் பள்ளிக்கு சென்றார்.
அங்கு மகனை அடித்த ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர்கள் திடீரென ஆசிரியையை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மேற்கு தாசில்தார் அருள்பிரகாஷ், மாவட்ட கல்வி அதிகாரி மோகன் ஆகியோரும் நடந்த சம்பவம் குறித்த பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் சக ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கரி வெங்கடேசன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
- நாகராஜ் என்பவருடன் மோகன சங்கரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சவுந்தர்யா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் மோகன சங்கரி (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மேல் பட்டப்ப டிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் வெங்கடேசன் (22) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடை வில் வெங்கடேசனின் நடவடி க்கை பிடிக்காததால் அவரிடமி ருந்து மோகனசங்கரி விலகி னார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த முருகேசன் மகன் நாகராஜ் என்பவருடன் மோகன சங்கரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அறிந்த வெங்கடேசன் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து நெட்டில் விட்டு விடுவேன் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மோகனசங்கரி கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.
- 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
- 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.
மன்னார்குடி:
மன்னார்குடி பான்செக்க ர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கடற்கரையோர பகுதிகளில் 1 கோடி பனை விதைக்கும் திட்டத்திற்காக பனை விதைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு நாட்டு நலப்பணி திட்ட குழுமம், தமிழ்நாடு பனை நல வாரியம் மற்றும் கிரீன் நீடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து கடலோர பகுதிகளில் 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் வருகிற 24-ந் தேதி 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு மன்னார்குடி பான்செக்க ர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்பரசி தலைமையில்,
மூவாநல்லூர், கண்டி தம்பேட்டை, விக்ரபாண்டி யம், மதுக்கூர், மேலவந்தா ன்சேரி, வடபாதி, சேரன்கு ளம், களப்பாள், கோட்டூர், ஆலங்கோட்டை, உள்ளி க்கோட்டை, ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்து மனோராவை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் நடவுள்ளனர்.
- சங்கர்குமார் பேர்பெரியான் குப்பம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
- எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த செடுத்தான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் சங்கர்குமார் (வயது 17). இவர் பேர்பெரியான் குப்பம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலப்பகுதிக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து பள்ளிக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவன் சங்கர்குமாரை பத்திரமாக மீட்டனர்.
- சதீஷ்வரன் (வயது14). இவர் செவ்வாய்ப்பேட்டை நகரவை ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- மாணவர் பள்ளி அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டம் கருமந்துறை பகுடுபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் சதீஷ்வரன் (வயது14). இவர் செவ்வாய்ப்பேட்டை நகரவை ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் பள்ளி அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். இந்த நிலையில் சதீஷ்வரன் இரவு துணிகளை துவைத்து மாடியில் காயவைத்துள்ளார். அதை எடுப்பதற்காக இன்று காலை 2-வது மாடிக்கு சென்று கீழே இறங்கும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் மாணவனுக்கு கால் முறிந்தது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு சக மாணவர்கள் பார்த்து மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி மாணவன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
- குற்றவாளியை கண்டுபிடிக்கக்கோரி மாணவனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வன். இவரது மகன் தர்ஷன் (வயது 12). இவர் தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை மாணவன் பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக சாலையை கடக்கும் போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வாய்மேடு போலீசார் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குற்றவாளியை கண்டு பிடிக்கக்கோரி உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் இன்று காலை திடீரென தகட்டூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தண்ணீர் குடித்து உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
- புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பரமக்குடி
பரமக்குடி அருகே பரமக்குடி அருகே எஸ்.அண்டக்குடி பஞ்சாயத்தில் மீனங்குடி கிராமம் உள்ளது. கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக நீர் தேக்க தொட்டி உள்ளது.
நேற்று குடிநீர் வினியோ கம் செய்யப்பட்ட நிலையில் அதனை குடித்த பள்ளி மாணவ மாணவிகள் திடீரென மயக்கம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் மயக்கமடைந்த மாணவ மாணவிகளை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மருத்துவ மனைக்கு வந்து மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து மருத்துவர்களை அழைத்து மாணவ மாணவிகளுக்கு தீவிரச் சிகிச்சை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் மீனங்குடி கிராமத்திற்கு சென்று பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் சேது கருணாநிதி, பரமக்குடி தாசில்தார் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் மீனங்குடி கிராமத்திற்கு சென்று அங்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை வாங்கி குடித்து ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைக்கு சென்று மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் கூறினார்.
- அரசு பள்ளி மாணவருக்கு உதவித்தொகையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- குடும்ப சூழ்நிலையால் புத்தகம், கல்வி கட்டணம் செலுத்த உதவுமாறு கோரிக்கை வைத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். அப்போது மகாலிங்கம் என்ற மாணவர் எம்.எல்.ஏ.வை சந்தித்து தான் நீட் தேர்வில் வெற்றி பெற்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது. குடும்ப சூழ்நிலையால் புத்தகம், கல்வி கட்டணம் செலுத்த உதவுமாறு கோரிக்கை வைத்தார். இதனை பரிசீலிப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.
இந்த நிலையில் நேற்று அந்த பள்ளிக்கு சென்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., மாணவர் மகாலிங்கத்தை சந்தித்து கல்வி உதவித்தொகையாக தனது ஒருமாத ஊதியம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை தங்கபாண்டியன்
எம்.எல்.ஏ. வழங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவர் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி கூறினார். அப்போது தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், சிறந்த முறையில் மருத்துவக்கல்வி பயின்று ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை ஆற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
மேலும் நீட் தேர்வு ரத்து செய்ய முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஷ்வரி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிர மணியன், செயல் அலுவலர் சந்திரகலா பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி மாரிச்செல்வம் , ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் மாணவரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
- தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
- சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு வந்தார்.
சென்னை:
செங்கல்பட்டைச் சேர்ந்தவர் ரித்திக். இவர் ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களோடு ஜார்ஜியாவில் தங்கி இருந்து படித்து வரும் ரித்திக் அந்நாட்டில் உள்ள மலை மற்றும் காட்டுப் பகுதிக்கு சென்று வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரித்திக் வழக்கம் போல காட்டுக்குள் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மாணவன் ரித்திக் மலைப்பகுதிக்கு சென்ற இடத்தில் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக ஜார்ஜியாவில் உள்ள ரித்திக்கின் நண்பர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரித்திக்கின் பெற்றோர் மகனின் நிலை என்ன ஆனது? என்பது தெரியாமல் கலங்கிப் போய் உள்ளனர்.
இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து முறையிட முடிவு செய்தனர்.
இதற்காக தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களது மகன் மாயமாகி 4 நாட்களுக்கு மேலாகியும் அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. எனவே, தமிழக அரசு அதிகாரிகள் எங்கள் மகனை கண்டுபிடித்து கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாணவர் ரித்திக்கின் தாய் கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதை தொடர்ந்து அவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரை அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இந்திய தூதரகம் மூலமாக ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளிடம் மாணவன் விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி கேட்டுள்ளோம். அங்கிருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தனர்.