என் மலர்
நீங்கள் தேடியது "Enforcement Department"
- உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது.
- அமலாக்கத்துறை முடக்கிய ரூபாய் 34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களைக் கொடுத்து அதனை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
சென்னை:
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை மேலாளர் பி.கே.பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்கள் பணியை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு 12.12.2012 அன்று உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது.
அதற்குப் பிறகு 12ஏஏ, 80ஜி, சிஎஸ்.ஆர். அங்கீகாரமும் முறையாகப் பெறப்பட்டது. அறக்கட்டளை பதிவு செய்யப்பட்ட நாள் முதல் கல்வி, மருத்துவ உதவிகள், தானியங்கிக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம், அரசு குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள், அவசர ஊர்தி சேவை நடமாடும் நூலகம், மக்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு பூங்காக்கள் புதுப்பித்தல் போன்ற பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வருகிறது.
அறக்கட்டளை பெற்றுள்ள நன்கொடைகளின் விவரங்களையும், அறக்கட்டளையின் வாயிலாக நாங்கள் செய்துள்ள நலப்பணிகளுக்கான வரவு- செலவு கணக்குகளையும் முறையாக வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்து வருகின்றோம்.
அமலாக்கத்துறையின் டுவிட்டர் பக்கத்தில் 27.05.2023 அன்று வெளிவந்த பதிவு, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்ப டுகிறது. ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளைப் போல், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு, எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது.
மேலும் அமலாக்கத்துறையின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ரூபாய் 36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்திற்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்பொழுது அமலாக்கத்துறை முடக்கிய ரூபாய் 34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களைக் கொடுத்து அதனை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு களப்பணியாற்றுகிறது.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை என்றும் அறத்தின் வழி மட்டுமே நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 20-ந் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.
- சிவகுமார் தனது சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேவசம் போர்டு மந்திரியாக இருந்த வர் சிவகுமார்.
மந்திரி பதவியில் இருந்தபோது சிவகுமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சிவகுமார் வருகிற 20-ந் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.
அப்போது சிவகுமார் தனது சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.
இதே குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு சிவகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விகான் டைரக்ட் செல்லிங் இந்தியா என்கிற தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளனர்.
- சோதனையில் சுமார் 400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை:
பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வழிகளில் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மும்பை அமலாக்கத்துறையினர் விகான் டைரக்ட் செல்லிங் இந்தியா என்கிற தனியார் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
சென்னை, மும்பை, பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனங்களில் நடந்த சோதனையில் சுமார் 400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் 2 ஆயிரம் கோடி அளவுக்கு பண பரிமாற்றத்தத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 36 வங்கி கணக்குகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.
+2
- கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.
- சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்
நெல்லை:
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட மொத்தம் 45 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அமலாக்கத்துறை சோதனை
இதனையொட்டி நெல்லை மாநகர பகுதியில் அமலாக்கப்பிரிவு போலீசார்அதிரடி சோதனை நடத்தினர். இதற்காக மொத்தம் 2 குழுக்கள் இன்று அதிகாலை நெல்லை வந்தடைந்த நிலையில், அதில் ஒரு குழு மாநகர போலீஸ் அதிகாரிகளிடம் போலீஸ் பாதுகாப்பு கேட்டது.
அதன் அடிப்படையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பு அமலாக்கப்பிரிவினருக்கு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த குழு டவுன் கல்லணை தெருவில் உள்ள சதாம் உசேன் என்பவர் வீட்டில் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.
பண பரிமாற்றம்
இந்த சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சதாம் உசேன் நெல்லையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த குழுவில் சில அதிகாரிகள் பாளை ஆயுதப்படை பின்புறம் உள்ள பெருமாள்புரம் செயின்ட் பால்ஸ் நகரில் ராஜ்குமார் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அமலாக்கத்துறை யின் மற்றொரு குழுவானது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களில் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
- மற்ற மாநிலங்களிலும் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக நாடு முழுவதும் அமலாக்கத்துறை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்று சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடந்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களில் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதே போன்று மற்ற மாநிலங்களிலும் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 47 இடங்களை குறிவைத்து அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் இருந்து வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மண்டல அதிகாரிகளின் துணையுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
பிரபல கார் பைனான்சியர் ரமேஷ் டுக்கர் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.
நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள சசி டவர்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஏ பிளாக்கில் இரண்டாவது மாடியில் வசித்து வரும் பிரபல கார் பைனான்சியர் ரமேஷ் டுக்கர் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.
எழும்பூரில் உள்ள டுக்கர் பைனான்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
இன்று மாலை வரை சோதனை நடைபெறும் என்றும் அதன் பின்னரே அது தொடர்பாக விரிவான தகவல்களை அமலாக்கத்துறை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் சோதனை நடைபெறுவதாக வெளியான தகவலை அடுத்து அங்கு பத்திரிகை புகைப்படக்காரர்கள் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு சோதனை எதுவும் நடைபெறவில்லை என்று பின்னர் தெரிய வந்தது.
இதே போல் தற்போது அமைச்சராக இருக்கும் ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதையும் அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.
- காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது சம்மன் அனுப்பி 5 நாட்களாக 50 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை இப்போது வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
- கோடிக்கணக்கில் முறைகேடு செய்த அ.திமு.க.வினர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 10ஆண்டு காலமாக தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான முறைகேடு மூலம் முன்னாள் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்து உள்ளார்கள் என்பது தற்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதன் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
ஆனால் அவர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது வியப்பாக உள்ளது. காங்கிரஸ் கட்சி நடத்தும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வாங்கியது சம்பந்தமாக எந்த முறைகேடும் கண்டுபிடிக்க முடியாத நேரத்திலும்,முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலேயே காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது சம்மன் அனுப்பி 5 நாட்களாக 50 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை இப்போது வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கோடிக்கணக்கில் முறைகேடு செய்த அ.திமு.க.வினர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இல்லையேல் காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.
- நேஷனல் ஹெரால்டு சம்பந்தமாக ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக தஞ்சாவூர் ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர்:
நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை சம்பந்தமாக ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணைக்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக தஞ்சாவூர் ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட ஐ.என்.டி.யூ.சி பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவ ரையும் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பேராவூரணி சிங்காரம், மாநில துணைத்தலைவர் ராஜாதம்பி, மாவட்ட துணைத்தலைவர் வக்கீல்கோ.அன்பரசன், முன்னாள் மாநில துணை த்தலைவர் கலைச்செ ல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பி னர்கள் மகேந்திரன், குணா பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமநாத துளசியய்யா வாண்டையார், கண்டிதம்பட்டு கோவிந்த ராஜூ, மாவட்டஊடகப்பி ரிவுத்தலைவர் பிரபு மண்கொ ண்டார், வட்டா ரத்தலைவர் ரவிச்சந்திரன், சோழமண்டல சிவாஜி பாசறைத்தலைவர் சதா.வெங்கட்ராமன், மாவட்ட துணைத்தலைவர்கள் பட்டுக்கோட்டை ராமசாமி, கறம்பேயம் சக்திவேல், செந்தில் நா.பழனிவேல், பட்டுக்கோட்டை நகரத்த லைவர் ரவிக்குமார், பட்டுக்கோட்டை வைர க்கண்ணு, மாவட்ட பொது ச்செயலாளர் சீனியை ய்யா வாண்டையார், கதர் வெங்கடேசன், மாவட்ட மகளிர் காங்கிரஸ்செய லாளர் சசிகலா,வட்டார த்தலைவர்கள் நாராய ணசாமி, இப்ராஹிம்ஷா, கோவி செந்தில், ஐயப்பன், ரகுநாத் யோகா னந்தம், பிற்பட்டோர் நல மாவ ட்ட தலைவர் பிரபு சந்தோஷ்குமார், கதர் வெங்கடேசன், ஒரத்தநாடு சுப்பு தங்கராஜ், வரகூர் மீசை முருகன், இளைய பாரத், சித்திரக்குடி ஆண்டவர், இளைஞர் காங்கிரஸ் சம்பத், பின்னையூர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா(62) வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். தற்போது லண்டனில் தங்கியுள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், ஊடகங்களும் உரத்த குரலில் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் தவறானவை.
கடன் தொகையை செலுத்த கர்நாடக ஐகோர்ட்டு முன் ஒப்புக் கெண்டேன். அதன்பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனைஅளிக்கிறது. மக்களின் பணத்தில் இருந்து வங்கி கடனில் அசல் தொகையை முழுவதுமாக செலுத்த நான் இப்போதும் தயாராகவே இருக்கிறேன் என சமீபத்தில் விஜய் மல்லையா தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், தன்னை நிதி மோசடி செய்த தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்ககோரி மும்பை ஐகோர்ட்டில் விஜய் மல்லையா தனது வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விஜய் மல்லையாவின் கோரிக்கையின்படி மும்பை சிறப்பு நீதிமன்றம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தடை ஏதும் விதிக்கவில்லை. #SCnotice #EDnotice #Mallya #VijayMallya
கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கானா மாநில எம்.எல்.சி. (மேலவை) தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஓட்டுப் போட நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன் சன்னிடம் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரூ. 5 கோடி பேரம் பேசி ரூ.50 லட்சம் முன் பணம் கொடுத்த வீடியோ வெளியானது.
மேலும் ஸ்டீபன் சென்னிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேனில் பேசியதாக ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே ரேவந்த்ரெட்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவந்த்ரெட்டி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு சேர்ந்தார்.
இந்த நிலையில் ரேவந்த் ரெட்டியின் ஐதராபாத் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதேபோல் அவரது தொகுதியில் உள்ள வீட்டிலும், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
ஏர்செல் நிறுவனத்தில், 2006-ம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் என்ற வெளிநாட்டு நிறுவனம் 800 மில்லியன் டாலர் (அப்போதைய மதிப்பில் சுமார் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக) முதலீடு செய்வதற்கு எப்.ஐ.பி.பி. என்னும் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்தது.
ஆனால் ரூ.600 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டும்தான் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தர முடியும். அதற்கு அதிகமான முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுதான் ஒப்புதல் தர முடியும்.
ஆனால் சட்டத்தை மீறி, ஏர்செல் நிறுவனத்தில் குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக முதலீடு செய்ய ஒப்புதல் தரப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்தது.
2006-ம் ஆண்டு இந்த ஒப்புதல் தரப்பட்டபோது, மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார்.
இந்த நிலையில் சட்டத்தை மீறி ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கியது எப்படி என்பது பற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. சி.பி.ஐ. வழக்கின் அடிப்படையில், அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கு இடையே ஏர்செல்-மேக்சிஸ் உள்ளிட்ட 2 ‘ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் சந்தேகப்பார்வை விழுந்து உள்ளது. இது தொடர்பாக அவரை கடந்த ஜூன் மாதம் வரவழைத்து, பல மணி நேரம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது என்ன நடந்தது என்பது வெளியிடப்படவில்லை.
இருப்பினும் இது பற்றி ப.சிதம்பரம் அப்போது டுவிட்டரில் பதிவிடுகையில், “பாதிக்கு மேற்பட்ட நேரம் கேள்விகளுக்கான பதில்களை பிழையின்றி (கணினியில்) ‘டைப்’ செய்வதிலும், படித்துக்காட்டி அதில் கையெழுத்து பெறுவதிலும் கழிந்தது” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் நேற்று மீண்டும் வரவழைத்தது. அவர் டெல்லியில் உள்ள அந்த அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே இந்த விவகாரத்தில், வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ப.சிதம்பரத்திடம் கேள்விகள் எழுப்பி பதில்கள் பெறப்பட்டதாகவும் தெரிய வந்து உள்ளது. #AircelMaxisCase