என் மலர்
இந்தியா

ஒருதலைக் காதல்: ஆசிரியையை பெட்ரோல் ஊற்றி தீவைத்த மாணவன்..!
- 26 வயது ஆசிரியையை ஒருதலைபட்சமாக காதலித்துள்ளான்.
- ஆசிரியை புகார் அளித்ததால் வேறு பள்ளிக்கு மாறி படித்து வந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 26 வயது ஆசிரியையை ஒருதலையாக காதலித்த மாணவன், அந்த ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கபூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியில் 18 வயது மாணவன் சூர்யான்ஸ் கோச்சார் படித்து வந்துள்ளான். இதே பள்ளியில் 26 வயதான ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு, ஆசிரியை மீது அந்த மாணவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியையிடம், தாங்களை விரும்புவதாக தெரிவித்துள்ளான். ஆனால் ஆசிரியை அதை ஏற்கவில்லை. அந்த மாணவன் மீது புகார் அளித்ததாக தெரிகிறது. இதனால் அந்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு, மற்றொரு பள்ளியில் சேர்ந்துள்ளான்.
கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, அந்த ஆசிரியை சேலை அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவன் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். இதனால் அந்த ஆசிரியை புகார் அளித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த மாணவன், பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு நேராக அந்த ஆசிரியை வீட்டிற்கு சென்றுள்ளான்.
ஆசிரியை சுதாரிப்பதற்குள் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான். அருகில் உள்ளவர்கள் தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆசிரியை உடலில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதி செய்து அநத் மாணவனை கைது செய்துள்ளனர்.






